தீப்பொறி ஆறுமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

”தீப்பொறி” ஆறுமுகம் ஒரு தமிழ் நாட்டு அரசியல்வாதி மற்றும் மேடைப் பேச்சாளர். 1970களில் தொடங்கி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முன்னணிப் பேச்சாளார்களுள் ஒருவராக இருந்தவர் ஆறுமுகம். 2001ம் ஆண்டு திமுக தலைவர் மு. கருணாநிதி தன்னைப் புறக்கணிப்பதாகக் குற்றம் சாட்டி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அதிமுக) இணைந்தார். அதிமுகவின் தலைமைக் கழகப் பேச்சாளராக ஒன்பது ஆண்டுகள் இருந்தார். 2010ல் அதிமுகவில் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை என்று குற்றம் சாட்டி மீண்டும் திமுகவில் இணைந்து விட்டார். இவரது மேடைப் பேச்சுகளில் பரபரப்பை ஏற்படுத்தக் கூடிய விஷயங்கள், தனி மனிதத் தாக்குதல்கள், பொதுவெளியில் பயன்படுத்தாத சொற்கள் ஆகியவை மிகுந்திருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீப்பொறி_ஆறுமுகம்&oldid=3359103" இலிருந்து மீள்விக்கப்பட்டது