உள்ளடக்கத்துக்குச் செல்

துங்கு மூன்றாம் அமைச்சரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துங்கு மூன்றாம் அமைச்சரவை
Third Rahman Cabinet
Kabinet Rahman Ketiga

1959-1963
மக்களும் அமைப்புகளும்
அரசுத் தலைவர்துங்கு அப்துல் ரகுமான்
துணை அரசுத் தலைவர்அப்துல் ரசாக் உசேன்
நாட்டுத் தலைவர்துவாங்கு சையது புத்ரா (1964–1965)
திராங்கானு சுல்தான் இசுமாயில் நசிருதீன் (1965–1969)
சட்ட மன்றத்தில் நிலைகூட்டணி அரசு
எதிர்க்கட்சித் தலைவர்டான் சி கூன்
வரலாறு
தேர்தல்(கள்)மலேசியப் பொதுத் தேர்தல், 1964
Outgoing electionமலேசியப் பொதுத் தேர்தல், 1969
Legislature term(s)இரண்டாவது மக்களவை 1964–1969
முந்தையதுங்கு இரண்டாம் அமைச்சரவை
அடுத்ததுங்கு நான்காம் அமைச்சரவை

துங்கு மூன்றாம் அமைச்சரவை (மலாய்: Kabinet Rahman Ketiga; ஆங்கிலம்: Third Rahman Cabinet; சீனம்: 第三次拉曼内阁); என்பது மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான்[1] தலைமையிலான மூன்றாவது அமைச்சரவை ஆகும்.[2]

மலேசியாவில் 1964 மலேசியப் பொதுத் தேர்தல் 1964 ஏப்ரல் 25-இல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து புதிய அரசாங்கத்தை அமைக்க பெர்லிஸ் புத்ரா துவாங்கு சையத் புத்ராவால் அழைப்பு விடுத்தார். அதன் பின்னர், துங்கு அப்துல் ரகுமான் மூன்றாவது துங்கு அமைச்சரவையை அமைத்தார். தேர்தலுக்கு முன்பு, துங்கு முதலாம் அமைச்சரவையை துங்கு அப்துல் ரகுமான் வழிநடத்தினார்.

இந்த மூன்றாம் அமைச்சரவை, மலேசிய விடுதலைக்குப் பின்னர், கூட்டணியின் கூறு கட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்ட கூட்டணி அரசாங்கத்தினால், மலேசியாவில் உருவாக்கப்பட்ட 3-ஆவது அமைச்சரவை இதுவாகும்.

இதற்கு முன்னர் மலாயாவின் முதலாவது பிரதமராக துங்கு அப்துல் ரகுமான் நியமிக்கப்பட்டதும், 1955 ஆகஸ்டு 1-ஆம் தேதி, மலாயாவின் முதலாவது அமைச்சரவை அறிவிக்கப்பட்டது. 1955-ஆம் ஆண்டு மலாயா பொதுத் தேர்தலை தொடர்ந்து துங்கு அப்துல் ரகுமான் ஒரு புதிய அரசாங்கத்தை அமைத்தார். இந்த அமைச்சரவை அவர் அமைத்த மூன்றாம் அமைச்சரவை ஆகும்.

மூன்றாம் அமைச்சரவையின் அமைச்சர்கள்

[தொகு]

மலேசியாவின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரகுமானின் மூன்றாம் அமைச்சரவையின் உறுப்பினர்கள் பட்டியல்:

அமைச்சு அமைச்சர் கட்சி தொகுதி
மலேசியப் பிரதமர் துறை துங்கு அப்துல் ரகுமான் MP அம்னோ கோலா கெடா
மலேசிய வெளியுறவு அமைச்சு
மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சு
மலேசிய துணைப் பிரதமர் துறை அப்துல் ரசாக் உசேன் அம்னோ பெக்கான் மக்களவைத் தொகுதி
மலேசிய தற்காப்பு அமைச்சு
மலேசிய ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி அமைச்சு
மலேசிய இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு
மலேசிய உள்துறை அமைச்சு இசுமாயில் அப்துல் ரகுமான் அம்னோ ஜொகூர் தீமோர்
மலேசிய நிதி அமைச்சு
மலேசிய நிதி அமைச்சு டான் சியூ சின் மசீச மலாக்கா தெங்கா
மலேசிய பொதுப் பணி அமைச்சு வீ. தி. சம்பந்தன்

மஇகா

சுங்கை சிப்புட் மக்களவைத் தொகுதி
மலேசிய போக்குவரத்து அமைச்சு சார்டோன் சூபீர் அம்னோ பொந்தியான் மக்களவைத் தொகுதி
மலேசிய வேளாண் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அமைச்சு கிர் ஜொகாரி அம்னோ கோலா கெடா மக்களவைத் தொகுதி
மலேசிய சுகாதார அமைச்சு பகமான் சம்சுடின் அம்னோ கோலா பிலா
மலேசிய கல்வி அமைச்சு அப்துல் ரகுமான் தாலிப் அம்னோ குவாந்தான்
மலேசிய முதலீடு, வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சு லிம் சுவீ ஆன் மசீச லாருட் மக்களவைத் தொகுதி
மலேசிய மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு அமீட் அப்துல் கான் \ அம்னோ பத்தாங் பாடாங் மாவட்டம்
மலேசிய வீடமைப்பு உள்ளூராட்சி காவ் காய் போ MP மசீச உலு சிலாங்கூர் மக்களவைத் தொகுதி
சரவாக் விவகாரங்கள் அமைச்சு ஜுகா அனாக் பாரியாங் பெசாக்கா
மலேசிய மனிதவள அமைச்சு வி. மாணிக்கவாசகம் மஇகா கிள்ளான் துறைமுகம்
மலேசிய தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு செனு அப்துல் ரகுமான் அம்னோ குபாங் பாசு மக்களவைத் தொகுதி
மலேசியப் பிரதமர் துறை அமைச்சு செனட்டர் ஓங் யோக் லின் மசீச

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Abdul Rahman Putra Alhaj, Tunku". Encyclopædia Britannica (15th) I: A-ak Bayes. (2010). Chicago, Illinois: Encyclopædia Britannica Inc.. 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59339-837-8. 
  2. "Parliament of Malaysia". parlimen.gov. Retrieved 12 October 2025.

வெளி இணைப்புகள்

[தொகு]