உள்ளடக்கத்துக்குச் செல்

தீரேந்திரலால் தார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தீரேந்திரலால் தார் (Dhirendralal Dhar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார்..[1] 1913 ஆம் ஆண்டு சனவரி மாதம் 12 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1979-ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக இந்திய தேசிய விருதைப் பெற்றார். வங்காள மொழியில் எழுதிய இவரது புனைப்பெயர் சிறீதர் முன்சி என்பதாகும்.[2]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

பிரித்தானிய இந்தியாவில் இருந்த கொல்கத்தாவில் பிறந்தார். ஆரிய மிசன் நிறுவனத்திலும், பின்னர் வித்யாசாகர் கல்லூரியிலும் கல்வி பயின்றார். பகுதிநேரப் பத்திரிகையாளராகவும் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1928-ஆம் ஆண்டில், ஒத்துழையாமை இயக்கத்திலும் இந்திய தேசிய காங்கிரசிலும் இணைந்தார். அதன்பிறகு, இவர் இந்து மகாசபையின் இளைஞர் அமைப்பில் சேர்ந்தார்.[2]

இலக்கிய வாழ்க்கை

[தொகு]

தீரேந்திரலால் தாரின் முதன்முதல் படைப்பு, 1934-ஆம் ஆண்டில் வெளிவந்த 'மிருத்யுர் போசுசாதே' ஆகும். வரலாறு, சாகசம், திகில் மற்றும் துப்பறியும் கதைகள் அல்லது நாவல்களை — குறிப்பாகக் குழந்தைகளுக்காக — எழுதியதன் மூலம் இவர் பெரும் புகழ்பெற்றார்.[3] 'சிசூ பிரதிபா' (1955), 'அகோரோனி' (1957), 'ஆனந்தோ பூச்சாபார்சிகி' (1964–69) மற்றும் 'கிசோர் கிரந்தாவளி' போ எழுதியுள்ளார். 'நாலந்தா தேகே லும்பினி',[4] 'காசுமீரா' மற்றும் 'பன்னாகர்' ஆகியவை வங்காள இலக்கியத்தில் இவரது மிகவும் பிரபலமான நாவல்களாகத் திகழ்கின்றன.[5][1] சுபாசு சந்திர போசு, வித்யாசாகர் மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை இவர் மிகத் தீவிரமான அணுகுமுறையுடன் எழுதியுள்ளார்.[6]

படைப்புகள்

[தொகு]
  • அட்வென்ச்சர் ஓம்னிபசு
  • அமர் தேசர் மனுசு
  • ஆசி பாச்சே இயான் சான்
  • தேசு பிதேசர் ரூப்கோதா
  • டர்பைன் துனியா
  • ஏய் தேசுசிரி மேயி
  • கல்போகோலியே சத்யி
  • சாய்தேவ்
  • இயூத்தர் கோல்போ
  • மகா சீனா மகாசமர்
  • மண்டிரே மண்டிரே
  • மோககல்
  • மோகலேர் புச்சாரி
  • நலோண்டா தேகே லும்பினி
  • நீல்கர் எலோ தேசே [7]
  • பாசுகிம் டிகாண்டே
  • பிரியதர்சி அசோக்
  • ரோங்மோகோல்
  • சிபாகி இயூத்தேர் கோல்போ

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "Dhirendra Lal Dhar". openlibrary.org. Retrieved 5 March 2018.
  2. 1 2 Vol II, Anjali Basu (2004). Sansad Bangali Charitavidhan (Bengali). Kolkata: Sahitya Sansad. p. 143. ISBN 81-86806-99-7.
  3. K. A. JAMUNA (June 2017). Children's Literature in Indian Languages. Publications Division Ministry of Information & Broadcasting. ISBN 9788123024561. Retrieved 5 March 2018.
  4. Dhar, Dhirendra Lal (1965). "Nālandā theke Lumbinī". Retrieved 5 March 2018.
  5. "Dhar, Dhirendralal". nationallibrary.gov.in. Retrieved 5 March 2018.
  6. Roy, Siddharthya Swapan (4 May 2013). "Saying boo in Bengali". The Hindu. https://www.thehindu.com/books/books-authors/saying-boo-in-bengali/article4679655.ece.
  7. Limited, Dey's Publishing Private. "Nilkar Elo Deshe - Dey's Publishing | Bengali language/Bangla bhasa | Sree Dhirendralal Dhar - deyspublishing.com". Dey's Publishing (in ஆங்கிலம்). Retrieved 2024-03-12. {{cite web}}: |last= has generic name (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீரேந்திரலால்_தார்&oldid=4523469" இலிருந்து மீள்விக்கப்பட்டது