தீனிப்பை பால்

தீனிப்பை பால் (Crop milk) என்பது சில பறவைச் சிற்றினங்களில் தாய்ப் பறவைகளின் தீனிப்பையிலிருந்து இளம் பறவைகளுக்காக எதிர்க்களித்து வெளியேற்றும் ஒரு சுரப்பாகும். இது அனைத்து வகையான புறாக்களிலும் காணப்படுகிறது. இச்சுரப்பு புறா பால் என்று குறிப்பிடப்படுகிறது. தீனிப்பை பால் பூநாரைகள், ஆண் பேரரசப் பென்குயின் தீனிப்பையிலிருந்தும் சுரக்கப்படுகிறது. இந்த பண்பு பரிணாமத் தோற்றத்தின் போது தனித்தனியாகத் தோன்றியதாகப் பரிந்துரைக்கப்படுகிறது.[1][2][3][4] பொதுவாகப் பாலூட்டிகளில் பெண் உயிரிகள் மட்டுமே பால் உற்பத்தி செய்யும் நிலை போலல்லாமல், தீனிப்பையிலிருந்து ஆண், பெண் என இருபால் உயிரிகளாலும் தீனிப்பை பால் உற்பத்தி செய்யப்படுகிறது. புறாக்களிலும் பூநாரைகளிலும் இருபால் உயிரிகளும் தீனிப்பை பாலினை உற்பத்தி செய்யும் நிலையில் பென்குயினில் ஆண்கள் மட்டுமே தீனிப்பை பாலினை உற்பத்தி செய்கிறது.[5] பறவைகளில் பாலூட்டுதல் புரோலாக்டின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இது பாலூட்டிகளிலும் பாலூட்டலைக் கட்டுப்படுத்தும் கார்மோன் ஆகும் [6][5] தீனிப்பை பால் ஒரு சுரப்பிக்குமிழி சுரப்பாகும். பாலூட்டிகளில் இது புறச்சுரப்பி சுரப்பாகும்.[5] தீனிப்பை பாலில் பாலூட்டிகளைப் போலவே கொழுப்பு மற்றும் புரதம் இரண்டும் உள்ளன. ஆனால் பாலூட்டிகளின் பாலைப் போலல்லாமல், இதில் மாவுச்சத்துக்கள் இல்லை.[5]
புறா பால்
[தொகு]தீனிப்பை பால் பாலூட்டிகளின் பாலுடன் இயற்பியல் ரீதியான ஒற்றுமையைக் கொண்டிருக்கவில்லை. இருப்பினும் புறாக்களில் இது கலவையாக ஒத்திருக்கிறது.[4] புறா பால் என்பது வெளிர் மஞ்சள் நிறத்தில் பாலாடைக்கட்டி போன்ற பகுதி திடமான பொருளாகும். இதில் புரதமும் கொழுப்பும் அதிகமாக உள்ளது. இதிலுள்ள கொழுப்பு, பசு அல்லது மனிதப் பாலை விட அதிக அளவில் உள்ளது.[7] 1939ஆம் ஆண்டு புறாவின் தீனிப்பை பால் குறித்த ஆய்வின் மூலம் இப்பாலில் பாலூட்டிகளின் பாலில் காணப்படும் மாவுச்சத்து இல்லை என்பது தெரியவந்தது.[8] இந்தப் பால் நோய் எதிர்ப்புச் சக்தியில் பங்களிக்கும் ஆக்சிசனேற்ற எதிர்ப்புக்கள் மற்றும் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் காரணிகளைக் கொண்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.[9] பாலூட்டிகளின் பாலைப் போலவே, தீனிப்பை பாலிலும் ஏ-வகை நோயெதிர்ப்பொருட்கள் உள்ளன. இதில் சில பாக்டீரியாக்களும் உள்ளன.[6] ஒரு பாலூட்டிகளின் பாலைப் போலல்லாமல், புறாவின் தீனிப்பை பால், புரதம், கொழுப்பு நிறைந்த உயிரணுக்களைக் கொண்டுள்ளது. இந்த உயிரணுக்கள் தீனிப்பையினைச் சூழ்ந்துள்ள படலத்தில் பெருக்கமடைந்து பிரிந்து தீனிப்பை பாலில் கலக்கின்றன.[10]
முட்டைகள் பொரிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு புறா பால் உற்பத்தியினைச் செய்யத் தொடங்குகிறது. இக்காலத்தில் பெற்றோர்கள் உணவு உண்பதை நிறுத்திக்கொள்கின்றன. இதனால் குஞ்சுகளுக்கு விதைகளால் மாசுபடாத பாலை வழங்க முடியும். மேலும் விதைகள் இளம் குஞ்சுகளால் செரிமானம் செய்ய இயலாது. குஞ்சுகள் பொரித்து ஒரு வாரத்திற்கு அல்லது 10 முதல் 14 நாட்களுக்குத் தூய தீனிப்பை பால் வழங்கப்படுகிறது. இதற்குப் பிறகு, பெற்றோர்கள் வயது முதிர்ச்சியடைந்த புறாக்களின் உணவினைத் தனது தீனிப்பையில் அரைத்து, மென்மையாக்கி தீனிப்பை பால் கலந்து, இரு வாரங்களுக்கு உணவளிக்கின்றனர்.
பொதுவாகப் புறாக்கள் இரண்டு முட்டைகளை இடும். ஒரு முட்டை பொரிவதில் தோல்வியுற்றால், எஞ்சியிருக்கும் முட்டையிலிருந்து தோன்றும் உயிரி இரண்டு குஞ்சுகளுக்குப் போதுமான தீனிப்பை பாலினைப் பெற்று வேகமாக வளரும்.[11] ஆனால் இரண்டிற்கு மேற்பட்ட குஞ்சுகள் வளரும் போது ஓர் இணை இனப்பெருக்கப் புறாக்கள் இவற்றிற்கு உணவளிக்கப் போதுமான தீனிப்பை பாலை உற்பத்தி செய்ய முடியாது என்று ஆராய்ச்சி கூறுகிறது.[12]
பிற பறவைகள்
[தொகு]
தீனிப்பை பால் பூநாரை மற்றும் ஆண் பேரரசப் பென்குயின் தனித்தனியாகப் பரிணாம வளர்ச்சியின் போது உருவானது.[1][2][3][4] பூநாரையின் முதல் வாரங்களில் உற்பத்தி செய்யப்படும் தீனிப்பைப் பால் பிரகாசமான சிவப்பு நிறத்தில், ஒப்பீட்டளவில் அடர்த்தி குறைவான திரவமாகும்.[5] இது இரத்தச் சிவப்பு நிறத்தை ஒத்திருந்தாலும், இதில் சிவப்பு இரத்த அணுக்கள் இல்லை-சிவப்பு நிறம் கேந்தாசாந்தினால் ஏற்படுகிறது.[5] முதல் சில வாரங்களுக்குப் பிறகு, இந்நிறம் படிப்படியாக மங்குகிறது. பூநாரைகள் தமது இளம் பருவத்தில் முதல் 6 மாதங்கள் வரை தீனிப்பை பாலை உற்பத்தி செய்கின்றன.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. ISBN 0-85390-013-2.
- ↑ 2.0 2.1 Silver, Rae (1984). "Prolactin and Parenting in the Pigeon Family". The Journal of Experimental Zoology 232 (3): 617–625. doi:10.1002/jez.1402320330. பப்மெட்:6394702. http://www.columbiauniversity.org/cu/psychology/silver/publications/035Silver%201984.PDF.
- ↑ 3.0 3.1 Eraud, C.; Dorie, A.; Jacquet, A.; Faivre, B. (2008). "The crop milk: a potential new route for carotenoid-mediated parental effects". Journal of Avian Biology 39 (2): 247–251. doi:10.1111/j.0908-8857.2008.04053.x. https://hal.archives-ouvertes.fr/hal-00294461/file/Eraud2008.pdf.
- ↑ 4.0 4.1 4.2 Ornithology, British Trust for (2012-08-22). "Crop milk". BTO - British Trust for Ornithology (in ஆங்கிலம்). Retrieved 2023-04-30.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 Ann M. Ward, Amy Hunt, Mike Maslanka, and Chris Brown, Nutrient Composition Of American Flamingo Crop Milk (PDF)
{{citation}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ 6.0 6.1 Gillespie, M. J.; Stanley, D.; Chen, H.; Donald, J. A.; Nicholas, K. R.; Moore, R. J.; Crowley, T. M. (2012). Salmon, Henri. ed. "Functional Similarities between Pigeon 'Milk' and Mammalian Milk: Induction of Immune Gene Expression and Modification of the Microbiota". PLOS ONE 7 (10): e48363. doi:10.1371/journal.pone.0048363. பப்மெட்:23110233. Bibcode: 2012PLoSO...748363G.
- ↑ Ehrlich, Paul R.; Dobkin, David S.; Wheye, Darryl (1988), "Bird Milk", stanford.edu
- ↑ Davis, W.L. (1939). "The Composition of the Crop Milk of Pigeons". Biochem. J. 33 (6): 898–901. doi:10.1042/bj0330898. பப்மெட்:16746989.
- ↑ Mysteries of pigeon milk explained, archived from the original on 2011-09-24
- ↑ Gillespie, M. J.; Haring, V. R.; McColl, K. A.; Monaghan, P.; Donald, J. A.; Nicholas, K. R.; Moore, R. J.; Crowley, T. M. (2011). "Histological and global gene expression analysis of the 'lactating' pigeon crop". BMC Genomics 12: 452. doi:10.1186/1471-2164-12-452. பப்மெட்:21929790.
- ↑ Vandeputte-Poma, J.; van Grembergen, G. (1967). "L'evolution postembryonnaire du poids du pigeon domestique" (in fr). Zeitschrift für vergleichende Physiologie 54 (3): 423–425. doi:10.1007/BF00298228.
- ↑ Blockstein, David E. (1989). "Crop milk and clutch size in mourning doves". The Wilson Bulletin 101 (1): 11–25. "The fact that none of the nearly 300 species of Columbiformes has a clutch size larger than two eggs suggests that there is limited plasticity in crop-milk production.".