தி மேரேஜ் ஆஃப் மரியா பிரௌன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி மேரேஜ் ஆஃப் மரியா பிரௌன்
The Marriage of Maria Braun
இயக்கம்ரெயினர் வெர்னர் ஃபாஸ்பைண்டர்
தயாரிப்புமைக்கேல் ஃபெங்லர்
கதைபீட்டர் மார்தாஹெய்மர்
பீ ஃப்ரோலிச்
இசைபீபர் ரபேன்
நடிப்புஹன்னா ஷிகுல்லா
க்ளாஸ் லோவிட்ச்
இவான் டென்னி
கிசலா உஹென்
ஒளிப்பதிவுமைக்கேல் பால்ஹவுஸ்
படத்தொகுப்புரெயினர் வெர்னர் ஃபாஸ்பைண்டர் (ஃபிரான்ஸ் வால்ஷ்சாக)
ஜூலியன் லோரன்ஸ்
கலையகம்அல்பட்ரோஸ் பிலிம் ஃபோட்டோபிக்டிஷன்
வெஸ்டெட்ச்சர்ச்சர் ரண்ட்ஃபங்க்
ட்ரையோ பிலிம்
வெளியீடுபெப்ரவரி 20, 1979 (1979-02-20)
(பெர்லின்)
மார்ச்சு 23, 1979 (1979-03-23)
(மேற்கு செருமனி)
ஓட்டம்115 நிமிடங்கள்
நாடுமேற்கு ஜெர்மனி
மொழிஜெர்மன், ஆங்கிலம்
ஆக்கச்செலவு1.975 மில்லியன் DM[1]
மொத்த வருவாய்4 மில்லியன் DM
(மேற்கு செருமனி)
$1.8 million
(USA, முதல் ஆறு வாரங்களுக்குள்)

தி மேரேஜ் ஆஃப் மரியா பிரௌன் (The Marriage of Maria Braun) (இடாய்ச்சு மொழி: Die Ehe der Maria Braun) என்பது 1979 ஆண்டைய மேற்கு ஜெர்மனியத் திரைப்படமாகும். இதை ரெயினர் வெர்னர் ஃபாஸ்பைண்டர் இயக்கியுள்ளார். இப்படத்தில் நாயகி மரியாவாக நடிகை ஹன்னா ஷிகுல்லா நடித்துள்ளார், மரியா மற்றும் இராணுவ வீரர் ஹெர்மானியரின் ஆகியோரின் திருமண வாழ்வு இரண்டாம் உலகப் போர் மற்றும் அவருக்கு போருக்குப் பின் கிடைத்த சிறைத்தண்டனை காரணமாக தொடரவில்லை. இத்திரைப்படம் ஃபாஸ்பைண்டரின் மிகவும் வெற்றிகரமான படைப்புகளில் ஒன்றாகும் மேலும் இது வெளி நாடுகளில் புதிய ஜேர்மனின் திரைப்பட உருவத்தை வடிவமைத்தது.

கதை[தொகு]

படத்தின் கதை 1943 ஆண்டு ஜெர்மனியில் துவங்குகிறது. கதையின் நாயகி மரியா என்பவளாவாள் இரண்டாம் உலகப் போரின்போது அவளுக்குத் திருமணம் நடக்கிறது. திருமணம் செய்துகொண்ட அவளுடன் அவளுடைய கணவன் அரை நாளும் ஒரு இராவும் மட்டுமே வாழ்ந்துவிட்டு போருக்குச் சென்றுவிடுகிறான். போருக்குச் சென்ற அவனை அவள் தேடிக்கொண்டே இருக்கிறாள். அவன் ஒரு நாளில் திரும்பிவந்துவிடுகிறான். அந்த நாளில் அவள், அந்த மரியா, தனக்குப் பிடித்த காதலனுடன் படுக்கையில் இருக்கிறாள். அவளுடைய வயிற்றில் காதலனின் கருவை சுமந்துகொண்டிருக்கிறாள். காதலனுக்கும் கணவனுக்கும் மோதல் வருகிறது. அவள் காதலனை அடித்துக்கொன்றுவிடுகிறாள். கணவன் பழியேற்றுச் சிறைக்குச் செல்கிறான்.

இப்போது கணவனைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவளுக்கு வருகிறது. ஒரு தொழிலதிபரின் காரியதரிசியாகப் பணியில் சேரும் மரியா, அவரது அன்புப்பிடியில் சிக்கிக்கொள்கிறாள். அவர் அவளை மணந்துகொள்ள விரும்புகிறார். அவளைப் பொறுத்தவரை அவள் கணவனுக்கு மட்டுமே மனதில் இடம் கொடுத்திருக்கிறாள். ஆகவே, மனம்விட்டு தொழிலதிபர் கேட்டும் மணம்புரிய மறுத்துவிடுகிறாள். சிறையிலிருக்கும் கணவனை வெளியே கொண்டுவரப் பாடுபடுகிறாள்.

சிறையிலிருக்கும் மரியாவின் கணவரைத் தொழிலதிபர் சென்று பார்க்கிறார். மரியாவின் கணவனுக்கும் இந்த உறவு தெரியவருகிறது. சிறையிலிருந்து வெளியே வரும் அவன். மரியாவைவிட்டுப் பிரிந்துசெல்கிறான். சில ஆண்டுகள் கழித்து இருவரும் இணைகிறார்கள். அவள் அதிக மகிழ்ச்சியில் இருக்கிறாள். இதற்கிடையில் தொழிலதிபர், அவரது சொத்தை மரியாவுக்கும் அவளுடைய கணவனுக்கும் எழுதிவைத்துவிட்டு இறந்துவிடுகிறார்.

அவள் மீண்டும் கணவனுடன் சேர்ந்த அன்று இந்தத் தகவல் அவளுக்குக் கிடைக்கிறது. எரிவாயு அடுப்பில் சிகரெட் பற்றவைக்கும் அவள் எரிவாயு அடுப்பை அடைக்க மறக்கிறாள். எரிவாயு உருளை வெடித்து இருவரும் இறக்கிறார்கள். அடுப்பு தானாக வெடித்ததா அவள் வெடிக்கவைத்தாளா என்று தெளிவாக விளக்கப்படாமல் குழப்பம் ஏற்படும்வகையில் படம் முடிவடைகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Baer, Harry (1990). Schlafen kann ich, wenn ich tot bin (in German). Kiepenheuer & Witsch. p. 281. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-462-02055-2.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)