தீன் விளக்கம்
Appearance
தீன் விளக்கம் என்பது 19-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இசுலாமியத் தமிழ்க் காப்பியம் ஆகும். இதை மீசல் வண்ணக் களஞ்சியப் புலவர் இயற்றினார். இந்த இலக்கியம் இசுலாமை தமிழகத்திற்குப் பரப்ப மதீனாவில் இருந்து வந்த செய்யிது இப்ராகீமைப் பற்றிக் விளக்குகிறது. இவர் பாண்டி நாடு வந்து, அதை ஆண்டு வந்த விக்கிரம பாண்டியனைப் போரில் வென்ற வரலாற்றுக் கதையையும் இது கூறுகிறது.
எடுத்துக்காட்டு - வீரர்களின் எழுச்சி
[தொகு]வடவைபோல் கொதிப்பன்
சண்டமாருதம் போல்எதிர்ப்பன்
இடிகள்போல் எதிர்ப்பன்
போரில் ஏழுலகம் இவனுக்கு ஈடோ
கடிதினில் எதிர்த்து
யானும் கையிழந்தேன் இங்கே
உடல் உயிரொடுமே சேர்ந்தது
ஊன்றிய விதி ஒன்றாமே
- (ஒன்பதாம் போர்புரி படலம் -44(253)