உள்ளடக்கத்துக்குச் செல்

தி ரீடர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி ரீடர்
பட வெளியீட்டுச் சுவரொட்டி
இயக்கம்ஸ்டீபன் டால்ட்ரி
தயாரிப்பு
  • அந்தோனி மிங்கெல்லா
  • சிட்னி பொல்லாக்
  • டோனா ஜிக்லியோட்டி
  • ரெட்மான்ட் மோரிஸ்
திரைக்கதைடேவிட் ஹேர்
இசைநிக்கோ முல்லி
நடிப்பு
ஒளிப்பதிவு
படத்தொகுப்புகிளாரி சிம்ப்சன்
கலையகம்
  • மிராஜ் என்டர்பிரைசஸ்
விநியோகம்
வெளியீடுடிசம்பர் 12, 2008 (2008-12-12)(அமெரிக்க ஐக்கிய நாடுகள்)
பெப்ரவரி 26, 2009 (ஜெர்மனி)
ஓட்டம்124 நிமிடங்கள்[1]
நாடு
  • ஜெர்மனி[2]
  • அமெரிக்க ஐக்கிய நாடுகள்
மொழி
ஆக்கச்செலவு$32 மில்லியன்[3]
மொத்த வருவாய்$108.9 மில்லியன்[3]
இப்படத்தில் நடித்ததற்காக கேட் வின்ஸ்லெடுக்கு சிறந்த நடிகைக்கான அகாடமி விருது வழங்கப்பட்டது

தி ரீடர் (The Reader) என்பது ஸ்டீபன் டால்ட்ரி இயக்கிய 2008 ஆம் ஆண்டு வெளியான காதல் திரைப்படமாகும். இது பெர்ன்கார்ட் சிலிங்க் என்பவர் எழுதி 1995-இல் வெளியான புதினத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தை டேவிட் ஹேர் திரைக்கதையை எழுதியிருந்தார். படத்தில் கேட் வின்ஸ்லெட், ரால்ப் ஃபைன்ஸ், டேவிட் கிராஸ், புருனோ கன்ஸ் மற்றும் கரோலின் ஹெர்பர்ட் ஆகியோர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் தயாரிப்பாளர்களான அந்தோனி மிங்கெல்லா மற்றும் சிட்னி பொல்லாக் ஆகியோரின் கடைசி படம் ஆகும். அவர்கள் இருவரும் பட வெளியீட்டிற்கு முன்பே இறந்து போயினர். செப்டம்பர் 2007 இல் ஜெர்மனியில் தயாரிப்பு தொடங்கியது. மேலும் படம் டிசம்பர் 10,2008 அன்று குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டும் வெளியிடப்பட்டது.

கதைச் சுருக்கம்

[தொகு]

இந்த படம் மைக்கேல் பெர்க் என்ற ஜெர்மன் வழக்கறிஞரின் கதையைச் சொல்கிறது. அவர் 1958 இல் 15 வயதில், ஹன்னா சிமிட்ஸ் என்ற வயதான பெண்ணுடன் பாலுறவு கொண்டுள்ளார். இந்தப் பெண் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் நாசி வதைமுகாமில் காவலாளியாக இருந்ததனால் ஏற்பட்ட போர்க் குற்றங்கள் விசாரணையில் பிரதிவாதியாக சேர்க்கப்பட்ட பின்னர் காணாமல் போகிறார். ஹன்னா கடந்தகால நாஸி ஆட்சியைக் காட்டிலும் மிக மோசமானது என்று கருதும் ஒரு ரகசியத்தை பாதுகாத்து வைத்திருப்பதை மைக்கேல் உணர்ந்துகொள்கிறார் - அந்த ரகசியம் வெளிப்படுத்தப்பட்டிருந்தால் அது விசாரணையில் ஹன்னாவுக்கு உதவியிருக்கும்.

வெளியீடு

[தொகு]

டிசம்பர் 10,2008 அன்று தி ரீடர் திரைப்படம் 8 திரையரங்குகளில் மட்டுப்படுத்தப்பட்ட வெளியீட்டைக் கொண்டிருந்தது. மேலும், அதன் தொடக்க வார இறுதியில் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூலில் $168,051 வசூலித்தது. இத்திரைப்படம் ஜனவரி 30,2009 அன்று பரவலாக வெளியிடப்பட்டு, உள்நாட்டுத் திரையரங்குகளில் $2,380,376 வசூலித்தது. கேட் வின்ஸ்லெட்டுக்கு அகாதமி விருது கிடைத்த வார இறுதியில், பிப்ரவரி 27,2009 அன்று 1,203 திரையரங்குகளில் படம் பரவலாக வெளியிடப்பட்டது.

மொத்தத்தில், இந்த படம் உள்ளூரில் $34,194,407 ம் மற்றும் உலகளவில் $108,901,967 ம் வசூலித்துள்ளது.[3] இத்திரைப்படம் அமெரிக்காவில் டிவிடி வடிவில் ஏப்ரல் 14,2009 அன்று டிவிடிவெளியிடப்பட்டது. மேலும் புளூ-ரேயில் ஏப்ரல் 28 அன்று வெளியிடப்பட்டது.[4] இரண்டு பதிப்புகளும் இங்கிலாந்தில் மே 25,2009 அன்று வெளியிடப்பட்டன.[5] ஜெர்மனியில் இரண்டு டிவிடி பதிப்புகள் (ஒற்றை வட்டு மற்றும் 2-வட்டு சிறப்பு பதிப்பு) மற்றும் புளூ-ரே ஆகியவை 2009 செப்டம்பர் 4 அன்று வெளியிடப்பட்டன.[6]

விருதுகள்

[தொகு]

வின்ஸ்லெட்டும் இளம் மைக்கேலாக நடித்திருந்த டேவிட் கிராஸூம் அவர்களுடைய நடிப்பிற்காக நிறைய பாராட்டுதல்களைப் பெற்றனர். இந்தத் திரைப்படத்தில் தனது பாத்திரத்திற்காக வின்ஸ்லெட் பாராட்டுதலைப் பெற்றார் என்பதோடு சிறந்த துணை நடிகைக்கான கோல்டன் குளோப் விருது, சிறந்த நடிகைக்கான பாஃப்தா விருது, சிறந்த துணை நடிகைக்கான ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது மற்றும் 81வது அகாடமி விருதுகளில் சிறந்த நடிகைக்கான அகாதமி விருது ஆகியவற்றையும் வென்றார். இந்தத் திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான அகாடமி விருது உட்பட மற்ற முக்கியமான விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

விமர்சனம்

[தொகு]

சில திரை விமர்சகர்கள் சிமிட்ஸை பார்வையாளர்களின் அனுதாபத்தின் ஒரு பொருளாக மாற்றியமைத்ததற்காக விமர்சித்தனர். மேலும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் யூத எதிர்ப்பு சதி கோட்பாட்டுத் திருத்தவாதத்திற்காக குற்றம் சாட்டப்பட்டனர்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Reader (15)". British Board of Film Classification. 2008-12-02. Retrieved 2013-06-17.
  2. Dargis, Manohla (December 9, 2008). "Innocence Is Lost in Postwar Germany". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2008/12/10/movies/10read.html. 
  3. 3.0 3.1 3.2 "The Reader (2008)". பாக்சு ஆபிசு மோசோ. 2010-12-30. Retrieved 2010-12-30.
  4. "The Reader (2008)". DVD Release Dates. Retrieved August 3, 2020.
  5. "The Reader (DVD)". amazon.co.uk. Retrieved 2009-03-18.
  6. "The Reader". areadvd.de. Archived from the original on March 28, 2009. Retrieved 2009-03-31.
  7. Shipman, Tim (15 February 2009). "Kate Winslet's Oscar chances hit by The Reader Nazi accusation". The Daily Telegraph இம் மூலத்தில் இருந்து 14 August 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160814101831/http://www.telegraph.co.uk/culture/film/oscars/4624573/Kate-Winslets-Oscar-chances-hit-by-The-Reader-Nazi-accusation.html. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_ரீடர்_(திரைப்படம்)&oldid=4246464" இலிருந்து மீள்விக்கப்பட்டது