உள்ளடக்கத்துக்குச் செல்

தி பேபி புளூ மூவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி பேபி புளூ மூவி
வகைமென்மையான ஆபாசப் படங்கள்
பாலின்பக் கலைகள்
உருவாக்கம்மோசஸ் நைமெர்
கதைசொல்லிமார்க் டெய்லி
நாடுகனடா
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ராபர்ட் லான்டோஸ்
பிரையன் லைன்கான்
தயாரிப்பு நிறுவனங்கள்சும் லிமிட்டட் (1981–2007)
ஒளிபரப்பு
அலைவரிசைசிட்டி டிவி
ஒளிபரப்பான காலம்செப்டம்பர் 29, 1972 (1972-09-29) 
ஆகத்து 30, 2008 (2008-08-30)

பேபி புளூ மூவி (The Baby Blue Movie) என்பது சிட்டி டிவி என்ற கனேடியத் தொலைக்காட்சி நிறுவனத்தில் இரவு நேரத்தின் ஓர் குறிப்பிட்ட வகை, கருப்பொருள் அல்லது இலக்கு பார்வையாளர்களைச் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒன்றிணைக்கும் ஒரு ஏற்பாடாகும்.[1] இது முதன்மையாகமென்மையான ஆபாசப் படங்ளை ஒளிபரப்பியது.[2][3] அப்போது புதிதாகத் தொடங்கப்பட்ட தொலைக்காட்சிக்கு விளம்பரம் தேடும் நோக்கில், 1972 முதல் 1975 வரை ஆரம்பத்தில் ஒளிபரப்பப்பட்ட 'பேபி புளூ', வட அமெரிக்காவில் தொடர்ந்து ஒளிபரப்பான முதல் வயது வந்தோருக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும். இந்தத் தொடர் 1990-களில் 'பேபிபுளூ 2 ' என்ற பெயரில் மீண்டும் தொடங்கப்பட்டு, 2008 வரை ஒளிபரப்பப்பட்டது.[4]

தாக்கம்

[தொகு]

பேபி புளூ என்பது என்பது வட அமெரிக்காவில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்ட முதல் வயது வந்தோருக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும்.[5][6] 1973 ஆம் ஆண்டு ஒளிபரப்பு அளவீட்டுப் பணியகம் நடத்திய ஒரு கணக்கெடுப்பில், சிட்டி டிவி நிறுவனத்தால் ஒளிபரப்பப்பட்டு 450,000 வீடுகளில் 210,000 வீடுகள் இந்தத் தொடரைப் பார்த்ததாகக் கண்டறியப்பட்டது. தொலைக்காட்சி பார்க்கும் மக்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் 'பேபி ப்ளூ' திரைப்படத்தைப் பார்த்தனர்.[7] இந்தத் தொடரின் பிரபலம், பேபி புளூ நிகழ்ச்சிக்கான விளம்பரக் கட்டணத்தை நிமிடத்திற்கு CAD $ 250 என நிர்ணயிக்க சிட்டிடிவிக்கு உதவியது. இது, அந்நிறுவனம் தனது ஒளிபரப்பு அட்டவணையில் உள்ள மற்ற நிகழ்ச்சிகளுக்கு வசூலித்த கட்டணத்தை விட கிட்டத்தட்ட இருமடங்கு அதிகமாகும்.[8] [9]

1975 ஆம் ஆண்டில், தியேட்டர் பாஸ் முரைல் என்ற நாடக நிறுவனம் ஐ லவ் யூ, பேபி ப்ளூ பாலியல் கலாச்சாரத்தை ஆராய்வதற்காக[10] இந்தத் தொடரைப் பயன்படுத்திய 'ஐ லவ் யூ, பேபி புளூ' என்ற அசல் நாடகத்தை அரங்கேற்றியது.[11] நாடகத்தின் வெற்றியானது, ரியர்சன் அவென்யூவில் அதன் தற்போதைய இடத்தை வாங்க அந்த நிறுவனத்திற்கு உதவியது.[12] அதை நிறுவனம் இன்றுவரை பயன்படுத்தி வருகிறது.[13]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lua error in Module:Citation/CS1 at line 2548: attempt to call field 'is_valid_date' (a nil value).
  2. Summi, Glen (18 May 2000). "Naked truths". Now. Retrieved 7 March 2020.
  3. "Shows In Small Spaces Part 6: Theatre Passe Muraille's Back Space". Citytv. 23 December 2009. Retrieved 7 March 2020.
  4. "Goodby, Baby Blue, says 79". The Toronto Star. 3 May 1975. https://cdn.substack.com/image/fetch/c_limit,f_auto,q_auto:good/https%3A%2F%2Fbucketeer-e05bbc84-baa3-437e-9518-adb32be77984.s3.amazonaws.com%2Fpublic%2Fimages%2F6ced67c9-730c-4d48-9d54-bf85820a5302_541x300.jpeg.
  5. Benson-Allott, Caetlin (2013). Killer Tapes and Shattered Screens: Video Spectatorship From VHS to File Sharing. University of California Press. ISBN 978-0520275126.
  6. "Try Toronto television for the best in 'blue' movies". The Port Arthur News. 21 March 1973. Retrieved 7 March 2020.
  7. Barss 2010, pp. 106.
  8. Bob Lantos on Baby Blue origins (Video clip). Retrieved 7 March 2020.
  9. Znaimer, Moses (21 September 1998). "How I started Robert Lantos in business… and why he owes it all to me". Playback. Retrieved 7 March 2020.
  10. Conroy, Ed (27 September 2009). "A sexual revolution in 64,000 watts". Retrontario. Retrieved 6 March 2020.
  11. Marsh, Calum (27 March 2017). "On CITY-TV's golden era, and how to show Canadians the movies they don't even realize they want to see". National Post. Retrieved 7 March 2020.
  12. Rogers Communications(31 October 2007). "Transaction closed – Rogers takes operating control of Citytv". செய்திக் குறிப்பு.
  13. Kaplan, Ben (22 September 2012). "On the eve of Citytv's 40th birthday, we ask Moses Znaimer and colleagues whether such a station could still be born today". National Post. Retrieved 7 March 2020.
நூலாதாரங்கள்

மேலும் வாசிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_பேபி_புளூ_மூவி&oldid=4605148" இலிருந்து மீள்விக்கப்பட்டது