உள்ளடக்கத்துக்குச் செல்

துகள் சிதைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துகள் சிதைவு அல்லது துகள் தேய்வு என்பது துகள் இயற்பியல் ஒரு நிலையற்ற துணை அணுத் துகளானது பல பிற துகள்களாக மாறும் தன்னிச்சையான செயன்முறை ஆகும். இந்த செயற்பாட்டில் உருவாக்கப்பட்ட துகள்கள் (இறுதி நிலை) ஒவ்வொன்றும் ஆரம்ப துகளை விட குறைவான திணிவைக் கொண்டிருப்பதுடன் தொகுதியின் மொத்த திணிவு காக்கப்பட்டிருக்க வேண்டும்.[1] ஒரு துகள் சிதைவடையக்கூடிய வகையில் குறைந்தபட்சம் ஒரு அனுமதிக்கப்பட்ட இறுதி நிலை இருந்தால் அத் துகள் நிலையற்றது எனப்படும். நிலையற்ற துகள்கள் பெரும்பாலும் சிதைவடையக்கூடிய பல வழிகளைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு வழிகளுக்கும் அதனுடன் தொடர்புடைய நிகழ்தகவும் இருக்கும். துகள் சிதைவுகள் ஒன்று அல்லது பல அடிப்படை விசைகளால் ஒத்திசைவு செய்யப்படுகின்றன. இறுதி நிலையில் உள்ள துகள்கள் நிலையற்றதாக இருக்கக்கூடிய அதேவேளை மேலும் சிதைவடையக்கூடியதாகவும் இருக்கலாம்.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Thomson, Mark (2013). Modern Particle Physics. Cambridge: Cambridge University Press. ISBN 978-1-107-03426-6.

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=துகள்_சிதைவு&oldid=4185532" இலிருந்து மீள்விக்கப்பட்டது