தீத்தடுப்பு கோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அமெரிக்காவின், நியூ செர்சியில் உள்ள பைன் மரக்காட்டில் காட்டுத்தீ பரவாமல் இருக்க அமைக்கப்பட்டுள்ள ஒரு தீத்தடுப்புக் கோடு

தீத்தடுப்பு கோடு (Firebreak ) என்பது வனப்பகுதிகளில் காட்டுத்தீ பரவுவதை தடுக்க ஆண்டுதொறும் வனத்துறையால் மேற்கோள்ளும் ஒரு முன்னெச்சரிக்கைப் பணியாகும். மழைக்காலங்களில் காட்டில் தாவரங்கள் செழித்து அடர்ந்து வளரும் பின்னர் கோடைக் காலம் தொடங்கும்போது இலைகள் உதிரந்தும் காய்ந்தும் எளிதில் தீப்ப்பற்றும் நிலையை அடையும். இக்காலகட்டத்தில் எல்லைக் காட்டில் தீபிடித்தால் அங்கிருந்து உள்காட்டிற்கு தீ பரவி பெரும் சேதம் ஏற்படும். இதைத் தடுக்கும் ஒரு முயற்சியாக, எல்லை வனப்பகுதியில் இருந்து சற்று தாண்டி உள் பகுதியில் உள்ள வனத்தில் நாற்பது ஐம்பது அடி அகலத்திற்கு அங்குள்ள புற்கள், சிறு தாவரங்கள், சருகுகள், சுள்ளிகள் போன்றவற்றை வெட்டி அகற்றியோ அல்லது எரித்தோ ஒரு பாதை போல வனப்பகுதியைச் சுற்றி பல கிலோமீட்டர் நீளத்திற்கு வெற்றுத் தரையை உருவாக்குவர். மேலும் வனப்பகுதியினுள் அல்லது வனப்பகுதியை ஒட்டி செல்லும் சாலை ஓரமாக உள்ள காட்டுப் பகுதியிலும் தீதடுப்புக் கோடுகள் அமைக்கப்படுகின்றன. இப்பணி பெரும்பாலும் கோடைக்காலம் துவங்குவதற்கு முன் செய்வர். ஏனெற்றால் கோடைக்காலத்தில்தான் வறட்சியினால் பெரும்பாலும் காட்டுத்தீ பரவும் இதனால் காட்டின் எல்லைப் பகுதியில் மனிதர்களாலோ அல்லது வேறு காரணங்களாலோ தீ மூண்டால் அது உள்காட்டிற்கு, தீத்தடுப்பு கோட்டைத் தாண்டி உள்ளே வர இயலாது. இதனால் பெரும் அழிவு தடுக்கப்படும்.[1]

தற்கால இலக்கியத்தில்[தொகு]

கி. ராஜநாராயணனின் முதல் புதினமான கோபல்ல கிராமத்தில் தெலுங்கு தேசத்திலிருந்து அக்காலத்தில் தென் தமிழகத்துக்கு வந்து குடியேறும் தெலுங்கு மக்கள் தங்களுக்கு தேவைப்படும் வேளாண் நிலங்களுக்காக வனத்தை தீவைத்து அழிக்கும் முன்பு தங்களுக்கு தேவைப்படும் இடத்தைத் தாண்டி தீ பரவாமல் தடுக்க வனத்தில் தீத்தடுப்புக் கோடுகளை அமைப்பதாக சித்தரித்து உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "முதுமலை புலிகள் காப்பகத்தில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி மும்முரம்". செய்தி. தினத்தந்தி. 2017 பெப்ரவரி 4. 22 பெப்ரவரி 2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீத்தடுப்பு_கோடு&oldid=2762272" இருந்து மீள்விக்கப்பட்டது