தீயலைட்டு
தீயலைட்டு Teallite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | சல்பைடு கனிமம் |
வேதி வாய்பாடு | PbSnS2 |
இனங்காணல் | |
நிறம் | வெள்ளி கலந்த சாம்பல், ஈய சாம்பல் |
படிக அமைப்பு | நேர்ச்சாய்சதுரம் |
பிளப்பு | {001} சரிபிளவு (தகட்டுப் பிளவு); நெகிழும் |
விகுவுத் தன்மை | கம்பியாக இழுக்கலாம். |
மோவின் அளவுகோல் வலிமை | 1 1⁄2 – 2 |
மிளிர்வு | உலோகத்தன்மை |
கீற்றுவண்ணம் | கருப்பு |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
ஒப்படர்த்தி | 6.36 |
ஒளியியல் பண்புகள் | திசைமாறுபாட்டுப் பண்பு |
பலதிசை வண்ணப்படிகமை | பலவீனமானது |
மேற்கோள்கள் | [1][2] |
தீயலைட்டு (Teallite) என்பது PbSnS2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். வெள்ளீயமும் ஈயமும் சேர்ந்து இந்த சல்பைடு கனிமம் உருவாகிறது. நிலத்தடி பாறையின் அடுக்குகளுக்கு இடையே நீர் வெப்ப திரவத்திலிருந்து படிந்த தாதுக்களின் அடுக்கில் இது தோன்றுகிறது. சிலசமயங்களில் வெள்ளீயத்தின் தாதுவாகவும் வெட்டியெடுக்கப்படுகிறது. தீயலைட்டு கனிமம் மென்மையான வெள்ளி கலந்த சாம்பல்நிற மைக்கா போன்ற தட்டுகளாக நேர்ச்சாய்சதுர படிக அமைப்பில் உருவாகிறது. மோவின் கடினத்தன்மை அளவுகோலில் 1.5 முதல் 2 என்ற அளவும் ஒப்படர்த்தி 6.4 என்ற அளவையும் வெளிப்படுத்துகிறது.
தீயலைட்டு கனிமம் முதன்முதலில் 1904 ஆம் ஆண்டில் பொலிவியாவில் உள்ள சாண்டா ரோசா, அண்டெக்வேராவில் கண்டுபிடிக்கப்பட்டது. பிரித்தானியப் புவியியலாளர் இயெத்ரோ இயசுடினியன் ஆரிசு தீயல் (1849-1924) நினைவாக தீயலைட்டு என்று பெயரிடப்பட்டது.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் தீயலைட்டு கனிமத்தை Tel[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mineralienatlas
- ↑ Mindat with location data
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் தீயலைட்டு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.