உள்ளடக்கத்துக்குச் செல்

தீராவத் பாரதி தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீராவத் பாரதி தேவி
Dheeravath Bharathi Devi
சட்டப்பேரவை உறுப்பினர்
பதவியில்
20 மே 2002 – 2004
முன்னையவர்தீராவத்து ராக்கிய நாயக்கு
பின்னவர்இரவீந்தர குமார் ரமாவத்து
தொகுதிதேவரகொண்டா
தனிப்பட்ட விவரங்கள்
பணிஅரசியல்வாதி

தீராவத் பாரதி தேவி (Dheeravath Bharathi Devi) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஆந்திரப் பிரதேசத்தின் (தற்போது தெலங்கானா) நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவராவார்.[1] 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் பட்டியல் பழங்குடியினருக்கான தனித் தொகுதியான தேவரகொண்டா சட்டமன்றத் தொகுதியிலிருந்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.[2][3]

தீராவத் பாரதி தேவியின் கணவர் இராக்யா நாயக்கு ஆவார். அவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 2001 ஆம் ஆண்டு திசம்பரில், மக்கள் போராட்டக் குழு எனப்படும் நக்சலைட் அமைப்பினரால் அவர் கொல்லப்பட்டார். இதன் காரணமாக தேவரகொண்டா தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இந்திய தேசிய காங்கிரசு கட்சி இவரை வேட்பாளராக நிறுத்தியது. கொல்லப்பட்ட அந்தத் தலைவருக்கு மரியாதை மற்றும் ஆதரவு தெரிவிக்கும் விதமாக, தெலுங்கு தேசம், பாரதிய சனதா கட்சி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் அனைத்து முக்கிய கட்சிகளும் அவரது வேட்புமனுவை ஆதரிக்க முடிவு செய்தன. பாரதிய சனதா கட்சியின் அதிருப்தி வேட்பாளர் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, 2002-ஆம் ஆண்டு மே 20-ஆம் தேதியன்று தேவரகொண்டா சட்டமன்றத் தொகுதில் இவர் வெற்றிபெற்றார்.[1][4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "rediff.com: Slain Congress MLA's wife elected unopposed in AP assembly bypoll". m.rediff.com. Retrieved 2026-04-27.
  2. ↑ "Devarakonda Election Result 2018 Live Updates: Candidate List, Winner, Runner-up MLA List". Elections in India. Archived from the original on 2025-11-06. Retrieved 2026-04-27.
  3. ↑ "Devarakonda Constituency History, Codes, MLA Candidates | Telangana Elections". www.sakshi.com (in ஆங்கிலம்). Archived from the original on 2023-11-27. Retrieved 2026-04-27.
  4. ↑ Today, Telangana (2023-10-26). "Instances of unanimous elections in Telangana's election history". Telangana Today (in ஆங்கிலம்). Retrieved 2026-04-27.
  5. ↑ "ఎక్కడో పుట్టి.. ఎక్కడో పెరిగి ఇక్కడే గెలిచారు" (in te). EENADU இம் மூலத்தில் இருந்து 2023-11-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231104111258/https://www.eenadu.net/telugu-news/districts/Nalgonda/534/123203880.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீராவத்_பாரதி_தேவி&oldid=4600046" இலிருந்து மீள்விக்கப்பட்டது