தீபா சாகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தீபா சாகி (Deepa Sahi பிறப்பு நவம்பர் 1962 30) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை, தயாரிப்பாளர் ஆவார். இரானுவ குடும்ப பின்னணியினைக் கொண்ட இவர் 1993 ஆம் ஆண்டில் வெளியான மாயா மெம்சாப் திரைப்படத்தில் மாயா எனுக் கதாப்பத்திரத்ஹில் நடித்ததகாக பரவலாக அறியப்படுகிறார்.2011 ஆம் ஆண்டில் வெளியான தேரே மேரே பெரே என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

ஆரம்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ஈஷா தியோலின் சங்கீத் விழாவில் சாகி

தீபா சாகி, பஞ்சாபி இனத்தைச் சேர்ந்தவர், [1] தோராதூனில் இராணுவப் பின்னணியில் பிறந்தார் மற்றும் இவரது குடும்பத்தில் இளையவர் ஆவார். இவர் மீரட்டில் வளர்ந்தார். [2] இவரது குடும்பம் பின்னர் கனடாவுக்கு குடிபெயர்ந்தது, ஆனால் இவர் தொடர்ந்து இந்தியாவில் இருந்தார். இவருக்கு ஒரு மூத்த சகோதரி இருந்தார், இவர் 18 வயதில் இறந்தார். [2] சாகி தனது கல்வியை இந்திரபிரஸ்தா மகளிர் கல்லூரியில் பயின்றார், [3] மற்றும் தில்லி பொருளியல் பள்ளியில் சமூகவியலில் தங்கப் பதக்கம் வென்றார். [4] [5] சாகி பின்னர் இயக்குனராகும் நோக்கத்தில் தேசிய நாடகப் பள்ளியில் சேர்ந்தார். [6] இருப்பினும், இவர் நடிப்பு வாய்ப்புகளைப் பெறத் தொடங்கினார், இது நடிப்புக்கு மாறத் தூண்டியது. சாகி தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் தனது முதல் படத்தை இயக்க முடிவு செய்தார், ஆனால் நானா படேக்கர் மற்றும் ஹேமா மாலினி நடிக்கவிருந்த நானா கார்த்தே பியார் படம் மந்தநிலை காரணமாக இவரால் இயக்க இயலவில்லை. [7] இவர் சுதந்திரப் போராட்ட வீரர் உஷா மேத்தாவின் மருமகன், திரைப்பட இயக்குனர் கேதன் மேத்தாவை மணந்தார். [8] இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். [4]

ஆரம்ப கால வாழ்க்கையில்[தொகு]

டெல்லியின் தேசிய நாடகப் பள்ளியின் முன்னாள் மாணவியான, சாகி நாடக வாழ்க்கையைத் தொடங்கினார், வலுவான இடதுசாரி சார்பு மற்றும் சமூக ஆர்வம் ஆகியன இவரது தயாரிப்புகளின் முக்கியக் கருப்பொருளாக இருந்தது

இவரது ஆரம்பகால திரைப்பட வாழ்க்கையில் கோவிந்த் நிகலானியுடன் பணியாற்றினார் மேலும் 1984 ஆம் ஆண்டில் வெளியான பார்ட்டி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.[9]இது நல்ல வரவேற்பைப் பெற்றது, பின்னர் இவர் 1985 ஆம் ஆண்டில் வெளியான அகத் திரைப்படத்தில் நடித்தார்.

வணிக சினிமா[தொகு]

திரைப்பட இயக்குனர் கேதன் மேத்தாவை திருமணம் செய்த பிறகு இந்தி சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.இவர் , ஹீரோ ஹிரால் (1988), மாயா மெம்சாப் (1992) மற்றும் ஓ டார்லிங் உட்பட இவரது பல படங்களில் நடித்தார்! யே ஹாய் இந்தியா (1995). [2] ஓ ஓ டார்லிங் திரைப்படங்கருக்கு திரைக்கதை எழுதினார். மாயா மெம்சாப் திரைப்படத்தில் சாகி மற்றும் நடிகர் சாருக் கான் இடையே திரைப்படத்தில் வந்த பாலியல் காட்சி சர்ச்சைக்குரியதாக ஆனது. [10] இவரது மற்ற குறிப்பிடத்தக்க படங்களில் ஹம் (1991), [2] டிரினித்ரா (1991) மற்றும் ஏக் டாக்டர் கி மவுத் (1991) ஆகியவை அடங்கும்.

1998 ஆம் ஆண்டில் வெளியான ஆர் யா பார் இவர் இறுதியாக நடித்தார். (1998) [11] ஹம் மற்றும் மாயா மேம்ஸாப் தேசிய விருது (நடுவர்) மற்றும் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. [11]

2015 ஆம் ஆண்டில், 18 வருடங்கருக்குப் பிறகு இவர் தனது கணவரின் படமான மாஞ்சி -தெ மவுண்டைன் மேன் இல் இந்திராகாந்தி கதாபாத்திரத்தில் தோன்றினார். [12]

சான்றுகள்[தொகு]

 1. HT Correspondent (12 December 2006), "History will pour out of every brick of Gobindgarh Fort, says Deepa Sahi" பரணிடப்பட்டது 30 சூன் 2018 at the வந்தவழி இயந்திரம், Hindustan Times. Retrieved 20 January 2019.
 2. 2.0 2.1 2.2 2.3 "Maya in control!". தி இந்து. 2011-09-09. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/maya-in-control/article2437344.ece. 
 3. "DU has a lot on its ladies special platter". இந்தியா டுடே. 2009-06-03. http://indiatoday.intoday.in/story/DU+has+a+lot+on+its+ladies+special+platter/1/44882.html. 
 4. 4.0 4.1 "Ketan Mehta: I must be the craziest man Deepa has met in her life". Times of India. 2014-10-28. http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Ketan-Mehta-I-must-be-the-craziest-man-Deepa-has-met-in-her-life/articleshow/44948638.cms. 
 5. "DEEPA SAHI". Whistler Film Festival இம் மூலத்தில் இருந்து 2015-12-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151222101136/http://whistlerfilmfestival.com/29-speakers/148-deepa-sahi. 
 6. "I am too restless to be an actress: Deepa Sahi". Times of India. 2011-09-02. http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/I-am-too-restless-to-be-an-actress-Deepa-Sahi/articleshow/9832835.cms. 
 7. "No Rules, Make What You Want". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 2011-10-02. http://www.newindianexpress.com/entertainment/hindi/article227588.ece. 
 8. "Sense of humour is important in a marriage". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 2011-02-07 இம் மூலத்தில் இருந்து 2014-12-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141216143001/http://www.hindustantimes.com/entertainment/bollywood/sense-of-humour-is-important-in-a-marriage/article1-659542.aspx. 
 9. "I'm too restless to act: Actress-producer Deepa Sahi". Daily News and Analysis. 2011-09-28. http://www.dnaindia.com/entertainment/report-i-m-too-restless-to-act-actress-producer-deepa-sahi-1592550. 
 10. "Archived copy". Archived from the original on 4 June 2016. பார்க்கப்பட்ட நாள் 19 June 2020.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
 11. 11.0 11.1 "Rare sighting: Maya Memsaab Deepa Sahi". என்டிடிவி. http://www.ndtv.com/photos/entertainment/blast-from-kim-kardashian-s-past-8949/slide/25. 
 12. "Archived copy". Archived from the original on 13 March 2017. பார்க்கப்பட்ட நாள் 19 June 2020.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபா_சாகி&oldid=3318573" இலிருந்து மீள்விக்கப்பட்டது