தி ஸ்டோரி ஆஃப் இந்தியா (ஆவணப்படம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தி ஸ்டோரி ஆஃப் இந்தியா | |
---|---|
![]() | |
வகை | ஆவணப்படம் |
வழங்குநர் | மைக்கேல் வுட் |
இசைஞர் | ஹோவர்டு டேவிட்சன் |
நாடு | ஐக்கிய இராச்சியம் |
மொழி | ஆங்கிலம் |
இயல்கள் | 6 |
தயாரிப்பு | |
செயலாக்கம் | மார்டின் டேவிட்சன் |
தயாரிப்பு | ரெபெக்கா டூப்ஸ் |
ஓட்டம் | ஒரு தொடர்காடசிக்கு சுமாராக 60 நிமிடம் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | பிபிசி 2 |
பட வடிவம் | HDTV: 1080i |
ஒலி வடிவம் | Stereophonic |
முதல் ஒளிபரப்பு | 24 ஆகத்து 2007 |
இறுதி ஒளிபரப்பு | 28 செப்டம்பர் 2007 |
புற இணைப்புகள் | |
வலைத்தளம் |
தி ஸ்டோரி ஆஃப் இந்தியா (ஆங்கிலம்:The Story of India) (தமிழ் பொருள்:இந்தியாவின் கதை) பிபிசி தொலைக்காட்சி நிறுவனத்தால் தயாரிக்கபட்ட இந்திய வரலாற்றைப்பற்றிய ஒரு ஆவணப்படமாகும். சுமார் ஆறுமணி நேரம் நீளமுடைய இந்த ஆவணப்படம் 6 தொடர் நிகழ்வுகளாக(Episode) பிரிக்கப்பட்டு ஒளிபரப்பப்டத்து. இது பிபிசி தொலைக்காட்சியில் 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் இந்தியா, பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளான நிகழ்வையொட்டி "இந்தியா மற்றும் பாகிஸ்தான் 07" என்ற பிபிசி நிகழ்வாக ஒளிபரப்பப்பட்டது.
இந்த ஆவணப்படம் பிரபல ஆங்கிலேய வரலாற்றாளரான மைக்கேல் வுட் என்பவரால் எழுதி இயக்கப்பட்டது. இவருடைய பெரும்பாலான ஆவணப்படங்களைப் போலவே இதிலும், மைக்கேல் வுட் தானே அந்தந்த வரலாற்றுச் சம்பவங்கள் நிகழ்ந்த இடங்களுக்கு நேரில் சென்றும், அவ்விடங்களில் உள்ள தொல்பொருள் மற்றம் வரலாற்றுச் சான்றுகளை ஆய்வு செய்தும், அவ்வரலாற்று நிகழ்வுகளை பற்றி நன்கறிந்த வரலாற்றாளர்கள், தொல்லியலாளர்கள் மற்றும் உள்ளுர் மக்களுடன் நேரில் பேசியும் விளக்கியுள்ளார்.
பொருளடக்கம்
- 1 தொடர்நிகழ்வுகளின் தலைப்புகள்
- 1.1 தொடர் நிகழ்வு 1. "பிகினிங்ஸ்" (ஆங்கிலம்:Beginnings) (தமிழ் பொருள்:துவக்கம் (அ) ஆரம்பம்)
- 1.2 தொடர் நிகழ்வு 2. "தி பவர் ஆஃப் ஐடியாஸ்" (ஆங்கிலம்:The Power of Ideas) (தமிழ் பொருள்:எண்ணம் (அ) யோசனை-யின் ஆற்றல்)
- 1.3 தொடர் நிகழ்வு 3. "ஸ்பைஸ் ரூட்ஸ் அண்டு சில்க் ரோட்ஸ்" (ஆங்கிலம்:Spice Routes and Silk Roads) (தமிழ் பொருள்:நறுமணப்பொருளின் பாதை மற்றும் பட்டுப் பாதை)
- 1.4 தொடர் நிகழ்வு 4. "ஏஜஸ் ஆஃப் கோல்டு" (ஆங்கிலம்:Ages of Gold) (தமிழ் பொருள்:(இந்தியாவின்) பொற்காலம்)
- 1.5 தொடர் நிகழ்வு 5. "தி மீட்டிங் ஆஃப் டூ ஓஷன்ஸ்" (ஆங்கிலம்:The Meeting of Two Oceans) (தமிழ் பொருள்:இரண்டு சமுத்திரங்களின் சந்திப்பு)
- 1.6 தொடர் நிகழ்வு 6. "ஃப்ரிடம் அண்டு லிபரேஷன்" (ஆங்கிலம்:Freedom and Liberation) (தமிழ் பொருள்:சுதந்திரமும் விடுதலையும்)
- 2 வெளி இணைப்புகள்
தொடர்நிகழ்வுகளின் தலைப்புகள்[தொகு]
தொடர் நிகழ்வு 1. "பிகினிங்ஸ்" (ஆங்கிலம்:Beginnings) (தமிழ் பொருள்:துவக்கம் (அ) ஆரம்பம்)[தொகு]
மைக்கேல் வுட் இந்திய துணைக்கண்டம் முழுவதும் பயணித்து, இந்தியாவின் வளம், பலதரப்பட்ட மக்கள், கலாச்சாரம், இயற்கை மற்றும் நிலஅமைப்புகள் குறித்தான தடயத்தை இந்த நிகழ்வில் பதிவுசெய்கிறார். பழங்காலத்து சுவடிகள் மற்றும் வாய்வழிக்கதைகளின் வழியாகவும், கேரளத்து புரோகிதர்கள் சொல்லும் உச்சாடன மந்திரங்களின் ஓசை மூலமும் முக்கியமாக தமிழ்நாட்டின் மலைவாழ்கிராமத்து மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட மரபணு சோதனையின் மூலமும் ஆப்பிரிக்காவிலிருந்து முதல் மனித இடம்/குடி பெயர்தலை இந்தியாவிற்கு வந்திருக்கலாம் என்பது விளக்கப்படுகிறது. தென்னிந்தியாவின் வெப்பமண்டல கழிமுகத்தில்/காயலில்(backwates) ஆரம்பிக்கும் இந்தப்பயணம் காலவெள்ளத்தில் அழிந்துபோன சிந்து சமவெளி நாகரிக்கால பண்டைய இந்திய(தற்போதைய பாகிஸ்தானின்) நகரங்களான ஹரப்பா, மொகஞ்சதாரோ வழியாக துர்க்மேனிஸ்தானில் முடிகிறது. ரிக்வேதத்தில் குறிப்பிடப்படும் சோம பானம் குறித்தும் இந்த நிகழ்வில் குறிப்பிடப்படுகிறது.
தொடர் நிகழ்வு 2. "தி பவர் ஆஃப் ஐடியாஸ்" (ஆங்கிலம்:The Power of Ideas) (தமிழ் பொருள்:எண்ணம் (அ) யோசனை-யின் ஆற்றல்)[தொகு]
இந்த இரண்டாவது பாகத்தில் இந்தியாவில் உருவான மதங்களான பௌத்தம், சமணம் பற்றியும், அதை உருவாக்கிய/வளர்த்த புத்தர், மகாவீரர் பற்றியும் மௌரிய சாம்ராஜ்ஜியம் பற்றியும் விளக்கப்படுகிறது. இந்திய வரலாற்றில் மிக முக்கிய அரசர்களான சந்தரகுப்த மௌரியர், சாம்ராட் அசோகர் பற்றியும் அவர்களின் வாழ்க்கை பற்றியும் விளக்கப்படுகிறது. இந்திமொழி திரைப்படமான அசோகா-விலிருந்து சில காட்சிகளும் காட்டப்படுகின்றன. போரின் தீமைகளைக்கண்டு மனம்வருந்தி திருந்திய அசோகரின் அசோக சக்கரம் இந்தியாவின் தேசியக் கொடியில் உள்ளது பற்றி கூறுகிறது.
தொடர் நிகழ்வு 3. "ஸ்பைஸ் ரூட்ஸ் அண்டு சில்க் ரோட்ஸ்" (ஆங்கிலம்:Spice Routes and Silk Roads) (தமிழ் பொருள்:நறுமணப்பொருளின் பாதை மற்றும் பட்டுப் பாதை)[தொகு]
பண்டைய ரோமானிய, கிரேக்க நாடுகளுடன் இந்தியத் துணைக்கண்டம் கடல்வழியாக மேற்கொண்ட நறுமணப்பொருட்கள், பட்டு வணிகம் பற்றி இந்நிகழ்வில் விளக்கப்படுகிறது. மிளகு, ஏலக்காய், அரிசி போன்ற பொருட்கள் கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்ததன் மூலம், மலபார் கடற்கரையும், கேரளாவும் உலக வணிகத்தில் முக்கிய இடம்பிடித்ததை குறிப்பிடுகறிது. இதனுடன், மத்திய ஆசியாவிலிருந்த குஷாணர்களின் படையெடுப்பு, கனிஷ்கரின் ஆட்சி, அன்றைய முக்கிய வணிக நகரங்களான மதுரா, பெஷாவர் மேலும் புத்தமதம் சீனாவிற்கு பரவியது குறித்தும் விளக்குகிறது.
தொடர் நிகழ்வு 4. "ஏஜஸ் ஆஃப் கோல்டு" (ஆங்கிலம்:Ages of Gold) (தமிழ் பொருள்:(இந்தியாவின்) பொற்காலம்)[தொகு]
இந்த நிகழ்வில் இந்தியாவின் செழுமையான ஆட்சிக்காலங்களும், சாதனைகளும் விவரிக்கப்படுகிறது. கணிதவியலில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கிய சுழி/பூச்சியம் கண்டுபிடிக்கப்பட்டது, பூமியின் சுற்றளவு கண்டுபிடிக்கப்பட்டது, ஆண், பெண் உடலுறவு குறித்த உலகின் முதல் புத்தகமான காமசூத்ரா ஆகியனவற்றைப் பற்றி விளக்குகிறது. தென்இந்தியாவில் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில், சோழர்கால செப்பேடுகள், சரஸ்வதி மகால் நூலகம், சோழர்களின் ஆட்சிமுறை போன்றவையும் விளக்கப்படுகிறது. தற்போது இருக்கும் சோழ இளவரசருடன் ஒரு பேட்டியும் இடம்பெறுகிறது. சவாஜிகணேசன் நடித்த ராஜ ராஜ சோழன் திரைப்படத்திலிருந்து சில காட்சிகளும் காட்டப்படுகிறது. இந்த நிகழ்வில் மைக்கேல் வுட் தமிழகத்தை உலகின் ஒரே 'வாழும் செம்மையான நாகரிகம்' என குறிப்பிடுகிறார்.
தொடர் நிகழ்வு 5. "தி மீட்டிங் ஆஃப் டூ ஓஷன்ஸ்" (ஆங்கிலம்:The Meeting of Two Oceans) (தமிழ் பொருள்:இரண்டு சமுத்திரங்களின் சந்திப்பு)[தொகு]
இந்நிகழ்வில் முகலாயர்கள் இந்தியத் துணைக்கண்டத்துக்குள் வந்ததும், அவர்கள் ஆடசிமுறையும் விளக்கப்படுகிறது. முகமது கஜினியின் சோமநாதர் கோயில் கொள்ளை படையெடுப்பில் ஆரம்பித்து, தாரா சிக்கோ கொல்லப்பட்டதுவரை விவரிக்கிறது. மைக்கேல் வுட் இந்த பாகத்தில் பழைய டெல்லியில் உள்ள சூஃபிகளின் வழிபாட்டுத்தலங்களுக்கும், ராஜஸ்தானிலிருக்கும் பாலைவனக்கோட்டைக்கும், லாகூர் மற்றும் ஆக்ரா ஆகிய நகரங்களுக்கும் செல்கிறார். பேரரசர் அக்பரின் வாழ்க்கையும், அவருடைய மத சகிப்புத்தன்மையும் சொல்லப்படுகிறது.
தொடர் நிகழ்வு 6. "ஃப்ரிடம் அண்டு லிபரேஷன்" (ஆங்கிலம்:Freedom and Liberation) (தமிழ் பொருள்:சுதந்திரமும் விடுதலையும்)[தொகு]
இந்த நிகழ்வில் இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சி மற்றும் ஆங்கிலேய இந்தியா பற்றியும், இந்திய விடுதலைப் போராட்டம் பற்றியும் விவரிக்கப்படுகிறது. தென்னிந்தியாவில் கடல்வழி வாணிபத்திற்காக வந்து இந்தியத் துணைக்கண்டம் முழுவதுயும் ஆங்கிலேயர்கள் ஆட்சியைப் பிடித்தது, அதன் பிறகு இந்திய விடுதலைப்போர் வலுப்பெற்றது, காந்தி மற்றும் நேரு காலத்து சுதந்திர எழுச்சி, சுதந்திரத்தின் போது காந்தி, நேரு, ஜின்னா போன்ற தலைவர்களுக்கிடையே உண்டான கருத்து வேறுபாடுகள் ஆகியவையும் விவரிக்கப்படுகிறது. 1947 சுதந்திரத்தின் போது நடந்த இந்திய-பாகிஸ்தான் பிரிவினை, பிரிவினையின்போது இந்துக்கள் முஸ்லீம்கள் மற்றும் சீக்கியர்கள் இடம்பெயர்ந்தது, அதன் காரணமா நடந்த அசம்பாவிதங்கள், உயிரழப்புகள் ஆகியன பற்றியும் விவரிக்கிறது. உலகின் மிகப்பெரிய குடி/இடம்பெயர்தலில் இதுவும் ஒன்று எனக் குறிப்பிடுகிறது.