தீட்டாஹீலிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தீட்டாஹீலிங் என்பது 1994 ஆம் ஆண்டில் வியன்னா ஸ்டிபால் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு சுய உதவி முறை ஆகும். இது மக்கள் தங்களது உடல்நலம், செல்வம் அல்லது அன்பு போன்றவற்றில் தங்கள் இலக்குகளை அடைவதைத் தடுக்கின்ற ஆழ்மனது நம்பிக்கைகளை மாற்ற உதவுகிறது.[1][2]

செயல்படுத்துதல்[தொகு]

தீட்டாஹீலிங் என்பது ‘நம்பிக்கையே தீர்வு அளிக்கிறது’ எனப்படும் தனிப்பட்ட அமர்வுகளின் வடிவத்தில் பயன்படுத்தப்படுகிறது, இதில் வாடிக்கையாளரும் தீட்டா பயிற்சியாளரும் ஒருவருக்கொருவர் நேருக்கு நேராக அல்லது தொலைபேசியில் அமர்ந்திருக்கிறார்கள். இது தினசரி சுய தியானம் மற்றும் தன்னைத்தானே உள்ளாய்வு செய்யும்  ஒரு வழியாகவும் பயன்படுத்தப்படலாம்.[3][4]

‘நம்பிக்கைகள்’ என அழைக்கபடும் அடிப்படை, மரபணு, வரலாறு மற்றும் ஆன்மா அடிப்படையிலான ஆழ்மனதில் இருக்கக்கூடியவனவற்றை  பங்கேற்பாளர் கண்டுபிடித்து மாற்ற முடியும் என்பது இதன் கருத்து ஆகும்.[2][4]

ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்துவதே இதன் குறிக்கோள் ஆகும். வியன்னா கூறுவது போல், "நம்பிக்கை தீர்வு அளிக்கும்" என்பது எதிர்மறையான சிந்தனை முறைகளை மாற்றி ஆக்கபூர்வமான மற்றும் நன்மை பயக்கும் திறனை நமக்கு அளிக்கிறது. [5]

தத்துவம்[தொகு]

வியன்னா ஸ்டிபலின் கருத்துப்படி, தீட்டாஹீலிங் தத்துவம் 'ஏழு வளர்ச்சி நிலைகளை ' மையமாகக் கொண்டுள்ளது, இது 'ஏழாவது வளர்ச்சி நிலை அனைத்தையும் உருவாக்கியவர்' என்பதன் முக்கியத்துவத்தைக் காட்டுவதற்கான ஒரு கட்டமைப்பைக் அளிக்கும். மேலும் இது 'அன்பு மற்றும் நுண்ணறிவின் இடம்' என்றும் விவரிக்கப்படுகிறது.[6][7] அணுக்கள் மற்றும் துகள்களின் இயக்கத்துடன் தொடர்புடைய ஏழு வளர்ச்சி நிலைகள் பௌதீக மற்றும் ஆன்மீக உலகத்தை விளக்குகின்றன, ஏழாவது வளர்ச்சி நிலைஎல்லாவற்றையும் உருவாக்கும் உயிர் சக்தியாகும்.[8] மேலும், அதன் கருத்துக்களை பெரும்பாலான மதங்களுடைய கருத்துகளுடன் ஒன்றிணைக்க முடியும்.[9]

விமர்சனம்[தொகு]

தீட்டாஹீலிங் தத்துவம் ஆழ்ந்த மற்றும் நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட காரணத்தினால் விமர்சிக்கப்பட்டுள்ளது.[10][11]

மேற்கோள்கள்[தொகு]

 1. D’Silva, Melissa D’Costa (2013-12-15). "Heard about Theta healing?". DNA India (ஆங்கிலம்). 2021-03-27 அன்று பார்க்கப்பட்டது.
 2. 2.0 2.1 . https://books.google.com/?id=V80_CwAAQBAJ&printsec=frontcover&dq=thetahealing#v=onepage&q=thetahealing&f=false. 
 3. BusinessWorld. "The art of healing through thinking and gongs | BusinessWorld" (ஆங்கிலம்). 2021-03-27 அன்று பார்க்கப்பட்டது.
 4. 4.0 4.1 "'Temassız kartları' kullananlar dikkat!". CNN Türk (துருக்கிஷ்). 2021-03-27 அன்று பார்க்கப்பட்டது.
 5. "ThetaHealing: técnica holística e alternativa promete cura energética". Vogue (போர்ச்சுகீஸ்). 2021-03-27 அன்று பார்க்கப்பட்டது.
 6. "Theta healing: Latest in alternative therapy clan - Times of India". The Times of India (ஆங்கிலம்). 2021-03-27 அன்று பார்க்கப்பட்டது.
 7. https://books.google.de/books?id=gsvNwZhezrsC&printsec=frontcover&hl=de&source=gbs_ge_summary_r&cad=0#v=onepage&q&f=false. Missing or empty |title= (உதவி)
 8. "One with the above - The Hindu". web.archive.org. 2020-10-18. Archived from the original on 2020-10-18. 2021-03-27 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link)
 9. "ThetaHealing: técnica holística e alternativa promete cura energética". Vogue (போர்ச்சுகீஸ்). 2021-03-27 அன்று பார்க்கப்பட்டது.
 10. "The Mind Body Soul Experience: a celebration of good posture, human credulousness and the placebo effect". the Guardian (ஆங்கிலம்). 2014-11-09. 2021-03-27 அன்று பார்க்கப்பட்டது.
 11. GmbH, news networld Internetservice (2014-12-12). "Spiritualität - Mystik zwischen Humbug und Lebenshilfe". news.at (ஜெர்மன்). 2021-03-27 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீட்டாஹீலிங்&oldid=3594228" இருந்து மீள்விக்கப்பட்டது