தீய பைபிள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுப்பிழை

தீய பைபிள் (The Wicked Bible) அல்லது ஒழுக்கங்கெட்ட பைபிள் அல்லது பாவிகளின் பைபிள் என்பது, 1631ல் இலண்டன் ராயல் பதிப்பகத்தில் மூலம் வெளியிடப்பட்ட ஒரு பைபிள் பதிப்பை குறிக்கும் சுட்டுப்பெயர் ஆகும். இங்கிலாந்தின் அதிகாரப்பூர்வமான பைபிளான அரசர் ஜேம்ஸ் பைபிளின் மறுபதிப்பாக வந்த இதை இராபர்ட் பர்கரும், மார்ட்டின் லூகாசும் எழுதினர். இதில் பத்துக் கட்டளைகளில் வரும் ஏழாவது கட்டளையான "Thou shalt not commit adultery" (விபச்சாரம் செய்யாதே) என்பது "Thou shalt commit adultery" (விபச்சாரம் செய்) என்று தவறுதலாக அச்சிடப்பட்டிருந்தது. இதுவே இந்த பதிப்புக்கு தீய பைபிள் என பெயர்வரக் காரனமாகும். இந்த தவறு கண்டுபிடிக்கப்பட்டவுடன், விற்பனை செய்யப்பட்ட பிரதிகள் மீண்டும் கைப்பற்றப்பட்டு இசுடார் சேம்பர் எனப்படும் இங்கிலாந்தின் சட்டவறையின் முன்னிலையில் தீ வைத்து அழிக்கப்பட்டன. மேலும் இதை பதிப்பித்த பதிப்பகத்துக்கு 300 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அதன் பதிப்பக அனுமதியும் ரத்து செய்யப்பட்டது[1].

இதன் பெரும்பான்மையான பிரதிகள் அழிக்கப்பட்ட போதும், சில இன்றும் காணக்கிடைக்கின்றன. அவற்றில் ஒன்று நியூ யோர்க் பொது நூலகத்திலும்[2], மற்றொண்டு டெக்சாசில் உள்ள டம்கம் பைபிள் அருங்காட்சியகத்திலும், பிறிதொன்று இங்கிலாந்து தேசிய நூலகத்திலும் உள்ளன. மேலும் இதன் சொற்ப எண்ணிக்கை, புகழ் காரனமாக இது இன்றைய நிலவரத்தில் 99,500 அமெரிக்க டாலர்கள் வரை விலை போகின்றது[3].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீய_பைபிள்&oldid=3486582" இருந்து மீள்விக்கப்பட்டது