துக்ளகாபாத் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துக்ளகாபாத் கோட்டை(Tughlaqabad Fort) டெல்லியில் உள்ள ஒரு பாழடைந்த கோட்டையாகும்.இது 1321 ஆம் ஆண்டில் இந்தியாவின் டெல்லி சுல்தானகத்தின் துக்ளக் வம்சத்தின் நிறுவனர் கியாஸ்-உத்-தின் துக்ளக் என்பவர் நான்காவது வரலாற்று நகரமான டெல்லியை நிறுவியபோது இது கட்டப்பட்டது. பின்னர் 1327 இல் இக்கோட்டை கைவிடப்பட்டது. இது அதன் பெயரை அருகிலுள்ள துக்ளகாபாத் குடியிருப்பு-வணிக பகுதி மற்றும் துக்ளகாபாத் நிறுவன பகுதிக்கு வழங்குகிறது. புதிய நகரத்தை பெரும் தலைநெடுஞ்சாலையுடன் இணைக்கும் குதுப் - பதர்பூர் சாலையையும் துக்ளக் கட்டினார். இந்த சாலை இப்போது மெக்ராலி-பதர்பூர் சாலை என்று அழைக்கப்படுகிறது . [1] இந்தியர்களுக்கு கோட்டையின் நுழைவு கட்டணம் ரூ. 20 வசூலிக்கப்படுகிறது. [2] மேலும், அருகிலேயே முனைவர் கர்ணி சிங் சுடுதல் வெளி மற்றும் ஓக்லா தொழில்துறை பகுதியும் உள்ளது.

வரலாறு[தொகு]

1949 ஆம் ஆண்டின் பின்னணியில் கியாஸ்-உத்-தின் கல்லறையுடன் துக்ளகாபாத் கோட்டையின் இடிபாடுகள்

காசி மாலிக் இந்தியாவின் டெல்லியின் கில்ஜி ஆட்சியாளர்களின் நிலப்பிரபுத்துவமாக இருந்தார். ஒருமுறை தனது கில்ஜி அரசருடன் நடைபயிற்சி மேற்கொண்டபோது, காசி மாலிக், தில்லியின் தெற்குப் பகுதியில் ஒரு மலையடிவாரத்தில் ஒரு கோட்டையைக் கட்டுமாறு ராஜா பரிந்துரைத்தார். ராஜா நகைச்சுவையாக காசி மாலிக் ராஜாவாகும்போது கோட்டையை அவரே கட்டும்படி கூறினார்.   [ மேற்கோள் தேவை ] 1321 ஆம் ஆண்டில், காசி மாலிக் கில்ஜிகளை விரட்டியடித்தார். கியாஸ்-உத்-தின் துக்ளக் என்ற பட்டத்தையும் ஏற்றுக்கொண்டு துக்ளக் வம்சத்தைத் தொடங்கினார். அவர் உடனடியாக தனது கற்பனை நகரத்தை நிர்மாணிக்கத் தொடங்கினார். மங்கோலிய கொள்ளையர்களைத் தவிர்ப்பதற்கு ஒரு அசைக்க முடியாத, ஆனால் அழகான கோட்டையாக அவர் கனவு கண்டார். இருப்பினும், அவர் விரும்பியபடி விதி இருக்கவில்லை.   [ மேற்கோள் தேவை ]

நிஜாமுதீன் ஆலியாவின் சாபம்[தொகு]

கியாஸ்-உத்-தின் பொதுவாக ஒரு தாராளவாத ஆட்சியாளராக கருதப்படுகிறார். இருப்பினும், அவர் தனது கனவுக் கோட்டை மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். டெல்லியில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் தனது கோட்டையில் வேலை செய்ய வேண்டும் என்று ஒரு ஆணையை வெளியிட்டார். புனித நிஜாமுதீன் ஆலியா, ஒரு சூபி மாயக்காரர், அவரது பாவ்லி (கிணறு) வேலைகள் நிறுத்தப்பட்டதால் கோபமடைந்தார். சூபி துறவிக்கும் சக்கரவர்த்திக்கும் இடையிலான மோதல் இந்தியாவில் ஒரு புராணக்கதையாகிவிட்டது. புனிதர் ஒரு சாபத்தை அளித்தாகவும் இது இன்று வரை வரலாறு முழுவதும் எதிரொலிக்கிறது எனக்கூறபடுகிறது. [ மேற்கோள் தேவை ]

ஆட்சியாளரின் மரணம்[தொகு]

துறவியின் சாபங்களில் இன்னொன்று ஹுனுஸ் தில்லி துர் அஸ்ட் (டெல்லி இன்னும் தொலைவில் உள்ளது). இந்த நேரத்தில் பேரரசர் வங்கத்தில் ஒரு முற்ருகையில் இருந்தார். அவர் வெற்றி பெற்று டெல்லிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். இருப்பினும், அவரது மகன் முகம்மது பின் துக்ளக் அவரை உத்தரப்பிரதேச காராவில் சந்தித்தார். இளவரசரின் உத்தரவின் பேரில், ஒரு சாமியானா ( கூடாரம் ) பேரரசர் மீது விழுந்து, அவர் நசுக்கப்பட்டார் (1324).

கியாஸ் உத்-தின் துக்ளக்கின் கல்லறை[தொகு]

துக்ளகாபாத்தில் உள்ள கியாத் அல்-தின் துக்ளக்கின் கல்லறை, பக்க கல்லறை காட்டுகிறது.

"கியாத் அல்-தின் துக்ளக்கின் கல்லறை" கோட்டையின் தெற்கு புறக்காவல் வழியாக ஒரு உயரமான பாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. 600 அடி நீளமுள்ள இந்த உயரமான பாலம், 27 வளைவுகளால் இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு முன்னாள் செயற்கை ஏரியின் குறுக்கே செல்கிறது. இருப்பினும் 20ஆம் நூற்றாண்டில் பலத்தின் ஒரு பகுதி மெஹ்ராலி-பதர்பூர் சாலையால் ஊடுருவியுள்ளது. [3] ஒரு பழைய அரச மரத்தை கடந்து சென்ற பிறகு, கியாத் அல்-தின் துக்ளக்கின் கல்லறையின் வளாகம் சிவப்பு மணற்கற்களால் ஆன உயரமான நுழைவாயிலால் அமைந்துள்ளது.   [ மேற்கோள் தேவை ] உண்மையான கல்லறை ஒற்றை-குவிமாடம் கொண்ட சதுர கல்லறை (சுமார் 8 மீ x8 மீ) சாய்வான சுவர்களைக் கொண்டுள்ளது. கருங்கல்லால் ஆன கோட்டையின் சுவர்களுக்கு மாறாக, கல்லறையின் பக்கங்களும் மென்மையான சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்டுள்ளன. கதவுகள் பளிங்குகளில் பொறிக்கப்பட்டு வளைவு எல்லைகளுடன் பதிக்கப்பட்டுள்ளன. பளிங்கு மற்றும் கற்பலகையின் வெள்ளை அடுக்குகளால் மூடப்பட்டு எண்கோணத்தில் அமைந்திருக்கும் ஒரு நேர்த்தியான குவிமாடம் இந்த மாளிகையில் முதலிடம் வகிக்கிறது.   [ மேற்கோள் தேவை ]

கல்லறையின் உள்ளே

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Delhi and its Neighbourhood. https://archive.org/details/delhiitsneighbou00shar. 
  2. "Tughlaqabad Fort, Delhi Overview and Info".
  3. "Modernity pierces fort link". Hindustan Times. 9 September 2012. Archived from the original on 31 October 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-09-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துக்ளகாபாத்_கோட்டை&oldid=2884414" இலிருந்து மீள்விக்கப்பட்டது