உள்ளடக்கத்துக்குச் செல்

தீயா சுசன்னா பஜாஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீயா சுசன்னா பஜாஜ்
பிறப்பு9 மார்ச்சு 1994 (1994-03-09) (அகவை 32)
படித்த கல்வி நிறுவனங்கள்கோர்னெல் பல்கலைக்கழகம்
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்ட்டன் பள்ளி
பணிமலையேற்ற வீராங்கனை, ஆய்வுப் பயணி, ஊக்கமூட்டும் பேச்சாளர், சாகசச் சுற்றுலா நிபுணர்
பெற்றோர்சிர்லி பஜாஜ், அஜீத் பஜாஜ்
உறவினர்கள்மேக்னா ஆன் பஜாஜ் (சகோதரி)

தீயா சுசன்னா பஜாஜ் (Deeya Suzannah Bajaj பிறப்பு: 9 மார்ச் 1994) இந்தியாவின் சாகச விளையாட்டு வீராங்கனை ஆவார்.[1]

2022ஆம் ஆண்டு சூன் 5 அன்று, உலகின் ஏழு உயர்ந்த கண்டச் சிகரங்களையும் வெற்றிகரமாக ஏறி முடித்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

தீயா பஜாஜ், சிர்லி தாமஸ் பஜாஜ் மற்றும் அஜீத் பஜாஜ் ஆகியோரின் மகள் ஆவார். அஜீத் பஜாஜ் இந்தியாவின் புகழ்பெற்ற சாகசப் பயணியும், பத்மசிறீ விருது பெற்றவருமாவார்.[2]

இவர் பாடி அமைப்பின் சான்றளிக்கப்பட்ட மீட்பு நீர்மூழ்குநர் ஆவார்.[3]

மேலும், நேரு மலையேற்ற நிறுவனம் வழங்கும் மேம்பட்ட மலையேற்றப் பயிற்சிப் பட்டயத்தையும் பெற்றுள்ளார்.[4]

சாகசப் பயணங்கள்

[தொகு]

17 வயதில், தீயா பஜாஜ் 550 கிலோமீட்டர் நீளமுள்ள பனிச்சறுக்குச் சாகசப் பயணத்தில் பங்கேற்றார்.[5] அந்தப் பயணத்தில் குழந்தைகள் இல்லத்திற்கான நிதி திரட்டும் நோக்கில் கிரீன்லாந்து பனிப்பரப்பை பனிச்சறுக்கு மூலம் கடந்தார்.[6] அக்காலத்தில் இந்தப் பயணத்தை வெற்றிகரமாக முடித்த உலகின் இளைய நபர் என்ற பெருமையையும் பெற்றார்.[7]

2018ஆம் ஆண்டு மே 16 அன்று, தீயா பஜாஜூம் இவரது தந்தை அஜீத் பஜாஜ் இருவரும் இணைந்து எவரெஸ்ட் மலையை ஏறிய முதல் இந்திய தந்தை-மகள் இணையர் எனும் சாதனை படைத்தனர்.[8][9][10][11]

மேலும், திபெத் வழியாக (வடக்குப் பாதை) எவரெஸ்ட்டை ஏறிய முதல் தந்தை - மகள் இணையரும் இவர்களே ஆவர். இந்த மலையேற்றப் பயணம் இந்தியாவில் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் அதிகாரமளிப்பை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது.[12]

தந்தை-மகள் இணை உலகின் ஏழு கண்டங்களின் உயர்ந்த சிகரங்களையும் வெற்றிகரமாக ஏறியுள்ளனர். இவற்றில் எவரெசுட்டு சிகரம், டெனாலி, அக்கோன்காகுவா, வின்சன் மலைத்திரள், எல்பிரஸ் மலை, கிளிமஞ்சாரோ மலை, மோண்ட் பிளாங்க், புன்சாக் ஜெயா, கொஸ்கியஸ்கோ மலை ஆகியவை அடங்கும்.[13][14] 2022ஆம் ஆண்டு சூன் 5 அன்று ஏழு கண்டங்களின் உயர்ந்த சிகரங்களையும் ஏறி முடித்ததன் மூலம் இச்சாதனையை நிறைவு செய்தனர்.[8][15][16][17]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kumar, Ashok (16 May 2018). "Bajajs become first father-daughter duo to scale the Mount Everest" (in en-IN). தி இந்து. https://www.thehindu.com/news/national/bajajs-become-first-father-daughter-duo-to-scale-the-mount-everest/article23905889.ece.
  2. Manekar, Sameer (2018-05-30). "Would Your Relationship With Your Father Survive Climbing Everest?". Vice (in ஆங்கிலம்). Retrieved 2019-10-07.
  3. Kullar, Gagan Dhillon (2018-06-04). "The formidable challenge of scaling the Everest" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/society/the-formidable-challenge-of-scaling-the-everest/article24077185.ece.
  4. ""Even Everest is not the limit if you put your mind to it" – Mountaineer Deeya Bajaj" (in en). cnbctv18.com. 11 April 2019. https://www.cnbctv18.com/buzz/even-everest-is-not-the-limit-if-you-put-your-mind-to-it-mountaineer-deeya-bajaj-2923441.htm.
  5. Bhanukumar, Shashwathi (2018-06-11). "Ajeet and Deeya Bajaj: India's First Father-daughter duo to conquer Mt Everest - Parentcircle". www.parentcircle.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2019-10-07.
  6. "Skiing for a dream". Rediff (in ஆங்கிலம்). Retrieved 2019-10-07.
  7. "Like father, like daughter". Retrieved 2019-10-07 via PressReader.
  8. 1 2 ""Even Everest is not the limit if you put your mind to it" – Mountaineer Deeya Bajaj". cnbctv18.com (in அமெரிக்க ஆங்கிலம்). 11 April 2019. Retrieved 2019-10-07.
  9. ""Adventure Is A Way Of Life": India's First Father-Daughter Duo Who Climbed Mount Everest". 24 May 2018. https://www.ndtv.com/delhi-news/adventure-is-a-way-of-life-indias-first-father-daughter-duo-who-climbed-mount-everest-1856863.
  10. "Mount Everest: Gurugram duo scale Mt Everest, first Indian father-daughter team to do so". The Times of India (in ஆங்கிலம்). 17 May 2018. Retrieved 2019-10-07.
  11. "PM Modi congratulates Indian Mount Everest conquerors". ANI (in ஆங்கிலம்). Retrieved 2019-10-07.
  12. "Everest climb a message for female equality". Cornell Chronicle (in ஆங்கிலம்). Retrieved 2019-10-07.
  13. "Ajeet Bajaj and Deeya Bajaj Blog". Economic Times Blog (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2019-10-07.
  14. "Dalmia Cement empowers Ajeet and Deeya Bajaj, the first Indian father-daughter duo aiming to scale Mt. Vinson, Antarctica". Odisha Diary (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-12-13. Retrieved 2019-10-07.
  15. ""Adventure Is A Way Of Life": India's First Father-Daughter Duo Who Climbed Mount Everest". 24 May 2018. https://www.ndtv.com/delhi-news/adventure-is-a-way-of-life-indias-first-father-daughter-duo-who-climbed-mount-everest-1856863.
  16. "Mount Everest: Gurugram duo scale Mt Everest, first Indian father-daughter team to do so | Gurgaon News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). 17 May 2018. Retrieved 2019-10-07.
  17. "PM Modi congratulates Indian Mount Everest conquerors". www.aninews.in (in ஆங்கிலம்). Retrieved 2019-10-07.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீயா_சுசன்னா_பஜாஜ்&oldid=4588354" இலிருந்து மீள்விக்கப்பட்டது