தி ரெட் பலூன்
தி ரெட் பலூன் | |
---|---|
இயக்கம் | ஆல்பர்ட் லேமொரைசு |
தயாரிப்பு | ஆல்பர்ட் லேமொரைசு |
திரைக்கதை | ஆல்பர்ட் லேமொரைசு |
இசை | மாரீசு லே ரெக்ஸ் |
நடிப்பு | பாஸ்கல் லேமொரைசு |
ஒளிப்பதிவு | எட்மாண்ட் சேசன் |
படத்தொகுப்பு | பீரே கில்லட் |
விநியோகம் | லோபெர்ட் பிக்சர்ஸ் |
வெளியீடு | 19 அக்டோபர் 1956, கான்ஸ் திரைப்படவிழா |
ஓட்டம் | 34 நிமிடங்கள்[1] |
நாடு | பிரான்சு |
மொழி | பிரான்சிய மொழி |
தி ரெட் பலூன்(The Red Balloon) [2] என்பது 1956 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு பிரெஞ்சுக் குறும்படமாகும்.[3] ஒரு குழந்தையின் மனநிலையை ஒரு பலூனுடன் இணைத்து அந்த பலூன் அக்குழந்தையை நேசித்தால் என்னவெல்லாம் செய்யும் என்ற கற்பனையில் இப்படத்தின் திரைக்கதையை அமைத்து ஆல்பர்ட் லேமொரைசு இப்படத்தைத் எழுதி இயக்கி தயாரித்துள்ளார்.[4][5] பாரீஸ் நகரின் அருகிலமைந்த நகரமான மெனில்மோனென்ட் என்ற நகரில் நடப்பது போல் அமைந்த இக்குறும்படம் 35 நிமிடங்கள் ஓடக்கூடியது.
லாமொரசு தனது குழந்தைகளை திரைப்படத்தில் நடிகர்களாகப் பயன்படுத்தினார். அவரது மகன் பாஸ்கல் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் அவரது மகள் சபீன் ஒரு இளம் பெண்ணாக நடித்திருந்தார்.
விருதுகள்
[தொகு]இக்குறும்படம் பல விருதுகளை குவித்துள்ளது.[6] 1956 ஆம் ஆண்டின் சிறந்த அசல் திரைக்கதையிற்கான அகாதமி விருதினை இத்திரைப்படத்தின் இயக்குனர் ஆல்பர்ட் லேமொரைசு பெற்றுள்ளார்.[7] அகாதமி விருது குறும்படத்திற்கு வழங்கப்படமாட்டாது. இருப்பினும் இக்குறும்படம் அகாதமி விருதினைப்பெற்றுள்ளது.[8] இப்படம் கான்ஸ் திரைப்படவிழாவில் திரையிட்டப்பட்டு விருதைனையும் பெற்றுள்ளது.
கதை
[தொகு]மிகச்சில வசனங்களை மட்டுமே உடைய இப்படம் முழுதும் இசைக்கோவையால் நிரப்பப்பட்டுள்ளது. பள்ளி செல்கிற ஒரு சிறுவன் (பாஸ்கல்) வழியில் ஒரு விளக்குக் கம்பத்தில் சிக்கிக்கொண்ட ஒரு சிவப்பு ஹீலியம் பலூனைக் கண்டு கம்பத்தில் ஏறி அதனை எடுத்துக்கொள்கிறான். அந்த பலூனை எடுத்துக்கொண்டு பள்ளி செல்கையில் பலூனைக் கையில் வைத்துக்கொண்டிருப்பதால் பேருந்தில் ஏற நடத்துனரால் அனுமதி மறுக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து ஓட்டமாகவே சென்று பள்ளி செல்கிறான்.பள்ளியின் உள்ளே பலூனைக் கொண்டுசெல்ல முடியாத காரணத்தால் அதனை வெளியே விட்டுவிட்டுச் செல்கிறான். மாலை பள்ளிமுடிந்து வருகையில் அந்த பலூன் வெளியே பாஸ்கலுக்காக காத்திருக்கிறது. அப்பொழுது மழை தூரத்தொடங்குகிறது. தெருவில் குடைபிடித்து நடக்கும் ஒவ்வொருவரின் குடைகளுக்கும் தன் பலூனுக்கு இடம் பெற்று தன் பலூன் நனையாமல் தான் நனைந்து வீடு வந்து சேருகிறான். பல்லடுக்குமாடி குடியிருப்பாக இருக்கிற அவனது வீட்டில் அவனது பாட்டி பலூனை அனுமதிக்காது சன்னலில் தூக்கி எறிந்து விடுகிறார். ஆனால் பலூன் பாஸ்கலின் மீது அதீத அன்புடன் அவனைவிட்டு எங்கும் செல்லாமல் அவனுடனேயே இருக்கிறது.
அடுத்த நாள் பள்ளி செல்கையில் பலூனை எடுத்துக்கொள்கிறான். பலூன் பாஸ்கலைப் பின்தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இருவரும் மறைந்தும் ஒளிந்தும் விளையாடிக்கொண்டே செல்கின்றனர். இப்போது பாஸ்கல் பேருந்தில் ஏறிக்கொள்கிறான். பலூன் பேருந்தைத் தொடந்து பறந்து வருகின்றது. இது அனைவருக்கும் வியப்பைத்தர அனைவரும் வேடிக்கை பார்த்து மகிழ்கின்றனர். பாஸ்கல் பள்ளி செல்லும் வழியில் எதிரில் ஒரு சிறுமி (சபைன்) நீல நிற பலூனுடன் வர இரு பலூன்களும் சந்தித்துக்கொள்கின்றன. இரு பலூன்களும் ஒருவருடனேயே செல்ல விரும்புகின்றன. இருப்பினும் அவரவர் பலூனை அவரவர் எடுத்துக்கொண்டு செல்கின்றனர். பாஸ்கல் பள்ளியின் உள்ளே செல்ல பலூனைப் பார்த்து மற்ற குழந்தைகள் சத்தமிடுகின்றனர். இதனைக்கண்ட பள்ளி முதல்வர் பாஸ்கலைத் தனி அறையில் அடைத்துவைத்துவிட்டு வெளியே செல்கிறார். இதைக்கண்ட பலூன் முதல்வருடனேயே அவரைத்துரத்திக்கொண்டு செல்கிறது. மாலை பள்ளிமுடிந்தபின் முதல்வர் அவனை விடுவிக்கிறார். பாஸ்கல் வீட்டிற்குச் செல்லும் பொழுது தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர்கள் பலரால் துரத்தப்படுகிறான். அவர்களிடம் அன்று தப்பித்துக் கொண்ட பாஸ்கல் ஒரு ஞாயிற்றுக்கிழமை தன் பாட்டியுடன் கோவிலுக்குச்சென்று திரும்புகையில் மீண்டும் சிறுவர்களால் துரத்தப்பட்டு தன் பலூனை இழந்து விடுகிறான். அப்பொழுது அச்சிறுவர்கள் தங்களுக்குள்ளான சண்டையில் பலூனை கல்லால் அடித்து உடைத்து விடுகின்றனர். உடைந்த தன் பலூனருகே பாஸ்கல் அழுதுகொண்டு அமர பாரிஸ் நகரத்தின் கடைகளிலிருந்த பலூன்கள், சிறுவர்கள் பெரியவர்கள் தெரு வியாபாரிகள் என அத்துனைபேரின் கைகளிலிருந்த பலூன்களும் பல வண்ண பலூன்களாய் உயரே பறந்து செல்கின்றன. அவை அனைத்தும் பாஸ்கலை நோக்கிப்பறந்து வந்து அவன் கைகளில் விழுகின்றன. பாஸ்கல் வியப்பும் மகிழ்வுமாய் அந்த பலூன்களைப் பிடித்துக்கொள்ள அந்த பலூன் அவனைத் தூக்கிக் கொண்டு மீண்டும் வானில் பறப்பதுடன் படம் முடிகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "THE RED BALLOON (U)". British Board of Film Classification. 15 October 1956. பார்க்கப்பட்ட நாள் 25 March 2016.
- ↑ "THE RED BALLOON (U)". British Board of Film Classification. 15 October 1956. Retrieved 25 March 2016.
- ↑ Crowther, Bosley (12 March 1957). "Screen: Documentary and Fantasy; 'Lost Continent,' 'Red Balloon' on Bill". The New York Times. https://movies.nytimes.com/movie/review?res=9D07E7DC1639E33BBC4A52DFB566838C649EDE.
- ↑ Gibson, Brian (5 February 2007). "What childhood films are these?". archive.is இம் மூலத்தில் இருந்து 5 February 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130205160335/http://www.vueweekly.com/article.php?id=7536.
- ↑ Gliebermann, Owen (21 November 2007). "The Red Balloon". EW.com இம் மூலத்தில் இருந்து 8 ஆகஸ்ட் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140808051032/http://www.ew.com/ew/article/0,,20162166,00.html.
- ↑ The Red Balloon on Internet Movie Database.
- ↑ "Recherche spécifique - Archives". www.cineressources.net. பார்க்கப்பட்ட நாள் 2018-09-22.
- ↑ "1957 Archives - National Board of Review". National Board of Review (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-22.
• "THE RED BALLOON (U)". British Board of Film Classification. 15 October 1956. Retrieved 25 March 2016. • The Red Balloon on Internet Movie Database.
வெளி இணைப்புகள்
[தொகு]- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் The Red Balloon
- அழுகிய தக்காளிகளில் The Red Balloon
- டி.சி.எம் திரைப்பட தரவுத்தளத்தில் The Red Balloon
- The Red Balloon பரணிடப்பட்டது 2021-02-24 at the வந்தவழி இயந்திரம் at Janus Films (official web site)
- The Red Balloon information site and DVD/Blue-ray review at DVD Beaver (includes images)
- Le Ballon rouge at Cinefeed (in பிரெஞ்சு மொழி)