துசியோனைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துசியோனைட்டு
பொதுவானாவை
வகைபோரேட்டு கனிமம்
வேதி வாய்பாடுMnSn(BO3)2
இனங்காணல்
நிறம்நிறமற்றது.இளமஞ்சள் நிறத்தில் இருந்து மஞ்சள் கலந்த பழுப்பு
படிக இயல்புமெல்லிய தகடு அடுக்குப் படிகம்
படிக அமைப்புமுக்கோணம்
பிளப்பு[001] முழுமை
மோவின் அளவுகோல் வலிமை5-6
மிளிர்வுகண்ணாடித் தன்மை
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிகசிவு
ஒப்படர்த்தி4.73
ஒளியியல் பண்புகள்ஓரச்சு (-)
ஒளிவிலகல் எண்nω = 1.854 nε = 1.752
இரட்டை ஒளிவிலகல்δ = 0.102
மேற்கோள்கள்[1][2][3]

துசியோனைட்டு (Tusionite) என்பது MnSn(BO3)2 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட முக்கோண வடிவமைப்பிலான போரேட்டு கனிமமாகும். நிறமற்ற நிலையில் இருந்து இக்கனிமம் அரிதாக ஒளிபுகும் தன்மையுடையதாகவும், ஒளி கசியும் தன்மையும் உடைய மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்துடனும் இருக்கிறது. 18.86% மாங்கனீசு, 40.76% வெள்ளீயம், 7.42% போரான் மற்றும் 32.96% ஆக்சிசன் என்பது இக்கனிமத்தின் இயைபு ஆகும். வெப்பநீர்ம தாதுவின் இறுதிக்கட்ட நிலையில் உள்ள கனிமமாக காணப்படும் துசியோனைட்டு, கிரானைட் வகை தீப்பாறைகளில் காணப்படும் ஒழுங்கற்ற குழிகளில் அரிதாக காணப்படுகிறது.

துசியோனைட்டு அது கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் பெயராலேயே அழைக்கப்படுகிறது. மத்திய ஆசியாவின் தஜிகிஸ்தானில் உள்ள மலைத்தொடரான பாமிர் மலைகளில் காணப்படுகின்ற துசியான் ஆற்றுப் பள்ளத்தாக்கில் முதன்முதலாக 1983 ஆம் ஆண்டில் இது கண்டறியப்பட்டுள்ளது. செக் குடியரசு நாட்டின் சில பகுதிகளிலும், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் ரிவர்சைடு மாவட்டத்திலும் துசியோனைட்டு காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துசியோனைட்டு&oldid=2221799" இருந்து மீள்விக்கப்பட்டது