உள்ளடக்கத்துக்குச் செல்

துங்கு அப்துல் ரகுமான் தேசிய பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துங்கு அப்துல் ரகுமான் பூங்கா
Tunku Abdul Rahman National Park
Taman Negara Tunku Abdul Rahman
சுலுக் தீவு, மமுத்திக் தீவு, மனுக்கான் தீவு
Map showing the location of துங்கு அப்துல் ரகுமான் பூங்கா  Tunku Abdul Rahman National Park  Taman Negara Tunku Abdul Rahman
Map showing the location of துங்கு அப்துல் ரகுமான் பூங்கா  .mw-parser-output .nobold{font-weight:normal}Tunku Abdul Rahman National Park  .mw-parser-output .nobold{font-weight:normal}Taman Negara Tunku Abdul Rahman
துங்கு அப்துல் ரகுமான் பூங்கா
போர்னியோவில் அமைவிடம்
அமைவிடம்சபா, மலேசியா
அருகாமை நகரம்கோத்தா கினபாலு
ஆள்கூறுகள்5°58′N 116°0′E / 5.967°N 116.000°E / 5.967; 116.000
பரப்பளவு49 km2 (19 sq mi)
நிறுவப்பட்டது1974
நிருவாக அமைப்புசபா பூங்காக்கள்

துங்கு அப்துல் ரகுமான் தேசிய பூங்கா (மலாய்: Taman Negara Tunku Abdul Rahman; ஆங்கிலம்: Tunku Abdul Rahman National Park) என்பது மலேசியா, சபா மாநிலத்தில், கோத்தா கினபாலு கடற்கரையிலிருந்து 3 முதல் 8 கி.மீ தொலைவில் காயா வளைகுடாவில் அமைந்துள்ள ஐந்து தீவுகளை உள்ளடக்கிய ஒரு கடல்சார் தேசிய பூங்காவாகும். மலேசியாவின் முதலாவது பிரதமரான துங்கு அப்துல் ரகுமானின் நினைவாக இந்தப் பூங்காவிற்குப் பெயரிடப்பட்டது.

1974-ஆம் ஆண்டில் சபாவின் இரண்டாவது தேசிய பூங்காவாக இந்தப் பூங்கா முறைப்படி அறிவிக்கப்பட்டது. இதன் மொத்தப் பரப்பளவு 4,929 எக்டேர் (சுமார் 50 சதுர கிமீ). அதில் மூன்றில் இரண்டு பங்கு கடல் பகுதியில் உள்ளது.. இப்பகுதியில் உள்ள விலங்கினங்கள், தாவரங்கள் மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பதுதான் இந்தப் பூங்காவின் முக்கிய நோக்கம் ஆகும்.

புவியியல்

[தொகு]

புவியியல் அடிப்படையில், இந்தத் தீவுகள் போர்னியோ பெருநிலப் பகுதியில் உள்ள குரோக்கர் மலைத்தொடரின் (Crocker Range) ஒரு பகுதியாக இருந்தன.[1][2] இருப்பினும், சுமார் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பனி யுகத்தின் முடிவில், பனி உருகி கடல் மட்டம் உயர்ந்ததால், அவை பெருநிலப் பரப்பிலிருந்து பிரிக்கப்பட்டன; தீவுகளாக உருவெடுத்தன. இத்தீவுகளின் கடற்கரைகளில் காணப்படும் மணல் பாறைகள், கடல் குகைகள் மற்றும் பாறை வெடிப்புகள் இதற்குச் சான்றாக அமைகின்றன.[3]

ஐந்து தீவுகள்

[தொகு]

இந்தப் பூங்காவில் உள்ள ஐந்து தீவுகளின் பெயர்களும்; அவற்றின் வரலாறு மற்றும் அவற்றின் தொடக்ககால கண்டுபிடிப்புகளின் அடையாளமாக விளங்குகின்றன.

  • காயா தீவு (Pulau Gaya): பூங்காவின் மிகப்பெரிய தீவு (15 சதுர கி.மீ). 'காயா' என்றால் மலாய் மொழியில் 'பெரியது' என்று பொருள்.[4]
  • மனுக்கான் தீவு (Pulau Manukan): பூங்காவின் இரண்டாவது பெரிய தீவு.[5] 'மனுக்கான்' என்றால் 'மீன்' என்று பொருள். இது சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான தீவு; மற்றும் நவீன வசதிகளைக் கொண்ட தீவாகும்
  • மாமுத்திக் தீவு (Pulau Mamutik): 'சிப்பிகளை சேகரிக்கும் இடம்' என்று பொருள்படும் இத்தீவு, அளவில் சிறியதாக இருந்தாலும் சிறந்த கடற்கரைகளைக் கொண்டுள்ளது.
  • சாபி தீவு (Pulau Sapi): காட்டு எருமையின் ஒலி என்ற பொருளில் பெயரிடப்பட்ட இத்தீவு, பவளப் பாறைகள் மற்றும் நீர்விளையாட்டுகளுக்குப் புகழ்பெற்றது
  • சுலுக் தீவு (Pulau Sulug): சபாவின் சுலுக் மக்களின் வம்சாவளியை நினைவுகூரும் வகையில் பெயரிடப்பட்டது. இது பூங்காவின் தொலைதூர மற்றும் மனித நடமாட்டம் அதிகம் இல்லாத அமைதியான தீவாகும்.[6]

சுற்றுலா மற்றும் நிர்வாகம்

[தொகு]

இப்பூங்கா சபா மாநில பூங்காக்கள் துறை எனும் வாரியத்தால்[7] (Sabah Parks) நிர்வகிக்கப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கடல்வாழ் உயிரினங்களைக் கண்டு களிப்பதற்கும், இசுகூபா மூழ்கல் (Scuba Diving), நீரடி மூச்சுக்குழல் நீச்சல் (Snorkelling); மற்றும் கடற்கரை பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதற்கும் ஜெசல்டன் படகு முனையத்திலிருந்து படகுகள் மூலம் இத்தீவுகளை அடைகின்றனர்.

தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்

[தொகு]

இப்பூங்காவில் நிலம் மற்றும் கடல் சார்ந்த அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன:

  • நிலப்பரப்பு உயிரினங்கள்: கயா தீவின் அடர்ந்த வெப்பமண்டலக் காடுகளில் இருவாயன் வகையைச் சேர்ந்த பலத்தொண்டை நாகணவாய் பறவைகள் (Pied Hornbills), காட்டுப்பன்றிகள், பல்லிகள் மற்றும் அரிய வகை மக்காக்கு குரங்குகள் (Macaques) காணப்படுகின்றன.
  • திமிங்கல சுறாக்கள் (Whale Shark): பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான காலங்களில், கடலில் மிதவை உயிரினங்கள் (Plankton) அதிகமாக இருக்கும்போது, உலகின் மிகப்பெரிய மீன் இனமான திமிங்கல சுறாக்கள் இப்பூங்காவின் கடல் பகுதியில் உணவிற்காக வருகின்றன.
  • பவளப்பாறைகள் (Coral Reefs): இங்குள்ள ஆழமற்ற கடல் பகுதிகளில் நூற்றுக்கணக்கான பவளப் பாறை வகைகள் மற்றும் கோமாளி மீன்கள் (Clownfish), கடலாமைகள் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் செழித்து வளர்கின்றன.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்

[தொகு]
  1. ↑ Sheldon, Frederick Halsey; Moyle, Robert G.; Kennard, Jody (2001). Ornithology of Sabah: history, gazetteer, annotated checklist, and bibliography. American Ornithologists' Union. p. 225. ISBN 978-1-891276-24-8.
  2. ↑ Durand, Frédéric; Curtis, Richard (28 February 2014). Maps of Malaysia and Borneo: Discovery, Statehood and Progress. Editions Didier Millet. p. 180. ISBN 978-967-10617-3-2.
  3. ↑ "Crocker Mountains [Data Zone MY020]". BirdLife International. 2003. Retrieved 27 May 2019.
  4. ↑ Sokial, Sandra (5 March 2025). "Feathered treasures of Pulau Gaya". The Star இம் மூலத்தில் இருந்து 8 September 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250908123011/https://www.thestar.com.my/news/nation/2025/03/05/feathered-treasures-of-pulau-gaya.
  5. ↑ Ruben Sario (16 June 2014). "Cluster of islands in Sabah presents itself as an eco-tourism paradise". The Star. Retrieved 1 November 2017.
  6. ↑ "Sulug Island". beautifulKK.com. Retrieved 6 November 2013.
  7. ↑ ""a conservation-based statutory body established in 1964 with the purpose of conserving the scenic, scientific and historic heritage of the state of Sabah, Malaysia, on the island of Borneo"". Sabah Parks. Retrieved 30 July 2026.

நூல்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]