தீயணைப்பு நீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தீயணைப்பு நீர் அல்லது தீத்தணிப்பு நீர் (fireewater) என்பது தீயினை அணைக்கப் பயன்படும் நீராகும். அந்நீரினை முறையாக வெளியேற்றுதல் அவசியமாகும். ஏனெனில், அந்நீரானது சுற்றுச்சூழலை மிகவும் பாதிக்கக்கூடியது.[1]

பெரும்பாலான தீயணைப்பு சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்பட்ட நீரானது தீ அமர்த்தப்பட்டபிறகு வெளியேற்றப்படாமல் உள்ளது. அந்நீரில் கட்டிடங்களில் இருந்து அடித்து வந்த கரைநிலை பொருட்கள் மற்றும் எரிதலில் வெளியிடப்பட்ட கழிவுப்பொருட்கள் காணப்படும். தீத்தணிக்கப் பயன்படுத்தப்பட்ட நீர் அந்த இடத்திலேயே தேங்கியிருப்பது பூச்சிக்கொல்லிகள், கரிம மற்றும் கனிம வேதிப்பொருட்கள், இரசாயனங்கள் போன்றவை அங்கு தங்கி தீமை விளைவிக்கும். சில இடங்களான வேதித் தொழிற்சாலை, நிறுவனங்கள், வயல்வெளி ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்ட தீத்தணிப்பு நீரானது தன்னுள் கொண்டுள்ள பொருட்களால் பிரத்தியேகமான பிரச்சினைகளைக் கொண்டுவரக்கூடியது.

சில வளாகங்களில் நெகிழிப் பொருட்களின் எரிந்த நிலையானது அந்நீரின் மணம் மற்றும் சுவையினை பெருமளவு பாதிக்கும். அவ்வாறு தீத்தணிக்கப் பயன்படுத்தப்பட்ட நீரினை ஆறு, குளம், போன்ற நீர் நிலைகளில் முறையாக சமன்படுத்தாமல் செலுத்தினால், இந்நிகழ்வு ஆறு மற்றும் குள்த்தின் நீரை குடிக்கவோ உணவு தயாரிக்கவோ பயன்படுத்த இயலாமல் போகும்.

தீத்தணிப்பு நீரை முறையாக அகற்றும் ஒரு வழியானது அந்நீரை அங்கேயே தங்க வைத்து அதன் பிறகு அந்நீரினை சமன்படுத்தி பின்னர் வெளியேற்றுதலாகும். பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட முறைகளுள் ஒன்றானது தீத்தணிப்பு கழிவு நீரை வாயுப் பைகளில் அடைத்தும், முற்றிலும் அடைக்கப்பட்ட மீண்டும் திரும்பாத வால்வுகளில் பொருத்தியும் தானே தணியும் வகையிலோ, அல்லது அமில கழிவினைக் காரம் கொண்டோ, காரக் கழிவினை அமிலம் கொண்டோ சமன்படுத்தி சீர் செய்யலாம்.

ஒரு தொழிற்சாலையில் தரநிலை சான்று பெற அங்கு தீத்தணிப்பு கழிவு நீர் வெளியேற்றம் மற்றும் இதர மாசுபடுத்திகளை முறையாக வெளியேற்றும் வழிகளும் தெளிவாக அமைக்கப்பட்டிருந்தால் மட்டுமே அந்நிறுவனத்தின் சுற்றுச்சூழல் கொள்கை ISO14001ன்படி முறையாக வடிவமைக்கப்பட்டதாகக் கொள்ளலாம்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீயணைப்பு_நீர்&oldid=2748687" இருந்து மீள்விக்கப்பட்டது