தீக்சா தாகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீக்சா தாகர்
Diksha Dagar
— குழிப்பந்தாட்டக்காரர் —
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு14 திசம்பர் 2000 (2000-12-14) (அகவை 23)
அரியானா, இந்தியா
தேசியம் இந்தியா
பணிவாழ்வு
தொழில்முறையாக மாறியது2019
தற்போதையச் சுற்று(கள்)பெண்கள் ஐரோப்பியக் கோப்பை
தொழில்முறை வெற்றிகள்2
சுற்றுகளில் வெற்றிகள்
மகளிர் ஐரோப்பியச் சுற்று1
பிற1

தீக்சா தாகர் (Diksha Dagar) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழில்முறை குழிப்பந்தாட்ட வீராங்கனையாவார்.[1] இவர் 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி பிறந்தார்.

காது கேளாத இவர் பல தொழில்சாரா குழிப்பந்து போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். வளர்ந்து வரும் ஒந்திய தொழில்சாரா குழிப்பந்து வீரர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.[2] 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்தியாவின் தொழில்சாரா குழிப்பந்து வீராங்கனைகள் பட்டியலில் இருந்தார்.[3] தீக்சா தாகர் 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெண்கள் தனிநபர் குழிப்பந்தாட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.[4] 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த தகுதி பெற்றார்.[5][6] 2019ஆம் ஆண்டு பெண்கள் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை வென்ற அதிதி அசோக்கிற்குப் பிறகு தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க மகளிர் கோப்பை குழிப்பந்து பட்டத்தை 18வயதில் வென்ற இளைய இந்தியப் பெண்மணி என்ற பெருமையை தீக்சா தாகர் பெற்றுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

தீக்சா 14 டிசம்பர் 2000 அன்று செவிப்புலன் பிரச்சினை கொண்டவராகப் பிறந்தார். ஆறு வயதிலிருந்தே செவிப்புலன் கருவிகளை காதில் அணியத் தொடங்கினார்.[7] சகோதரர் யோகேசு தாகருடன் சேர்ந்து ஏழு வயதிலிருந்தே குழிப்பந்தாட்டம் விளையாடத் தொடங்கினார். சகோதரர் யோகேசு தாகரும்ம் காது கேளாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை நரிந்தர் தாகர் இவர்களைப் பயிற்றுவித்தார்.[8]

சாதனைகள்[தொகு]

  1. 2015 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற கிழக்கிந்திய பெண்கள் மற்றும் இளையோர் பால்டோ தொடரை வென்றார்.
  2. 2016 ஆம் ஆண்டில் சண்டிகர் பெண்கள் மற்றும் இளையோர் குழிப்பந்தாட்டப் போட்டி, பால்டோ தொடர் சாம்பியன் பட்டம், மேற்கு மற்றும் கிழக்கிந்தியப் பெண்கள் மற்றும் இளையோர் குழிபந்தாட்டப் போட்டி ஆகியவற்றை வென்றார். 18 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகத் தரவரிசையில் முதல் 500 பெண்கள் பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்தியப் பெண் என்ற சிறப்பை 2016ஆம் ஆண்டு பெற்றார்[9]
  3. 2017ஆம் ஆண்டில் தெலங்காணா பெண்கள் மற்றும் இளையோர் சாம்பியன் கோப்பை, வடக்கிந்திய பெண்கள் மற்றும் இளையோர் போட்டி மேற்கு இந்திய பெண்கள் மற்றும் இளையோர் போட்டி ஆகியவற்றை வென்றார்.
  4. 2018ஆம் ஆண்டு சிங்கப்பூர் பெண்கள் தொழில் சாரா திறந்த நிலை சாம்பியன் போட்டியை வென்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Diksha Dagar". www.deaflympics.com. பார்க்கப்பட்ட நாள் 15 August 2018.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Bhaduri, Tushar (13 August 2018). "Diksha Dagar, 17, overcomes disability to pursue golf". The Indian Express. https://indianexpress.com/article/sports/asian-games/overcoming-handicap-17-year-old-diksha-dagar-overcomes-disability-to-purse-golf-5303483/. 
  3. "Diksha Dagar". World Amateur Golf Ranking. பார்க்கப்பட்ட நாள் 15 August 2018.
  4. "Indian amateur golfer Diksha Dagar credits dad for her silver win at Deaflympics". Hindustan Times. 28 July 2017. https://www.hindustantimes.com/other-sports/indian-amateur-golfer-diksha-dagar-credits-dad-for-her-silver-win-at-deaflympics/story-ZQUIqD3vOP6UPUVb4f7rfO.html. 
  5. Bhattacharya, Arka (12 August 2018). "Go to US college or turn pro: India's No. 1 amateur golfer Diksha Dagar ponders life beyond Asiad". https://scroll.in/field/890164/go-to-us-college-or-turn-pro-indias-number-one-amateur-diksha-dagar-ponders-life-beyond-asiad. 
  6. "India at Asian Games 2018: Full squad". India Today. 9 August 2018. https://www.indiatoday.in/sports/asian-games-2018/story/india-at-asian-games-2018-full-squad-of-india-1310326-2018-08-09. 
  7. "Dagar Diksha". Asian Games 2018 Jakarta Palembang. Archived from the original on 26 ஆகஸ்ட் 2018. பார்க்கப்பட்ட நாள் 26 August 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "महिला गोल्फर दीक्षा ने कहा- पिता को जाता है मेरी सफलता का श्रेय" (in Hindi). Zee News Hindi. 12 August 2018. http://zeenews.india.com/hindi/sports/indian-amateur-golfer-diksha-dagar-credits-dad-for-success/432133. 
  9. "Diksha Dagar takes the quiet fairway in quest of sporting dream". Hindustan Times. 9 December 2016. https://m.hindustantimes.com/other-sports/diksha-dagar-takes-the-quiet-fairway-in-quest-of-sporting-dream/story-DCHlWtVnj8ZchybhLrg1BJ.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீக்சா_தாகர்&oldid=3558638" இலிருந்து மீள்விக்கப்பட்டது