தி ஹார்டி பாய்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தி ஹார்டி பாய்ஸ் (The Hardy Boyz) என்பது ஒரு தொழில்முறை மல்யுத்த குறிச்சொல் குழுவாகும், இது நிஜ வாழ்க்கை சகோதரர்களான ஜெஃப் மற்றும் மாட் ஹார்டி ஆகியோரைக் கொண்டுள்ளது, அவர்கள் தற்போது உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்துடன் கையெழுத்திட்டு, சுமாக்டவுன் பிரிவில் செயல்படுகிறார்கள்.[1][2] அவர்கள் 1993 ஆம் ஆண்டு முதல் ஒன்றாக கூட்டு சேர்ந்து சுயாதீன போட்டிகளில் பங்கேற்றனர். இவர்கள் முதன்முதலில் வடக்கு கரோலினாவில் நடைபெற்ற என் டபிள்யூ ஏ நிறுவனத்தின் 2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற இணை வாகையாளர் பட்டத்தினை வென்றனர். இவர்கள் இருவரும் 1998 இல் உலக மல்யுத்த பொழுதுபோக்கு நிறுவனத்துடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். 2000 ஆம் ஆண்டில், அவர்கள் லிதாவுடன் இணைந்தனர், மேலும் மூவரும் இணைந்து டீம் எக்ஸ்ட்ரீம் எனும் குழுவினைத் தொடங்கினர். ஜெப்பின் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த அணி தற்போது செயலற்ற நிலையில் உள்ளது.2002 இல் இந்த அணி பிரிந்தது பின்னர், சகோதரர்கள் 2006 இல் மீண்டும் ஒன்றிணைந்தனர். 2014 முதல் 2017 வரை அவ்வப்போது அணியாக சேர்ந்து விளையாடினர்.

தி ஹர்ட் பாய்ஸ் அணியானது உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் சிறப்பு நிகழ்ச்சிகளில் நடைபெறும் டேபிள்ஸ் லேடர்ஸ் அண்ட் சேர்ஸ் போட்டியில் டட்லி பாய்ஸ் மற்றும் எட்ஜ் , கிறிஸ்டியன் ஆகிய இணைகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடியதன் மூலம் பரவலாக அறியப்பட்டனர். இவர்கள் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம், இம்பேக்ட் ரெஸ்லிங் மற்றும் ஆர் ஓ எச் ஆகிய பல நிறுவனங்களில் நடைபெற்ற இணை வாகையாளர் பட்டத்தினை பன்னிரு முறை பெற்றுள்ளனர். இதில் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தில் ஆறு முறை பெற்றுள்ளனர். அதில் குறிப்பாக ரா மற்றும் சுமாக்டவுன் நிகழ்ச்சிகளில் தலா ஒரு முறையும் டபிள்யூ சி டபிள்யூ நிறுவனத்தில் ஒரு முரையும் டி என் ஏ நிறுவனத்தில் இரு முறையும், ஆர் ஓ எச்சில் ஒரு முறையும் வாகையாளர் பட்டங்களைப் பெற்றுள்ளனர். இவ்வாறு அனைத்து நிறுவன இணை வாகையாளர் பட்டஙகளைப் பெற்ற ஒரே இணை வாகையாளர்கள் இவர்களே ஆவர். இதன்மூலம் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த இணை வாகையாளர்களில் ஒரு இணை யாக இவர்கள் கருதப்படுகின்றனர்.

வரலாறு[தொகு]

சுயாதீனப் போட்டி[தொகு]

டிராம்போலைன் மல்யுத்த கூட்டமைப்பில் ஜெஃப் அறிமுகமான பிறகு நிஜ வாழ்க்கை சகோதரர்கள் மாட் மற்றும் ஜெஃப் ஹார்டி 1993 இல் ஒரு குறிச்சொல் குழுவை உருவாக்கினர். அப்போது அந்தக் குழுவின் இதுவாக இருக்கும் என பல செய்திகள் வந்தது. இருவரும் ஒமேகா இணை வாகையாளர் பட்டத்திற்கான போட்டி மற்றும் என் டபிள்யூ ஏ 2000 இணை வாகையாளர் போட்டி போன்றவற்றை நடத்திய பல வட கரோலினிய சுயாதீன விளம்பரங்களில் இவர்கள் பணியாற்றினர்.[3]

எக்ஸ்ட்ரீம் அணி[தொகு]

2000 ஆம் ஆண்டில், அவர்கள் லிதாவுடன் இணைந்தனர், மேலும் மூவரும் இணைந்து டீம் எக்ஸ்ட்ரீம் எனும் குழுவினைத் தொடங்கினர்.[4] 2000 ஆம் ஆண்டில் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் சிறப்பு நிகழ்ச்சிகளில் நடைபெறும் டேபிள்ஸ் லேடர்ஸ் அண்ட் சேர்ஸ் போட்டியில் டட்லி பாய்ஸ் மற்றும் எட்ஜ் , கிறிஸ்டியன் ஆகிய இணைகளுக்கு எதிராக பல போட்டிகளில் விளையாடினர்.

சான்றுகள்[தொகு]

  1. "Jeff Hardy".
  2. "Matt Hardy".
  3. "Hardy Boyz Profile". Online World of Wrestling. பார்க்கப்பட்ட நாள் January 20, 2008.
  4. Hardy, Jeff; Hardy, Matt; Krugman; Michael (2003). The Hardy Boyz: Exist 2 Inspire. WWE Books. பக். 145. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7368-2142-1. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_ஹார்டி_பாய்ஸ்&oldid=2867326" இலிருந்து மீள்விக்கப்பட்டது