உள்ளடக்கத்துக்குச் செல்

தீ. கு. நரேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தீகே குருப்பதே நரேந்திரன் (T. C. Narendran)(24 பிப்ரவரி 1944 - 31 டிசம்பர் 2013) என்பவர் இந்தியப் பூச்சியியல் வல்லுநர் ஆவார். இவர் ஒட்டுண்ணி குளவிகள் வகைப்பாட்டியல் வல்லுநர் ஆவார். இக்குளவிகள் பெருங்குடும்பம் கெலாசிடோயிடியாவினைச் (கைமனாப்பிடிரா) சார்ந்தது.

நரேந்திரன் ஜானகியம்மாள் தேசிய வகைப்பாட்டியலுக்கான தேசிய விருதினை 2004ஆம் ஆண்டு பெற்றார்.[1] பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகம் (IASc) மற்றும் சென்னையில் உள்ள இந்தியப் பூச்சியியல் கழகத்தின் உறுப்பினராக இருந்தார்.

இவரது பெரும்பாலான ஆய்வு வெளியீடுகள் கிழக்கத்திய கெல்சிடே (1989), இந்தியத் துணைக்கண்டத்தின் (1994) மற்றும் இந்தோ-ஆத்திரேலிய தோரிமிடே & யூரிடோமிடே (1999) ஆகும். இவர் அறிவியல் சார்ந்த ஆய்வு பத்திரிகைகளில் 300க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளில் 700க்கும் மேற்பட்ட புதிய உயிரினங்களையும் 50 புதிய சிற்றினங்கள் குறித்தும் விவரித்துள்ளார். நரேந்திரன் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் வாழ்நாள் முழுவதும் பணியாற்றியதன் விளைவாக இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான வகைப்பாட்டியல் நிபுணர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார்.

இவர் 31 டிசம்பர் 2013 அன்று 69 வயதில் மாரடைப்பால் இறந்தார்.[2]

முக்கிய வெளியீடுகள்[தொகு]

  • Narendran, T.C. 1974. Oriental Brachymeria. Department of Zoology, University of Calicut, Kerala, India.
  • Narendran, T.C. 1989. Oriental Chalcididae (Hymenoptera: Chalcidoidea). Zoological Monograph. Department of Zoology, University of Calicut, Kerala, India. 441pp.
  • Narendran, T.C. 1994. Torymidae and Eurytomidae of Indian subcontinent. University of Calicut, Kerala, India. 500pp.
  • Narendran, T.C. 1999. Indo-Australian Ormyridae (Hymenoptera: Chalcidoidea). Privately published. iii + 227 pp.
  • Narendran, T.C. 2007. Indian Chalcidoid Parasitoids of the Tetrastichinae (Hymenoptera: Eulophidae). Occasional Paper No. 272, Zoological Survey of India, Kolkata. vi + 390pp.

மேற்கோள்கள்[தொகு]

  1. "National Award for Best Taxonomist retrieved 12 April 2010". Archived from the original on 7 மார்ச் 2008. பார்க்கப்பட்ட நாள் 30 ஜூலை 2021. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "Taxonomist Narendran passes away". The Hindu. 31 December 2013. https://www.thehindu.com/news/national/kerala/taxonomist-narendran-passes-away/article5523036.ece. பார்த்த நாள்: 10 February 2019. 

 

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீ._கு._நரேந்திரன்&oldid=3558630" இலிருந்து மீள்விக்கப்பட்டது