தீர்த்தமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தீர்த்தமலை
—  சிற்றூர்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தர்மபுரி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் [3]
ஊராட்சித் தலைவர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
அரூரில் இருந்து தீர்த்தமலையின் தோற்றம்

தீர்த்தமலை என்பது தமிழ் நாட்டின், தர்மபுரி மாவட்டத்தின் அரூர் வட்டத்திலுள்ள உள்ள ஒரு சிற்றூராகும்[4]. இவ்வூர் கிருஷ்ணகிரி மற்றும் தா்மபுரி மாவட்டம் வழியாக செல்லும் தென்பெண்ணை ஆற்றின் அருகில் உள்ளது.

தீர்த்தகிரீசுவரர் கோயில்[தொகு]

இந்த ஊரில் 1200 அடி உயரத்தில் உள்ள தீர்த்தகிரி அல்லது தீர்த்தமலையில் தீர்த்தகிரீசுவரர் ஆலயம் அமைந்துள்ளது[5][6][7]. இங்கு கோயில் வளாகத்தில் உள்ள குன்றில் இருந்து 50 அடி உயரத்தில் கால் அங்குள அளவிற்கு ஒரு குழாயின் வழியாக நீர் ஊற்றிக் கொண்டு இருக்கிறது. கோடைக் காலத்திலும் மழைக் காலங்களிலும் ஆண்டு முழுவதும் குழாயின் வழியாக ஊற்றும் நீரின் அளவு மாறுவதில்லை. இப்புனித நீரை மக்கள் தீர்த்தமாக தெளித்துக் கொள்கின்றனர். மேலும் இங்கு அக்கினிதீர்த்தம், குமாரதீர்த்தம் கெளரிதீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் போன்ற தீர்த்தங்கள் உள்ளன. எனவே இது தீர்த்தமலை என பெயர் பெற்றது. இம்மலையில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தர்கள் சிறு வண்டுகள் போன்ற உயிரினங்கள் வடிவில் வாழ்வதாக மக்கள் நம்புகின்றனர். இம்மலையில் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு 100 சதுர மீட்டர் பரப்பளவில் மூன்று இடங்களில் மலைப்பகுதியில் மண் புரட்டி போட்டது போல் இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்தது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீர்த்தமலை&oldid=2188757" இருந்து மீள்விக்கப்பட்டது