தீச் செடி
Jump to navigation
Jump to search
தீச் செடி[தொகு]
வகைப்பாடு[தொகு]
தாவரவியல் பெயர் : டிட்டாம்னஸ் ஆல்பஸ் Dictamnus albus
குடும்பம் : ரூட்டேசியீ (Rutaceae )
இதரப் பெயர்கள்[தொகு]
- எரிவாயு செடி (Gasplant)
- டிட்டானி (Dittany)
- எரியும் செடி (Burning bush)
செடியின் அமைப்பு[தொகு]
- இச்செடி 2 முதல் 3 அடி உயரம் வளரக்கூடியது. இதன் தண்டு கெட்டியாக இருக்கும். இலைகள் தடிப்பாக கூட்டிலையாக உள்ளது. இதிலிருந்து எலுமிச்சம் பழம் வாசம் வீசுகிறது. பூ வெள்ளை நிறத்தில் மிகவும் அழகாக உள்ளது. பூ வாசனை உடையது.
- இச்செடியின் இலைகளிலிருந்து எண்ணெய் கசிந்து வாயுவாக வெளியேறுகிறது. வறண்ட நாட்களின் மாலை நேரத்தில் திடீரென்று நீலநிறச்சுடர் இதைச் சுற்று தோன்றுகிறது. தீக்குச்சியை இதன் அருகில் கொண்டு சென்றால் நெருப்பு பிடித்து எரியும். அதிகம் வெப்பம் இருக்கும் போது இவை பிடித்து எரியும். செடியிலிருந்து வெளியாகும் எரிவாயுதான் இதற்கு காரணம். தீ பிடித்து எரிந்த பிறகு சூடான ஈரம் ஆவியாகி செடியை குளிர வைக்கிறது. இச்செடியால் சில சமயங்களில் காட்டுத் தீ ஏற்படுகிறது.
இவற்றில் ஒரே ஒரு சாதிச் செடி மட்டுமே உள்ளது. .
காணப்படும் பகுதிகள்[தொகு]
இச்செடி தெற்கு ஐரோப்பாவிலும், வடக்கு சீனாவிலும் வளர்கிறது.
மேற்கோள்[தொகு]
| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001