துசார் கபூர்
துசார் ரவி கபூர் (Tusshar Ravi Kapoor பிறப்பு: 20 நவம்பர் 1976) ஓர் இந்திய நடிகரும் தயாரிப்பாளரும் ஆவார்.
ஆரம்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]
துசார் ரவி கபூர், நடிகர் ஜிதேந்திரா மற்றும் ஷோபா கபூரின் மகன் ஆவார். இவரது மூத்த சகோதரி ஏக்தா கபூர் ஒரு தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர், அபிசேக் பச்சனுடன் உடன்பயின்றார்.[1] பின்னர் ஆன் ஆர்பரில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஸ்டீபன் எம். ரோஸ் வணிகப் பள்ளியில் பிபிஏ பட்டம் பயின்றார்.
இவரது தந்தையைப் போலவே, துசார் கபூரும் நிசிரன் புத்த மதத்தைப் பின்பற்றுபவர்.[2][3]
தொழில் வாழ்க்கை
[தொகு]
ஒரு நடிகராக அறிமுகமாவதற்கு முன்பு, கபூர் திரைப்பட இயக்குநர் டேவிட் தவானிடம் உதவியாளராகப் பணியாற்றினார். இதைத் தொடர்ந்து, ரோசன் தனேஜா, மகேந்திர வர்மா ஆகியோருடன் ஒரு நடிகராகவும், அவர்களின் நடிப்புப் பள்ளியிலும், நிமேஷ் பட்டுடன் நடனத்திலும் பயிற்சி பெற்றார்.[4][5]
2001 ஆம் ஆண்டில் குஜராத்தைச் சேர்ந்த நண்பர் தர்மன்சூ பர்மர் என்ற மாண்டியின் வழிகாட்டுதலின் கீழ் கரீனா கபூருடன் இணைந்து தெலுங்கில் பெற்றி பெற்ற திரைப்படமான தொலிப்ரேமவின் மறுஆக்கமான முஜே குச் கெஹ்னா ஹை என்ற வெற்றிப் படத்தில் அறிமுகமானார்.[6] இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக ஆண் நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார். பின்னர் ஈஷா தியோலுடன் க்யா தில் நே கஹா என்ற திரைப்படத்தில் ராகுலாக நடித்தார்.[7]
வலைத் தொடர்கள்
[தொகு]| ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | குறிப்புகள் |
|---|---|---|---|
| 2019 | பூ சப்கி ஃபாடேஜி | கோபால் | ஏஎல்டி பாலாஜி தொடர் |
| 2023 | பாப் கான்? | கேமியோ | டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தொடர் |
| 2024-2025 | தாஸ் ஜூன் கி ராத் | பனவுடி | ஜியோ சினிமா தொடர் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tusshar Kapoor shares Abhishek Bachchan's picture on Friendship Day". The Times of India. 4 August 2015. Archived from the original on 26 December 2015. Retrieved 12 November 2015.
- ↑ Tusshar Kapoor: "I am a follower of Nichiren Buddhism so I...". Bollywood Hungama. 5 June 2018. Archived from the original on 30 November 2021 – via YouTube.
- ↑ "Tusshar Kapoor opens up on Buddhism and fatherhood - Times of India". The Times of India. Archived from the original on 11 October 2020. Retrieved 17 September 2020.
- ↑ "A star arrives in style". The Hindu. Archived from the original on 25 February 2005. Retrieved 27 September 2015.
- ↑ "'Kya Kool Hain Hum 3' banned by Censor Board" இம் மூலத்தில் இருந்து 22 January 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160122185443/http://www.deccanchronicle.com/151008/entertainment-bollywood/article/kya-kool-hain-hum-3-banned-censor-board.
- ↑ "Satish Kaushik: Ruslaan fits TEREE SANG just as Tusshar did in MKKH - bollywood news : glamsham.com". www.glamsham.com (in ஆங்கிலம்). Archived from the original on 27 October 2017. Retrieved 2017-10-27.
- ↑ "Dinesh Hingoo - Latest Photos, Videos, News - Bollywood Hungama" (in en-US) இம் மூலத்தில் இருந்து 14 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171014205643/http://www.bollywoodhungama.com/celebrity/dinesh-hingoo/.