உள்ளடக்கத்துக்குச் செல்

தி லூஷின் டிஃபென்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி லூஷின் டிஃபென்ஸ்
The Luzhin Defence
இயக்கம்மார்லீன் கோரிஸ்
தயாரிப்புகரோலின் வூட்
திரைக்கதைபீட்டர் பெர்ரி
இசைஅலெக்சாண்டர் டெசுபிளாத்
லைலா ஸ்டான்சன்
நடிப்புஜான் டர்டர்ரோ
எமிலி வாட்சன்
ஜெரால்டின் ஜேம்ஸ்
ஸ்டூவர்ட் வில்சன்
கிறிஸ்டோபர் தாம்சன்
கெல்லி ஹண்டர்
ஒளிப்பதிவுபெர்னார்ட் லூடிக்
கலையகம்பிரான்ஸ் 2 சினிமா
கிளியர் புளூ ஸ்கை புரொடக்சன்ஸ்
விநியோகம்எண்டர்டெயின்மெண்ட் பிலிம் சிஸ்ட்ரிபியூட்டர்ஸ் (ஐக்கிய இராச்சியம்)
யுஜிசி பாக்ஸ் டிஸ்ரிபியூசன் (பிரான்சு)
வெளியீடுசெப்டம்பர் 8, 2000 (2000-09-08)(ஐக்கிய இராச்சியம்)
ஓட்டம்109 நிமிடங்கள்
நாடுஐக்கிய இராச்சியம்
பிரான்சு
மொழிஆங்கிலம்
மொத்த வருவாய்$1,864,747

தி லூஷின் டிஃபென்ஸ் (The Luzhin Defence) என்பது ஜான் டர்டர்ரோ மற்றும் எமிலி வாட்சன் நடித்து, 2000 ஆம் ஆண்டு டச்சு பெண் இயக்குநரான மார்லீன் கோரிஸ் இயக்கிய காதல் நாடகத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம், மனரீதியாக காயங்களுடன் வாழும் சதுரங்க கிராண்ட்மாஸ்டர் இத்தாலியில் நடக்கும் உலகத் தரம் வாய்ந்த போட்டியில் கலந்துகொள்ளும் போது அவர் சந்திக்கும் இளம் பெண்ணை மையமாகக் கொண்ட படமாகும். இப்படத்திற்கான திரைக்கதையானது விளாதிமிர் நபோக்கோவ் எழுதிய தி டிஃபென்ஸ் (அல்லது தி லுஷின் டிஃபென்ஸ் ) என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டது.

இப்படம் எமிலி வாட்சன் பிரித்தானிய இண்டிபெண்டன் பிலிம் அவார்ஸ் மற்றும் லண்டன் பிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதுகளில் சிறந்த நடிகைக்கான பரிந்துரைகளை பெற்றது.[1]

கதைச்சுருக்கம்

[தொகு]

1920களில் இத்தாலியில் கதை நடக்கிறது. சதுரங்க விளையாட்டில் பல சாதனைகளைப் படைத்த முப்பது வயதான அலெக்சாந்தர் இவானோவிச் லூஷின் மனதளவில் காயமுற்று வாழ்ந்துவருகிறார். அச்சமயத்தில் ஒரு பன்னாட்டு சதுரங்க போட்டியில் கலந்துகொள்ள வடக்கு இத்தாலிக்குச் செல்கிறார். அங்கே தன் வயதை ஒத்த நாடாலியா என்ற பெண்ணைக் கண்டு காதல் கொள்கிறார். காதலும் சதுரங்க போட்டிகளும் கலந்து நாட்கள் செல்லுகின்றது. இறுதிப் போட்டியில் ஒரு சிக்கலை லூஷின் எதிர் கொள்கிறார். தனக்கு சதுரங்கம் சொல்திக் கொடுத்த உருசிய ஆசிரியர் லியோ வேலண்டினாவுடன் மோதவேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. இறுதியில் லூஷியன் காதலை இழந்தாரா, வெற்றியை இழந்தாரா என்பதே முடிவு.

தயாரிப்பு குறிப்புகள்

[தொகு]

1924 இல் சன்னலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட செர்மானிய சதுரங்க மாஸ்டர் கர்ட் வான் பார்டெலிபெனின் [2] வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, தி டிஃபென்ஸை என்ற உருசிய மொழி புதினத்தை நபோகோவ் 1930 இல் எழுதினார். இப்படம் இப்புதினத்தை அடிப்படையாக கொண்டது

இப் படம் முழுக்க ஐரோப்பாவில் படமாக்கப்பட்டது. அங்கேரியின் புடாபெசுட்டுவில், சென் பீட்டர்சுபெர்க்கின் செட்கள் அமைக்கப்பட்டு வெளிப்புறக் காட்சிகளும் படம்பிடிக்கப்பட்டது. இதில் செசெனி செயின் பாலம், அங்கேரிய தேசிய அருங்காட்சியகம், ஈரோஸ் சதுக்கம் ஆகியவை அடங்கும். சதுரங்க போட்டி (இத்தாலியில் நடந்ததாக இருந்தாலும்) புடாபெஸ்டில் உள்ள எத்னோகிராஃபி அருங்காட்சியகத்தின் பிரதான மண்டபத்திற்குள் படமாக்கப்பட்டது. இத்தாலியில், விடுதி காட்சிகள் வில்லா எர்பா, செர்னோபியோ, ஏரி கோமோவில் படமாக்கப்பட்டன. தொடருந்து நிலையம் தொடர்பான காட்சிகள் கோமோவிற்கு அருகிலுள்ள ப்ரென்னா-அல்சேட்டில் படமாக்கபட்டது.

குறிப்புகள்

[தொகு]
  1. "Nominations 2000". www.bifa.film. பார்க்கப்பட்ட நாள் 2018-06-03.
  2. "In all probability suffering from severe arteriosclerosis, he has had a slight dizzy spell or a rush of blood to the head, and in seeking some fresh air by opening a low silled window he fell out." Mieses and Kagan in Nachrufe in Kagans Neueste Schachnachrichten, Sonderheft No. 2, 1924

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_லூஷின்_டிஃபென்ஸ்&oldid=3925220" இலிருந்து மீள்விக்கப்பட்டது