தீபா தேவசேனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தீபா தேவசேனா (Deepa Devasena) (பிறப்பு சிதம்பரம், தமிழ்நாடு, இந்தியா ) அமெரிக்காவின் மில்வாக்கி பகுதியில் லக்னோ கரானா பாணியின் பிரபலமான கதக் குரு ஆவார். 2003 முதல் நடனத்தில் பயிற்சி பெற்றார். இவர் ஆரபி இந்திய நடனப் பள்ளியின் கலை இயக்குநராக உள்ளார். தேவசேனா ஒரு பயிற்சி பெற்ற பரதநாட்டியம் கலைஞராகவும், கதக் நடனக் கலைஞரும், நடன ஆசிரியருமாவார். பிர்ஜு மகராஜ், சாசுவதி தீதி, நிருபமா, இராசேந்திரன் உள்ளிட்ட பல முக்கிய கதக் குருக்களின் கீழ் நடனம் பயின்றார். ஆகத்து 2015இல், நிருபமா, இராசேந்திரன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் தனது மாணவர்களுக்காக இரண்டு வார கதக் பட்டறையான, "சூம் 2015" என்ற நிகழ்ச்சி மூலம் வெற்றிகரமாக நடத்தினார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபா_தேவசேனா&oldid=3102809" இருந்து மீள்விக்கப்பட்டது