தி ரெயின்ட்ரீ ஹோட்டல், அண்ணா சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி ரெயின்ட்ரீ ஹோட்டல்
அண்ணா சாலை
Lua error in Module:Mapframe at line 384: attempt to perform arithmetic on local 'lat_d' (a nil value).
விடுதி சங்கிலிசீபுரோஸ் ஹோட்டல்கள்
பொதுவான தகவல்கள்
இடம்சென்னை, இந்தியா
முகவரி636, அண்ணா சாலை, தேனாம்பேட்டை
சென்னை, தமிழ்நாடு 600 035
ஆள்கூற்று13°2'2"N 80°14'38"E
திறப்புஜுலை 27, 2010
செலவு 2,000 மில்லியன்
உரிமையாளர்சீபுரோஸ் ஹோட்டல்ஸ் (Ceebros Hotels)
உயரம்170அடி
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை16
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)உபசானி வடிவமைப்பாளர் (Uphasani Design Cells)
மேம்பாட்டாளர்C. Subba Reddy
பிற தகவல்கள்
அறைகள் எண்ணிக்கை230
தொகுப்புகளின் எண்ணிக்கை13
உணவகங்களின் எண்ணிக்கை5
தரிப்பிடம்200 cars
வலைதளம்
raintreehotels.com

தி ரெயின்ட்ரீ ஹோட்டல் அண்ணா சாலை, இந்தியாவில் சென்னையிலுள்ள அண்ணா சாலையில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஆகும். 2000 மில்லியன் ரூபாய் மதிப்பு கொண்ட இந்த ஹோட்டல், ஜூலை 2010 இல் தொடங்கப்பட்டது.[1] இந்த ஹோட்டல், ரெயின்ட்ரீ ஹோட்டல்களில் இரண்டாவது ஆகும்.

வரலாறு[தொகு]

ஜூலை 2010 இல் திறக்கப்பட்ட இந்த விடுதி, 2013 இல் ஹோட்டல் குழுமங்களில் முன்வரிசையிலுள்ள "சம்மிட் ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்சு"டன் இணைந்தது. இதனால் ஆசிய பசுபிக் பகுதிகளிலுள்ள ஹோட்டல்களின் பட்டியலில் இடம்பெற்றது.[2]

ஹோட்டல்[தொகு]

ரெயின்ட்ரீ ஹோட்டலில் மொத்தம் 230 அறைகள் உள்ளன. இதில் 154 டீலக்ஸ் அறைகள், 8 பிரிமியம் அறைகள், 51 கழக அறைகள், 4 ஸ்டூடியோ அறைகள், 12 எக்ஸ்கியூடிவ் சூட்கள் மற்றும் ஒரு ஜனாதிபதி சூட் ஆகிய அறைகள் உள்ளடங்கும். ஹோட்டலின் உணவகத்தில் சமையலறை, மதுவருந்தும் கூடம் கொண்ட அறை, மேற்கூரையில் பஞ்சாபி உணவகம் மற்றும் உயர்தர மதுவருந்தும் கூடம்பார் ஆகியவை இணைந்துள்ளன. மொத்தம் மூன்று விருந்தினர் பொதுக்கூடங்களும், மூன்று கூட்டத்திற்கான இடங்களும் உள்ளன. இந்த கூடங்களுக்கான மொத்த இடத்தின் அளவு 12000 சதுர அடிகள் (1100 சதுர மீட்டர்). ஆரோக்கியத்திற்கான கழகம் மற்றும் ஸ்பா ஆகியவற்றுடன் இணைந்த நீச்சல் குளமும் ஹோட்டலின் மேற்கூரைப் பகுதியில் அமைந்துள்ளது.

உப்ஸைனி வடிவமைப்பாளர்கள் மற்றும் கட்டிடக் கலை நிபுணர்களால் ரெயின்ட்ரீ ஹோட்டல் கட்டப்பட்டது. ஹோட்டலின் உட்புறம் ஸெயிலெர் மற்றும் லிம் (மலேசியா) என்பவர்களால் கட்டப்பட்டது.

விருதுகள்[தொகு]

  1. சிறந்த கடல் உணவு சமையற்கலைக்கான விருதினை டைம்ஸ் ஃபுட் இந்தியா 2012 ஆம் ஆண்டு வழங்கியது - டைம்ஸ் ஃபுட் விருதுகள்.
  2. சிறந்த சூழலுடன் கூடிய ஹோட்டலுக்கான விருதினை என்டிடிவி ஹிந்து 2011 ஆம் ஆண்டு வழங்கியது - என்டிடிவி ஹிந்து லைஃப்ஸடைல் விருதுகள்.
  3. சிறந்த விருந்தோம்பலுக்கான விருதினை டி & பி ஆக்ஸிஸ் வங்கி 2011 ஆம் ஆண்டு வழங்கியது – பிசினஸ் கௌரவ் எஸ்எம்ஈ விருதுகள்.[3][4]

இருப்பிடம்[தொகு]

ரெயின்ட்ரீ ஹோட்டல் தேனாம்பேட்டைக்கு அருகில் அமைந்துள்ளது. எளிதாக அடையாளம் காணும்படியாக இந்த ஹோட்டல் அமைந்துள்ளதால், வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் மற்றும் விருந்தினர்கள் விரைவில் இந்த ஹோட்டலை அணுகுகின்றனர். இந்த ஹோட்டல் எழும்பூரில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆயிரம் விளக்குப் பகுதியிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும், கோடம்பாக்கத்துக்கு அருகிலும் உள்ளது. ஹோட்டலில் இருந்து பெரும்பாலானவர்கள் அருகிலுள்ள இடங்களான மெரினா கடற்கரை, சிட்கோ தொழிற்பேட்டை மற்றும் கிண்டி குதிரைப் பந்தயம் போன்ற பிரசிதிபெற்ற இடங்களை விரைவாக அணுக முடியும்.[5]

போக்குவரத்து[தொகு]

ரெயின்ட்ரீ ஹோட்டலுக்கு அருகிலுள்ள போக்குவரத்து வசதிகள்:

  • சென்னை சர்வதேச விமான நிலையம் – 14 கிலோ மீட்டர்
  • சென்னை ரயில் நிலையம் – 10 கிலோ மீட்டர்

குறிப்புகள்[தொகு]

  1. "Ceebros launches second hotel in Chennai". The Hindu (Chennai: The Hindu). 27 July 2010. 25 May 2012 அன்று பார்க்கப்பட்டது.
  2. "The Raintree Hotel, Chennai joins Summit Hotels & Resorts". TravelBizMonitor.com (Chennai: TravelBizMonitor.com). 6 August 2013. 27 மார்ச் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 Aug 2013 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  3. "Interesting plot". The Hindu (Chennai: The Hindu). 25 November 2011. 25 May 2012 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Interesting plot". The Hindu (Chennai: The Hindu). 25 November 2011. 25 May 2012 அன்று பார்க்கப்பட்டது.
  5. "The Raintree Anna Salai Chennai". cleartrip.com.

வெளி இணைப்புகள்[தொகு]