தீபா சசீந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீபா சசீந்திரன்
Deepa Sashindran
ദീപ ശശീന്ദ്രൻ
பிறப்புதீபா நாராயணன் நாயர்
3 சூலை 1974 (1974-07-03) (அகவை 49)
பெங்களூர், கருநாடகம், இந்தியா
இருப்பிடம்பெங்களூர்
தேசியம் இந்தியா
குடியுரிமைஇந்தியாn
கல்விபி.ஏ, எல்.எல்.பி, தொழிலாளர் நலன் முதுநிலைப் பட்டயம்
படித்த கல்வி நிறுவனங்கள்பெங்களூர்ப் பல்கலைக்கழகம்
பணிநடனம், நடனப்பயிற்சியாளர்
செயற்பாட்டுக்
காலம்
3 பத்தாண்டுகள்
அறியப்படுவதுகுச்சிப்புடி கலைஞர்
பெற்றோர்நாரயண் நாயர், சிறீதேவி
வாழ்க்கைத்
துணை
சசீந்திரன்
பிள்ளைகள்2 (ஒரு மகன், ஒருமகள்)
வலைத்தளம்
www.deepasashindran.com

தீபா சசீந்திரன் (Deepa Sashindran) (பிறப்பு 1974 சூலை 3) இவர் ஓர் இந்திய நடனக் கலைஞர் ஆவார். குச்சிபுடி நடனத்தில் நிபுணத்துவம் பெற்ற திருமதி. மஞ்சு பார்கவியின் பிரதான சீடராக தீபா கருதப்படுகிறார். இவர் இந்திய பாரம்பரிய நடன வடிவத்தின் ஒரு பகுதியான குச்சிப்புடி நடனக் கலை ஆசிரியராகவும், ஊக்குவிப்பாளராகவும் மற்றும் தொழில்முனைவோராகவும் உள்ளார். [1] [2] [3] [4] [5] [6]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

தீபா ஆரம்பத்தில் புகழ்பெற்ற மேதைகளான கலாமண்டலம் உஷா தாதர் மற்றும் முனைவர் சாவித்ரி ராமையா ஆகியோரின் கீழ் தனது 5வது வயதில் பரதநாட்டியத்தின் பாரம்பரிய நடனத்தை கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். பின்னர் தனது 8வது வயதில், புகழ்பெற்ற குச்சிபுடி நடனத்தில் நிபுணத்துவம் பெற்ற திருமதி.மஞ்சு பார்கவியிடம் முப்பது ஆண்டுகளாக குச்சிபுடி நடனத்தைக் கற்றுக்கொண்டார்.இவர் தற்போது குரு வேம்பதி ரவிசங்கர் அவர்களிடம் பயிற்சி பெறுகிறார் . [7] [8]

தொழில்[தொகு]

நடன நிகழ்ச்சிகள்[தொகு]

தீபா சசீந்திரனின் நடனம் மற்றும் நாடகங்களில் முக்கிய கதாபாத்திரங்கள் எழுதப்பட்டு, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் எண்ணற்ற தனி நடன நிகழ்ச்சிகளை நடந்தி வருகிறார். மேலும், இவரது குருவின் இணை கலைஞராகவும் இருக்கிறார். பல மதிப்புமிக்க திருவிழாக்கள் மற்றும் சந்தர்ப்பங்களில் இவரது குருவுடன் இணைந்து நடன நிகழ்ச்சிகளில் பங்களித்து வருகிறார். [9]

கௌரவங்கள்[தொகு]

கர்நாடக அரசின் குச்சிபுடி உரை புத்தகக் குழு, இவரது நடனப் படங்களை மாநிலத்தின் குச்சிபுடி உரை புத்தகத்தில் இணைத்துள்ளது. [10] [11] வட அமெரிக்காவின் ஹூஸ்டன்-டெக்சாஸில் சமஸ்கிருதி என்ற அமைப்பு ஏற்பாடு செய்த முதல் சர்வதேச குச்சிபுடி நடன மாநாட்டிற்கு இவர் அழைக்கப்பட்டார். மேலும் காகித விளக்கக்காட்சிக்கான தூதுக்குழுவின் ஒரு பகுதியாகவும் இருந்தார். மேலும், தனி நடன நிகழ்ச்சிகளையும் வழங்கினார். [12] [13] [14]

பரம்பரா அறக்கட்டளை[தொகு]

இவர், குச்சிபுடி பரம்பரை என்ற அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார். இந்த அறக்கட்டளை குழுவின் ஒரு பகுதியாக திறமையான ஆலோசகர்களுடன் பெங்களூரில் குச்சிபுடி கலை வடிவத்தை பயிற்றுவிப்பதற்கும் பிரச்சாரம் செய்வதற்கும் சமீபத்தில் கோழிகோட்டில் உள்ள சுவாதி திருநாள் அகாதமியில் ஸ்ரீ கைத்பிரம் தாமோதரன் நம்பூதிரி தலைமையிலான முதன்மை வகுப்புகளை நடத்துவதில் தனது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது. நம்பூதிரி, ஒரு சுயாதீன ஆசிரியராக, செய்துள்ள அவரது சேவைகளை பெங்களூரின் பல மூத்த கலைஞர்கள் பயன்படுத்தினர். [15] பெங்களூரில் மிகவும் எதிர்நோக்கும் நிகழ்வுகளான புதுமையான நடன விழாக்கள், பட்டறைகள் ஆகியவற்றைக் கொண்டுவருவதிலும் இவர் ஈடுபட்டுள்ளார். [16] [17] [18] [19] [20] [21]

விருதுகள்[தொகு]

தெந்நிந்திய மாநிலமான கர்நாடகாவின் யுவரங்காவைச் சேர்ந்த சிறந்த குச்சிபுடி கலைஞர், கட்டாக்கில் நிருத்யா சிரோமணி தேசிய விருது மற்றும் விசாகப்பட்டினத்தில் குச்சிபுடி நடன மேதைகளான பத்மசிரீ சோபா நாயுடு வழங்கிய சத்தியபாமா விருது போன்ற பல பட்டங்கள் மற்றும் விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன. 1995 ஆம் ஆண்டில் இவர் தூர்தர்சன் தொலைக்காட்சியில் அங்கீகாரம் பெற்ற கலைஞராகவும் இருந்தார் [22] [23] [24]

இவர், நடனத்தைத் தவிர, தொழில்துறை உறவுகள் மற்றும் தனிநபர் நிர்வாகத்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்துள்ளார். மேலும், இவர், சட்ட பட்டதாரியும் ஆவார். மென்பொருள் துறையில் மனித வள நிபுணர் மற்றும் தற்போது மனித மூலதன மேலாண்மை சேவைகளில் ஒரு தொழில்முனைவோராகவும் மற்றும் கர்மா கிரியேட்டர்ஸ் எனற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். [25] [26] [27]

குறிப்புகள்[தொகு]

 1. News The Hindu - 22 August 2014
 2. "Website Narthaki". Archived from the original on 12 July 2015. பார்க்கப்பட்ட நாள் 12 April 2015.
 3. "Website Thiraseela". Archived from the original on 2019-01-08. பார்க்கப்பட்ட நாள் 2020-02-01.
 4. "Official Website". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2020-02-01.
 5. Government of India - CCRTIndia - Profile
 6. Website High Beam
 7. News The Hindu - 22 August 2014
 8. "Official Website". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2020-02-01.
 9. "Official Website". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2020-02-01.
 10. "Website Thiraseela". Archived from the original on 2019-01-08. பார்க்கப்பட்ட நாள் 2020-02-01.
 11. "Official Website". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2020-02-01.
 12. "Website Thiraseela". Archived from the original on 2019-01-08. பார்க்கப்பட்ட நாள் 2020-02-01.
 13. "Official Website". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2020-02-01.
 14. Government of India - CCRTIndia - Profile
 15. "Official Website". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2020-02-01.
 16. Government of India - CCRTIndia - Profile
 17. News Deccan Herald - 17 May 2012
 18. "Website Thiraseela". Archived from the original on 2019-01-08. பார்க்கப்பட்ட நாள் 2020-02-01.
 19. "Official Website". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2020-02-01.
 20. "Website Celebrity Portal". Archived from the original on 2015-04-12. பார்க்கப்பட்ட நாள் 2020-02-01.
 21. This Week Bangalore News
 22. Government of India - CCRTIndia - Profile
 23. "Website Thiraseela". Archived from the original on 2019-01-08. பார்க்கப்பட்ட நாள் 2020-02-01.
 24. "Official Website". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2020-02-01.
 25. "Website Thiraseela". Archived from the original on 2019-01-08. பார்க்கப்பட்ட நாள் 2020-02-01.
 26. "Official Website". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2020-02-01.
 27. Government of India - CCRTIndia - Profile

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Deepa Sashindran
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Performance videos

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபா_சசீந்திரன்&oldid=3558660" இலிருந்து மீள்விக்கப்பட்டது