தி ரவுண்ட் அப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி ரவுண்ட் அப்
இறுவட்டு அட்டைப்படம்
இயக்கம்நிக்லோஸ் யான்ஸ்கோ (Miklós Jancsó)
கதைக்யூலா ஹெர்னார்ட் (Gyula Hernádi)
வெளியீடு1965
ஓட்டம்95 நிமிடங்கள்
நாடுஹங்கேரி
மொழிஹங்கேரி மொழி

தி ரவுண்ட் அப் (The Round-Up, ஹங்கேரி: Szegénylegények) 1965 ஆம் ஆண்டு வெளியான ஹங்கேரியத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் இயக்குனர் நிக்லோஸ் யான்ஸ்கோ (Miklós Jancsó) அவார். இத்திரப்படத்தின் மூலம் இவ்வியக்குனர் சர்வதேசக் கவனம் பெற்றார். சினிமா விமரிசகர் டெரிக் மால்கமின் பரிந்துரையான 100 திரைப்படங்களின் பட்டியலில் இத்திரைப்படமும் ஒன்று.

உருவாக்கம்[தொகு]

இத்திரைப்படத்தை ஹங்கேரியன் ஸ்டேட் ஃபில்ம் ப்ரடக்ஷன் கம்பெனியான (Hungarian state film production company) மாஃபில்ம் (Mafilm) தயாரித்தது. தயாரிப்புக் காலத்திய நாணய மதிப்பின் படி 5,00,000 அமெரிக்க டாலர்கள் மதிப்பில் தயாரிக்கப்பட்டது.[1] இத்திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுதியவர் க்யூலா ஹெர்னார்ட் (Gyula Hernádi) ஆவார்.

கதை[தொகு]

ஆஸ்திரியா அரசின் அடக்குமுறைக்கு அதிரான 1848 ஆம் ஆண்டின் ஹங்கேரியப் புரட்சிக்குப் பின்னர் புரட்சியாளர்களின் தலைவர்களின் ஒருவரான லாஜோஸ் கோஸோத்தின் (Lajos Kossuth) ஆதரவாளர்கள் சிறைபிடிக்கப்படுகின்றனர். அவர்களிடம் புரட்சியாளர்களின் மற்றுமொரு தலைவராகிய சந்தோர் (Sándor) என்பவரைப் பற்றிய தகவல்களைப் பெற நடத்தப்படும் மன மற்றும் உடல் ரீதியான சித்திரைவதைகளை இத்திரைப்படம் காட்டுகிறது. சிறைபிடிக்கப்பட்டவர்களில் ஒருவர் தனது உயிரைப் காப்பாற்ற மற்றவர்களைக் காட்டிக் கொடுப்பதும். சந்தோரை கண்டுபிடிக்க முடியாததால் அவரை மன்னிக்கிறோம் என ஆஸ்திரிய அரசின் பெயரால் அறிவித்து அதைக் கொண்டாடும் ஹங்கேரியப் புரட்சியாளர்களிடம், "உங்களுக்குத் தண்டனை உண்டு" எனச் சொல்வதுமாக பல்வேறு தந்திரோபாயங்கள் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Andrew James Horton. "Ordinary Lives in Extraordinary Times – Márta Mészáros interviewed". sensesofcinema.com. Archived from the original on 2008-02-26. பார்க்கப்பட்ட நாள் 2008-03-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_ரவுண்ட்_அப்&oldid=3575385" இலிருந்து மீள்விக்கப்பட்டது