தீபக் தேவராணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீபக் தேவ்ராணி
சுய தகவல்கள்
பிறந்த நாள்10 அக்டோபர் 1992 (1992-10-10) (அகவை 31)
பிறந்த இடம்புது தில்லி, இந்தியா
உயரம்1.80 m (5 அடி 11 அங்) (5 அடி 11 அங்)
ஆடும் நிலை(கள்)தடுப்பாட்ட வீரர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
கோகுலம் கேரள கால்பந்து சங்கம்
இளநிலை வாழ்வழி
ஈஸ்ட் பெங்கால் அணி
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2010–2013பைலான் ஏரோஸ்23(4)
2013–2014ஸ்போர்ட்டின் கோவா அணி11(2)
2014–2015புனே நகர கால்பந்து சங்கம்0(0)
2015→ மோகன் பகான்0(0)
2016−2019மினர்வா பஞ்சாப்21(0)
2019−டிஆர்ஏயு அணி12(1)
2020–கோகுலம் கேரள கால்பந்துச் சங்கம்4(0)
பன்னாட்டு வாழ்வழி
2007–200916 வயதுக்குட்பட்டோருக்கான
இந்திய அணி
9(2)
2009–201019 வயதுக்குட்பட்டோருக்கான
இந்திய அணி
7(0)
2011–23 வயதுக்குட்பட்டோருக்கான
இந்திய அணி
5(0)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 13:21 , 11 அக்டோபர் 2019 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 13:21 , 11 அக்டோபர் 2019 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.

தீபக் தேவராணி (Deepak Devrani) ஐ-லீக்கில் கோகுளம் கேரள கால்பந்து அணிக்காக விளையாடும் தொழில்முறை கால்பந்து தடுப்பாட்ட வீரர் ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

முதலில் பந்தை உதைக்கத் தொடங்கியபோது தேவராணிக்கு சுமார் 12 வயதே ஆகியிருந்தது. தில்லியின் ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் இவர் முதலில் கால்பந்து விளையாடத் தொடங்கினார். அங்கு இவரது முதல் பயிற்சியாளராக நிர்மல் சிங் என்பவர் இருந்தார். பின்னர் இவர் டி.டி.ஏ யமுனா நகர் அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டார், அங்கு இவர் பயிற்சியாளர்களான நவீன் காண்ட்வால் என்பவரிடமும், இரஞ்சித் தாபா என்பவரிடமும் பயிற்சி பெற்று விளையாடினார். 2007 இல், இவர் சண்டிகர் கால்பந்து கழகத்திற்கு மாறினார். 16 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளிலிருந்து, இவர் தேசிய அணிக்காக விளையாடி வருகிறார்.

ஒரு இளைஞராககிழக்கு வங்க கால்பந்து சங்கத்துடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். கிழக்கு வங்காளத்திற்கான விளையாடும் வாய்ப்பு கிட்டாததால், பைலான் ஏரோஸ் அணிக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்றார்.[1]

போட்டிகள்[தொகு]

கிழக்கு வங்க இளைஞர் அமைப்பில் பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஐ-லீக்கில் விளையாடிய மற்றும் 2018 உலகக் கோப்பைக்கு வீரர்களைத் தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பைலான் எரோஸ் அணிக்காக தேவ்ரானி அனுப்பப்பட்டார். 2010-11 பருவத்தில், இவர் ஐந்து முறை மட்டுமே விளையாடினார். 2011-12 ஐ-லீக்கின் பைலானின் முதல் 20 ஆட்டங்களில் முழங்கால் காயம் ஏற்பட்டதால் தேவ்ரானி தனது வாய்ப்பைத் தவறவிட்டார். அதில் பைலான் ஒரு போட்டியில் கூட வெல்லவில்லை. இவர் மார்ச் 25, 2012 அன்று விளையாடினார்.[2]

2012 இந்தியக் கூட்டமைப்புக் கோப்பை போட்டியின் போது மும்பைக்கு எதிராக செப்டம்பர் 21, 2012 அன்று பைலான் ஏரோஸுக்காக தேவ்ரானி தனது முதல் கோலை அடித்தார். அதில் பைலான் சமநிலையை அடைந்தது போட்டியை 2–2 என்ற கணக்கில் இருந்தது.[3] தேவ்ராணி தனது முதல் ஐ-லீக் கோலை 2012 டிசம்பர் 1 ஆம் தேதி ஓ.என்.ஜி.சி கால்பந்து அணிக்கு எதிராக அடித்தார். இவர் 10 வது நிமிடத்தில் கோல் அடித்தபோது பைலானுக்கு 4-1 என்ற கணக்கில் பைலான் முன்னிலை வகித்தது.[4] எவ்வாறாயினும், திசம்பர் 30, 2012 அன்று கிழக்கு வங்காள கால்பந்து அணிக்கு எதிரான போட்டியின் 2 வது நிமிடத்தில் காயமடைந்த நிலையில் தேவ்ரானி வெளியேறினார். [5]

கோவா அணியில்[தொகு]

2013 சூலை 18 அன்று, தேவ்ராணி கால்பந்தாட்ட வீரர் இரவி குமாருடன் ஸ்போர்ட்டிங் கோவா அணிக்காக ஒப்பந்தம் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது.[6] இரவி குமார் 2013 அக்டோபர் 24 அன்று ஐ-லீக்கில் ஸ்போர்ட்டிங் கோவாவுக்காக அறிமுகமானார். அதில் அவர் முழு ஆட்டத்திலும் விளையாடி 30 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்திருந்தார். அணி 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது. [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Olympic goal for Deepak". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 16 September 2012.
  2. Srivastava, Ayush. "Pune FC 1-0 Pailan Arrows: The Red Lizards edge past the toothless Kolkatan outfit". Goal.com. Archived from the original on 26 April 2012. பார்க்கப்பட்ட நாள் 16 September 2012.
  3. "Pailan Arrows 2-2 Mumbai FC: Four goal thriller ends in a stalemate". Goal.com. Archived from the original on 22 செப்டெம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 26 திசம்பர் 2012.
  4. Bera, Kaustav. "Pailan Arrows 4-1 ONGC FC: Papas' boys trounce 10-man ONGC with ease". Goal.com. பார்க்கப்பட்ட நாள் 26 December 2012.
  5. Mitra, Atanu. "East Bengal 3-0 Pailan Arrows: Trevor Morgan's side dismantle the Arrows with ease". Goal.com. Archived from the original on 2 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 1 January 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Sporting Clube de Goa unveil former Pailan Arrows duo - Deepak Devrani & Ravi Kumar". Archived from the original on 3 December 2013. பார்க்கப்பட்ட நாள் 25 November 2013.
  7. "Sporting Goa v. Rangdajied United 3-0". Soccerway.com. பார்க்கப்பட்ட நாள் 25 November 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபக்_தேவராணி&oldid=3748114" இலிருந்து மீள்விக்கப்பட்டது