தீத்தால் கடற்கரை
Appearance
தீத்தால் கடற்கரை | |
---|---|
சூரிய மறைவு, தீத்தால் கடற்கரை | |
![]() | |
வகை | கருப்பு மணல் கடற்கரை |
அமைவிடம் | அரபிக்கடல், தீத்தால், வல்சாடு மாவட்டம், குசராத்து |
அண்மைய நகரம் | வல்சாடு |
ஆள்கூறு | 20°35′53.6″N 72°53′41″E / 20.598222°N 72.89472°E |


தீத்தால் கடற்கரை (Tithal Beach) என்பது குசராத்து மாநிலத்தில் அரபிக்கடலின் கரையோரத்தில் வல்சாடு என்ற இடத்தில் அமைந்துள்ளது. கடற்கரை மணல் கருப்பு நிறமுடையது.[1] தித்தால் கடற்கரை வல்சாடு மாவட்டம் மற்றும் குசராத்தின் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். சமீபத்தில், விசைப் படகுகள், ஜெட் ஸ்கை போன்ற நீர் விளையாட்டுகள் கடற்கரையில் தொடங்கப்பட்டுள்ளன. சிறீசீரடி சாய்பாபா கோயில், சிறீசுவாமிநாராயண் கோயில் போன்ற மற்ற சுற்றுலாத் தலங்களும் தீத்தால் கடற்கரையில் உள்ளன.
தீத்தால் கடற்கரை விழா மற்றும் பன்னாட்டு காற்றாடி திருவிழா ஆகியவை இக்கடற்கரையின் பிரபலத்தின் காரணமாக இங்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District Census Handbook - Valsad" (PDF). Census of India. p. 5. Retrieved 16 February 2016.