தீ எறும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீ எறும்பு
Fire ants 01.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலி
வகுப்பு: பூச்சி
வரிசை: Hymenoptera
குடும்பம்: Formicidae
துணைக்குடும்பம்: Myrmicinae
சிற்றினம்: Solenopsidini
பேரினம்: Solenopsis
Westwood, 1840
இனங்கள்

S. conjurata
S. daguerrei
S. fugax
S. invicta
S. molesta
S. richteri
S. solenopsidis
S. wagneri
S. xyloni
 Many more, see text

தீ எறும்பு எனப்படுபவை உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு எறும்பு வகையாகும். இவை அதிகமாக அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் காணப்படுகின்றன.

பண்புகள்[தொகு]

இவை மற்ற றும்புகளைப்போல் கடிக்கும் தன்மையுடையவை அல்ல; மாறாக தேனியைப் போல கொட்டும் தன்மை உடையவையாகும். அத்துடன் கொட்டும் போது விசத்தையும் பாய்ச்சி விடுகின்றன. இந்தவகை எறும்புகள் கொட்ட ஆரம்பித்து விட்டால் தொடர்ந்து கொட்டிக்கொண்டே இருக்கும். நூற்றுக்கணக்கான எறும்புகள் சேர்ந்து இவ்வாறு கொட்டும் போது தாக்கத்திற்கு உள்ளானவருக்கு உயிராபத்து ஏற்படவும் வாய்ப்புண்டு.

அச்சுறுத்தல்கள்[தொகு]

கிராமப்புறத்தில் நிலத்தில் வாழும் புழு, பூச்சி மற்றும் ஊர்வன போன்ற உயிரினங்களுக்கு இவை பெரும் அச்சுறுத்தலாய் உள்ளன. நகர்ப் புறங்களிலும் இவை வீடுகள் மற்றும் அலுவலகங்களில் புற்றுக்களை அமைத்து வாழ்வதால் பலரும் இதற்கு அச்சமடைந்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சாரதிகளை கொட்டுவதால் வாகன விபத்துக்களும் ஏற்படுகின்றன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீ_எறும்பு&oldid=2971175" இருந்து மீள்விக்கப்பட்டது