உள்ளடக்கத்துக்குச் செல்

தீனா பொலுவார்த்தே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீனா பொலுவார்த்தே
Dina Boluarte
பெருவின் அரசுத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 திசம்பர் 2022
முன்னையவர்பேதுரோ காசுத்தீலியோ
பெருவின் முதல் துணைத் தலைவர்
பதவியில்
28 சூலை 2021 – 7 திசம்பர் 2022
குடியரசுத் தலைவர்பேதுரோ காசுத்தீலியோ
வளர்ச்சி மற்றும் சமூக உள்ளடக்க அமைச்சர்
பதவியில்
29 சூலை 2021 – 26 நவம்பர் 2022
குடியரசுத் தலைவர்பேதுரோ காசுத்தீலியோ
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
தீனா எர்சீலியா பொலுவார்த்தே செகாரா

31 மே 1962 (1962-05-31) (அகவை 62)
சால்குவாங்கா, பெரு
அரசியல் கட்சிசுதந்திரப் பெரு (2022 இற்கு முன்னர்)
சுயேச்சை (2022 முதல்)
கல்விசான் மார்ட்டின் டி போரெசு பல்கலைக்கழகம் (இ.க. (சட்டம்))
கையெழுத்து

தீனா எர்சீலியா பொலுவார்த்தே செகாரா (Dina Ercilia Boluarte Zegarra; பிறப்பு: 31 மே 1962) பெருவின் வழக்கறிஞரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் 2022 திசம்பர் 7 முதல் பெருவின் அரசுத்தலைவராகப் பதவியில் உள்ளார். அரசுத்தலைவர் பேதுரோ காசுத்தீலியோ பெருவின் நாடாளுமன்றத்தைக் கலைக்க முயன்று தோல்வியடைந்ததைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தினால் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து துணைத் தலைவராகப் பதவியில் இருந்த தீனா பொலுவார்த்தே அரசுத்தலைவராக நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்டார். பெருவின் அரசுத்தலைவரான முதல் பெண்மணி இவர் ஆவார்.

2007 முதல் பொலுவார்த்தே துணை அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் வரை, தேசிய அடையாள மற்றும் குடிமை நிலைப் பணியகத்தில் வழக்கறிஞராகவும், பின்னர் அதன் தலைவராகவும் பணியாற்றினார்.[1] லிமா நகர முதல்வர் பதவிக்கு சுதந்திரப் பெரு கட்சியின் வேட்பாளராக 2018 இல் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[2][3] 2020 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[2][3]

2021 சூலையில் பேதுரோ காசுத்தீலியோவின் அமைச்சரவையில், அபிவிருத்தி, மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[4]

2022 திசம்பரில், பெருவின் அரசியல் நெருக்கடியின் போது, அரசுத்தலைவர் பேதுரோ காசுத்தீலியோ தனக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளின் போது பெருவின் நாடாளுமன்றத்தைக் கலைக்க முயன்றபோது, பொலுவார்த்தே இந்த நடவடிக்கையை "அரசியலமைப்பு ஒழுங்கின் முறிவு" என்று கண்டித்தார். காசுத்தீலியோ பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் பொலுவார்த்தே பெருவின் புதிய அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றார்.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Quién es Dina Boluarte, la vicepresidenta del gobierno de Pedro Castillo". El Popular. 29 July 2021. பார்க்கப்பட்ட நாள் 29 September 2021.
  2. 2.0 2.1 "Dina Boluarte: biografía de la candidata a la vicepresidencia por Perú Libre" (Video). Panamericana Televisión. 11 April 2021. பார்க்கப்பட்ட நாள் 6 May 2021.
  3. 3.0 3.1 "Abogada Dina Boluarte Zegarra precandidata a primera vicepresidencia por el partido Perú Libre". radiotitanka.pe. 27 October 2020. பார்க்கப்பட்ட நாள் 6 May 2021.
  4. {{Cite web|url=https://andina.pe/agencia/noticia-dina-boluarte-jura-como-ministra-desarrollo-e-inclusion-social-855559.aspx |title=Dina Boluarte jura como ministra de Desarrollo e Inclusión Social |website=andina.pe |location=Lima |date=29 July 2021 |access-date=16 August 2021
  5. Peru President Pedro Castillo calls to dissolve Congress, அல் ஜசீரா, December 7, 2022
  6. Peru’s Dina Boluarte Sworn in as First Female President After Castillo Exit Bloomberg. Retrieved 8 December 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீனா_பொலுவார்த்தே&oldid=3690899" இலிருந்து மீள்விக்கப்பட்டது