தி பிக் பேங் தியரி கதாப்பாத்திரங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி பிக் பேங் தியரி குழு

தி பிக் பேங் தியரி (The Big Bang Theory) என்பது அமெரிக்க சூழ்நிலை காமெடி தொலைக்காட்சி தொடராகும், சக் லோரெ மற்றும் பில் பிராடி மூலம் உருவாக்கம் மற்றும் நிர்வாகத் தயாரிப்பு செய்யப்பட்டு, செப்டம்பர் 24, 2007 இல் சி.பி.எஸ் சானலில் ஒளிபரப்பாகத் துவங்கியது.[1] கலிபோர்னியாவின் பசதினாவில் நடப்பதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

லியோனார்டு[தொகு]

ஜானி கலேகி லியோனார்டு ஹோஃப்ஸ்டாடர், பிஎச்.டி.யாக - லியோனார்டு ஒரு இயற்பியல் பரிசோதனை அறிஞன், இவனது ஐக்யூ 173, 24வயதிலேயே தனது பிஎச்.டி.ஐப் பெற்று விட்டான். சகாவும் நண்பனுமான ஷெல்டன் கூப்பர் உடன் குடியிருப்பு வீட்டைப் பகிர்ந்து கொள்கிறான். இந்த தொடரில் ஒழுங்கு வழுவாதவனாக இவன் வருகிறான். அவனுக்கும் அண்டை வீட்டுப்பெண்ணான பென்னிக்கும் இடையிலான ரொமான்ஸைக் கொண்டு எழுத்தாளர்கள் விளையாடி இருக்கிறார்கள், இவர்கள் இருவருக்குமிடையில் தீர்க்கப்படாதிருக்கும் செக்சுவல் பதற்றம் நாடகத்தின் பிரதான உந்துசக்தியாக இருக்கிறது.

ஷெல்டன்[தொகு]

ஜிம் பார்சன்ஸ் ஷெல்டன் கூப்பர், பிஎச்.டி.யாக - கிழக்கு டெக்சாஸை பூர்வீகமாகக் கொண்ட இவன் ஒரு குழந்தை மேதையாக இருக்கிறான், 5ம் வகுப்பு முடித்த உடனேயே தன்னுடைய 11வது வயதிலேயே கல்லூரி படிப்பை துவங்கி விடுகிறான். ஒரு இயற்பியல் தத்துவ அறிஞராக, ஒரு முதுநிலைப் பட்டம், இரண்டு பிஎச்.டி.க்கள் கொண்டிருக்கும் இவன், ஐக்யூ 187 கொண்டிருக்கிறான். வழக்கான வேலைகளை மிகச் சரியாக நேரத்திற்கு செய்யும் வழக்கத்தை இவன் கொண்டிருக்கிறான்; சிரிப்பு, அவல நகைச்சுவை, கிண்டல் எதுவும் தெரியாது, பணிவு என்பது முழுமையாய்க் கிடையாது. இந்த குணாதிசயங்கள் தான் இந்த பாத்திரத்தின் நகைச்சுவைக்கு பிரதான ஆதாரங்களாக இருப்பதோடு ஏராளமான அத்தியாயங்களின் மையமாகவும் வருகிறது. ஷெல்டன் லியோனார்டு ஹோஃப்ஸ்டாடர் உடன் ஒரு குடியிருப்பு வீட்டை பகிர்ந்து கொண்டிருக்கிறான். நாள் முடிவில் ஷெல்டன் தினந்தோறும் வீட்டுக்கு குழந்தைகளாய் இருக்கும் தனது கற்பனை நண்பர்களை அனுப்புவான் என்கிறாள் அவனது இரட்டைப் பிறப்பு சகோதரி. ஷெல்டனின் பதில்: "அவர்கள் நண்பர்கள் இல்லை, கற்பனை சகாக்கள்".[2]

பென்னி[தொகு]

கலே கியூகோ பென்னியாக - ஷெல்டன் மற்றும் லியோனார்டின் நண்பியாக இருக்கும் இவள், அவர்கள் வசிப்பிடத்திற்கு குறுக்கு எதிராய் வசிக்கிறாள். உள்ளூர் சீஸ்கேக் ஆலையில் வெயிட்ரஸ் ஆக வேலை செய்யும் இவள் நடிகையாகவும் ஆசை கொண்டிருக்கிறாள். இறுதிப் பெயர் வெளியிடப்படாத ஒரே பாத்திரம் இவளுடையது தான். நெப்ராஸ்கா, ஒமஹாவின் ஒரு பண்ணை ஒன்றில் வளர்க்கப்பட்ட இவள் தனக்கு அருகில் வசிக்கும் பழகத்தெரியாத நபர்களின் ஆர்வத்திற்குரிய விஷயங்களில் அநேகத்தை அறிந்து கொள்ளவும் அவசியமில்லாதவளாக இருக்கிறாள், இதில் இருந்து நகைச்சுவை தோண்டப்படுகிறது. அவளுக்கு ஷெல்டனுடன் ஒரு சண்டையிடும் நட்பும் இருக்கிறது, நகைச்சுவை மூட்டும் வகையில் இந்த இரண்டு பாத்திரங்களும் அடிக்கடி வெறுமனே ஒருவர்மீது ஒருவர் முட்டிக் கொள்கிறார்கள்.

ஹோவார்டு[தொகு]

சைமன் ஹெல்பர்க் ஹோவார்டு வோலோவிட்ஸ், பொறியியலில் முதுகலைப்பட்டடம்.[3] - ஒரு பொறியியலாளராக வேலை செய்யும் இவன் தனது தாயாருடன் வசிக்கிறான். இவர்கள் யூதர்கள். ஷெல்டன், லியோனார்டு, மற்றும் ராஜ் போலல்லாமல், ஹோவார்டு பிஎச்.டி. கொண்டிருக்கவில்லை. எம்ஐடியில் பொறியியல் முதுகலைப் பட்டத்தை தான் பெற்றிருப்பதை சுட்டிக் காட்டி இதனை நியாயப்படுத்துகிறான் அவன். பெண்களைக் கவருகிற மாதிரி பேசும் இவன் தன்னை ஒரு பெண்கள் விரும்பும் மனிதனாக கருதிக் கொள்கிறான், பென்னியிடம் இருந்து பொருத்தமான கவரப்பட்ட மறுமொழிகள் எதனையும் இவனால் பெற முடியவில்லை; ஆனாலும் மற்ற பெண்களிடையே இவன் ஓரளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறான்.

ராஜேஷ்[தொகு]

குணால் நாயர் ராஜேஷ் கூத்ராப்பாலி, பி.எச்.டி - இந்தியாவின் புது டெல்லியை பூர்விகமாகக் கொண்டு வரும் ராஜேஷ் கலிபோர்னியா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஒரு துகள் வான்கோளவியல் அறிஞராக வேலை செய்கிறான். பெண்களுக்கு முன்னால் அவன் பேசுவதே ஏறக்குறைய கேட்காது என்கிற அளவுக்கு கூச்ச சுபாவமுடையவன்; நிகழ்ச்சியின் காட்சிகள் பெரும்பாலும் பென்னி இருப்பதாகத் தான் இருக்கும் என்பதால், இவனது உரையாடல் பற்றாக்குறையானது பல சமயங்களில் அங்கிருக்கும் மற்ற பாத்திரங்களால் இவன் இருட்டடிப்பு செய்யப்படும்படி ஆகி விடுகிறது. மதுவும் பரிசோதனை மருந்துகளும் தான் அவனது நீடித்த கூச்ச உணர்வுக்கு தற்காலிக தீர்வுகளாக இருக்கின்றன. ஆனாலும், ஒரு சந்தர்ப்பத்தில் பென்னியிடம் இவை எவற்றின் உதவியுமின்றி அவன் மன்னிப்பு கேட்கும் உரையாடலை நிகழ்த்தி விடுகிறான். டாக்டர்.வி.எம்.கூத்ராப்பாலி மற்றும் அவரது திருமதி என்று அறிமுகப்படுத்தப்படும் அவனது பெற்றோர் வெப்கேமரா வழியாக காட்டப்படுகின்றனர்; அவனது தந்தை ஒரு மகளிர் மருத்துவராக இருக்கிறார், மற்றும் ஒரு பென்ட்லி ஓட்டிக் கொண்டிருக்கிறார், இந்தியாவில் தான் ஒரு வறுமைச் சூழலில் வளர்க்கப்பட்டதாக கூறிக் கொள்ளும் போதெல்லாம் அவனுக்கு எடுத்துக் காட்டப்படும் உண்மைகள் இவை.

ஏமி ஃபாரா ஃப்வுலர்[தொகு]

மாயின் பியாலிக் டாக்டர்.ஏமி ஃபாரா ஃப்வுலராக சீசன் 4-இன் இறுதியில் இருந்து நடிக்கிறார்.

லெஸ்லி விங்கிள்[தொகு]

சாரா கில்பர்ட் லெஸ்லி விங்கிள், பிஎச்.டியாக (சீசன் 1 இல் இருந்து இடம்பிடித்து வருகிறார்)[4][5] - இவர் ஒரு இயற்பியல் பரிசோதனை அறிஞராக பணிபுரிகிறாள், நிகழ்ச்சியில் அவ்வப்போது ஹோவார்டு மற்றும் லியோனார்டு இருவருடனும் உறங்குகிறாள். அவளுக்கு ஷெல்டனுடன் ஒத்துப் போவதில்லை, அவனை அடிக்கடி கேலி செய்கிறாள். இரண்டாவது சீசன் சமயத்தில் இந்த பாத்திரம் முக்கிய பாத்திரமாக மாற்றப்பட்டது, ஆனால் அந்த பாத்திரத்திற்கு ஒவ்வொரு அத்தியாயத்திலும்[4] தரமான காட்சிகளை உருவாக்க முடியவில்லை என்பதை கதாசிரியர்கள் உணர்ந்ததையடுத்து அந்த பாத்திரம் மீண்டும் பின்னுக்கு தள்ளப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. தி பிக் பேங் தியரி நடிப்பு & விவரம் — TVGuide.com . பெறப்பட்டது பிப்ரவரி 14, 2009.
  2. "The Pork Chop Indeterminacy". The Big Bang Theory. 2008-05-05. No. 15, season 1. 4:06 minutes in.
  3. "The Jerusalem Duality". The Big Bang Theory. 2001-04-14. No. 12, season 1.
  4. 4.0 4.1 "'Big Bang Theory' scoop: Sara Gilbert taken off contract | The Big Bang Theory | Ausiello Files | EW.com". Ausiellofiles.ew.com. January 23, 2009. http://ausiellofiles.ew.com/2009/01/big-bang-theory.html. பார்த்த நாள்: 2009-05-02. 
  5. "Sara Gilbert". Imdb.com. http://www.imdb.com/name/nm0004960/. பார்த்த நாள்: 2009-05-02.