தி வோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தி வோல்
தி வோல்.png
வகைவிளையாட்டு நிகழ்ச்சி
வழங்கியவர்மா கா பா ஆனந்த்
பிரியங்கா
நாடுதமிழ் நாடு
மொழிகள்தமிழ்
தயாரிப்பு
திரைப்பிடிப்பு இடங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 40–45 நிமிடங்கள்
ஒளிபரப்பு
சேனல்விஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்12 அக்டோபர் 2019 (2019-10-12) –
7 மார்ச்சு 2020 (2020-03-07)

தி வோல் என்பது விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 12, 2019 முதல் மார்ச் 7, 2020 வரை சனிக்கிழமை மற்றும் ஞாயிறு இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான கேள்வி விளையாட்டு நிகழ்ச்சி ஆகும்.[1][2][3] இது அமெரிக்க நாட்டில் புகழ் பெற்ற தி வோல் என்ற நிகழ்ச்சியின் தமிழாக்கம் மற்றும் இந்திய மொழிகளில் ஒளிபரப்பாகும் முதல் நிகழ்ச்சியும் இதுவாகும்.[4]

இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்குகின்றனர். இந்த நிகழ்ச்சியில் உச்சபட்ச பரிசுத் தொகையாக ரூ.2.50 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.[5]

நிகழ்ச்சியின் விவரம்[தொகு]

இந்த நிகழ்ச்சியில் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில் சொன்னால் மட்டும் பத்தாது. இந்த நிகழ்ச்சியில் வோல் ஒன்று இருக்கும். வோலில் மேலிருந்து கிழாக பல தடங்கல்களைத் தாண்டி பந்து ஒன்று விழும். அந்த பந்து எந்த தொகையில் விழுகிறதோ அந்த தொகை நமக்கு கிடைக்கும். மேலிருந்து விழுகிற பந்துகளில் மூன்று வண்ணங்கள் இருக்கும்.

  • வெள்ளை பந்து - கேட்கிற கேள்விகளுக்கு சரியான பதிலை சொன்னால் விழும்.
  • பச்சை பந்து - கூடுதலாக குறிப்பிட்ட தொகையில் விழுந்தால் அந்த தொகை நமக்கு கிடைக்கும்.
  • சிவப்பு பந்து - சில பணத்தொகையை அது எடுத்துக்கொள்ளும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விஜய் தொலைக்காட்சி : சனி - ஞாயிறு இரவு 9 மணி நிகழ்ச்சிகள்
முன்னைய நிகழ்ச்சி தி வோல் அடுத்த நிகழ்ச்சி
பிக் பாஸ் தமிழ் 3 திரு & திருமதி சின்னத்திரை 2
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_வோல்&oldid=2928948" இருந்து மீள்விக்கப்பட்டது