தீன் முரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித தாமஸ் கிறிஸ்தவ சிலுவை

தீன்முரா என்பது இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த செயிண்ட் தாமஸ் கிறிஸ்தவர்களின் பாரம்பரிய விருந்தாகும் . இந்தப் பண்டிகை கால தீன்முரா, ஓர் அசைவ விருந்து சாப்பாட்டு வகையாகும். ஓணம் பண்டிகையின் போது பரிமாறப்படும் சைவ விருந்தான சத்யாவிலிருந்து தீன்முரா முற்றிலும் வேறுபட்ட விருந்தாகும். இது பொதுவாக கிறிஸ்துமஸ், ஈஸ்டர், நல்பிறவி, பிண்டிக்குதி பெருநாள், துக்ரானா போன்ற கிறிஸ்தவ பண்டிகைகளிலும், திருமணம், ஞானஸ்நானம், மற்றும் நிச்சயதார்த்தம் போன்ற கிறிஸ்தவர்களின் குடும்ப விழாக்களிலும் பரிமாறப்படுகிறது. [1] [2]

ஒரு வழக்கமான தேன்முரா, ஒயின் உடன் கேக், சல்லாஸுடன் (ஒரு வகையான சாலட் ) இறைச்சி கட்லெட், ஆப்பம், பரோட்டா, இறைச்சி இளம் குழம்பு, [3] மீன் மொல்லி, புழுங்கல் அரிசி சாதம், மலபார் மத்தி கறி மற்றும் மாட்டிறைச்சி விண்டலூ ஆகியன அடங்கும். தேவைக்கேற்ப உணவு பட்டியல் விரிவாகும். [4] [2] [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Christmas Special - The Hindu". www.thehindu.com (in ஆங்கிலம்). 10 September 2020. Archived from the original on 10 September 2020. பார்க்கப்பட்ட நாள் 10 September 2020.
  2. 2.0 2.1 Some Authentic Christian Flavours for this Christmas Kerala Tourism.org Kerala Tourism Newsletter Issue 303, November 2018
  3. "Old Delhi Style Mughlai Mutton Stew Recipe". Whisk Affair (in ஆங்கிலம்). 2018-05-28. பார்க்கப்பட்ட நாள் 2021-05-14.
  4. "Christmas at Ente Keralam with Festive Theen Mura Menu". www.indiainfoline.com (in ஆங்கிலம்). Archived from the original on 10 September 2020. பார்க்கப்பட்ட நாள் 10 September 2020.
  5. "Beef Vindaloo". Nish Kitchen (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-04-09. பார்க்கப்பட்ட நாள் 2021-05-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீன்_முரா&oldid=3661666" இலிருந்து மீள்விக்கப்பட்டது