தீரேந்திர பிரிதம்லால் மேத்தா
தீரேந்திர மேத்தா | |
|---|---|
புஜ் நகரில் உள்ள அவரது இல்லத்தில், நவம்பர் 2017 | |
| பிறப்பு | 29 ஆகத்து 1944 அகமதாபாத், குஜராத், இந்தியா |
| தொழில் | நாவலாசிரியர் கவிஞர் விமர்சகர் பதிப்பாசிரியர் |
| மொழி | குஜராத்தி |
| குடியுரிமை | இந்தியர் |
| கல்வி | பி.ஏ., பிஎச்.டி. |
| கல்வி நிலையம் | குஜராத் பல்கலைக்கழகம் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | சாவ்னி |
| குறிப்பிடத்தக்க விருதுகள் | சாகித்திய அகாதமி விருது (2010) இரஞ்சித்ராம் சுவர்ண சந்திரக் (2011) |
| கையொப்பம் | |
தீரேந்திர பிரிதம்லால் மேத்தா (Dhirendra Pritamlal Mehta) ஓர் குஜராத்தி புதின ஆசிரியர், கவிஞர், விமர்சகர், பதிப்பாசிரியர் இவர். இவர் தனது 'சாவ்னி' என்ற நூலுக்காக 2010 ஆம் ஆண்டுக்கான குஜராத்தி மொழிக்கான சாகித்திய அகாதமி விருதைப் பெற்றார்.
வாழ்க்கை
[தொகு]தீரேந்திர மேத்தா 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி அகமதாபாத்தில் பிறந்தார். இவரது குடும்பம் புஜ்ஜைச் சேர்ந்தது. தனது நான்காவது வயதில், இவர் தனது இரு கால்களிலும் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டார். இவர் 1961 ஆம் ஆண்டு புஜ்ஜில் உள்ள ஆல்ஃபிரட் உயர்நிலைப் பள்ளியில் மெட்ரிகுலேஷன் முடித்தார். இவர் 1966 ஆம் ஆண்டு குஜராத்தியில் முதல் வகுப்பில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1968 ஆம் ஆண்டு, குஜராத் பல்கலைக்கழகத்தின் மொழிகள் பள்ளியில் குஜராத்தி,இந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1976 ஆம் ஆண்டு, 'குஜராத்தி நாவலகதானோ உபேயலக்ஷி அப்யாசா' என்ற தனது ஆய்வறிக்கைக்காக முனைவர் பட்டம் பெற்றார். இவர் புஜில் உள்ள ஆகாஷ்வானியில் சிறிது காலம் பணியாற்றினார், பின்னர் எச். கே. கலைக் கல்லூரியில் ஆராய்ச்சி உதவியாளராகச் சேர்ந்தார். இவர் 1970 முதல் 1976 வரை அகமதாபாத்தில் உள்ள குஜராத் கல்லூரியில் துறைத் தலைவராக குஜராத்தி இலக்கியம் கற்பித்தார். பின்னர் இவர் புஜுக்குச் சென்று, நவம்பர் 2006-ல் ஓய்வு பெறும் வரை ஆர். ஆர். லலான் கல்லூரியில் குஜராத்தி, இளங்கலை மையத்தின் துறைத் தலைவராக குஜராத்தி இலக்கியம் கற்பித்தார். இவர் கே.எஸ்.கே.வி. கட்ச் பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றினார்.[1][2]
படைப்புகள்
[தொகு]'வலே' (1971) என்பது காதல், உறவுகள், அவற்றின் விளைவாக ஏற்படும் மனச்சோர்வு, மகிழ்ச்சியின்மை, தனிமை ஆகிய கருப்பொருள்களைக் கையாளும் இவரது முதல் நூலாகும். இவரது அடுத்த இரண்டு புத்தகங்களான 'சிஹ்னா' (1978), 'அத்ராஷ்யா' (1980) ஆகியவையும் இதே போன்ற கருப்பொருள்களை விரிவுபடுத்துகின்றன. 'காவேரி அனே தர்ப்பன்லோக்' (1988) வானொலி நாடகங்களிலிருந்து தழுவப்பட்டது. இரண்டிலும் இரண்டு பெண் கதாநாயகிகள் உள்ளனர். கர் (1995) இல் நான்கு கதைகள் வீடு, இறப்பு விஷயங்களில் மாற்றத்தின் தன்மையை சுட்டிக்காட்டுகின்றன. திஷாந்தர், அபனே லோகோ, தர்ணா (1990), கோவாய் கயேலி வஸ்து (2001), பண்டாரி பவன் (2002), சாவ்னி (2006) ஆகியவை இவரது பிற புதினங்கள். தனிமை, மனச்சோர்வு ஆகியவை தொடர்ந்து ஆய்வுக்கு உட்பட்டவை.[1]
அங்கீகாரம்
[தொகு]இவருக்கு ஆர்.வி. தேசாய் விருது (1994), விமர்சகர்கள் விருது (1985), ஜெயந்த் காத்ரி - பகுலேஷ் விருது (2000), தன்ஜி காஞ்சி காந்தி சுவர்ண சந்திரக், கே.எம். முன்ஷி சந்திரக், தர்ஷக் விருது (2003) மற்றும் 12வது தும்கேது நவலிகா புரஸ்கார் ஆகிய விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. இவர் குஜராத்தி சாகித்ய பரிஷத், குஜராத் சாகித்ய அகாடமியால் விருது பெற்றவர்.[1] 2010 இல், இவர் தனது சாவ்னி நூலுக்காக குஜராத்தி மொழிக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார்.[3] 2011 இல், இவருக்கு இரஞ்சித்ரம் சுவர்ண சந்திரக் விருது வழங்கப்பட்டது.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இவர் 1977 இல் நுதன்பென் என்பவரைனை மணந்தார், இவருக்கு வேணு, ஷால்மலி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 Brahmabhatt, Prasad (2010). અર્વાચીન ગુજરાતી સાહિત્યનો ઈતિહાસ - આધુનિક અને અનુઆધુનિક યુગ [History of Modern Gujarati Literature – Modern and Postmodern Era] (in குஜராத்தி). Ahmedabad: Parshwa Publication. pp. 190–193. ISBN 978-93-5108-247-7.
- ↑ Dave, Ramesh. "સાહિત્યસર્જક: ધીરેન્દ્ર મહેતા" [Writer: Dhirendra Mehta] (in குஜராத்தி). Gujarati Sahitya Parishad.
- ↑ Zafri Mudasser Nofil (28 December 2010), "2010 Was an Action-Packed Year for Literature in India", Outlook, archived from the original on 2011-07-15