உள்ளடக்கத்துக்குச் செல்

தி ட்ரூத் பெனித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி ட்ரூத் பெனித்
இயக்கம்Lee Kyoung-mi
தயாரிப்புKim Yun-ho
Lee Mi-young
கதைLee Kyoung-mi
பார்க் சான்-வூக்
Jeong Seo-kyeong
இசைJang Young-gyu
நடிப்பு
ஒளிப்பதிவுJu Sung-lim
படத்தொகுப்புPark Gok-ji
கலையகம்Film Train
விநியோகம்CJ Entertainment
வெளியீடுசூன் 23, 2016 (2016-06-23)
ஓட்டம்102 திமிடங்கள்
நாடுதென்கொரியா
மொழிகொரிய மொழி
மொத்த வருவாய்ஐஅ$1.9 million[1]

தி ட்ரூத் பெனித் (The Truth Beneath)என்ற கொரிய மொழித் திரைப்படம், தென்கொரியாவில் நடந்த உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு, 2016 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தினை, லி யோங்-மி (Lee Kyoung-mi) என்ற பெண் இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும் எடுத்துள்ளார். இத்திரைப்படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் சொன் யி-ஜின் என்ற தென்கொரிய நடிகையும், கிம்-யோ-யூக்(Kim Joo-hyuk) என்ற தென்கொரிய நடிகனும் நடித்துள்ளனர்.[2][3]

கதைக்கரு

[தொகு]

இது தென்கொரியாவின் தேர்தலில் காலத்தில், தேர்தலில் நிற்போரிடையே நடப்பவைகளைப் பரபரப்பாகவும், குற்ற நிகழ்வாகவும் காட்டும் திரைப்படமாகும். ஒரு குடும்பத் தலைவர் தேர்தலில் நிற்கிறார். அவருக்கு உதவியாக பிறருடன் இணைந்து, அவரது மனைவியும் தேர்தல் பரப்புரைகளில் தீவிரமாக ஈடுபடுகிறாள். பெற்றோரின் இச்சூழ்நிலையால், அவர்களின் மகளா பள்ளிச்சிறுமிக்கு, தனிமை அழுத்தம் ஏற்படுகிறது. எனவே, தன் அம்மாவிடம் கூறிவிட்டு, அச்சிறுமி தோழி வீட்டுக்குச் செல்கிறாள். அப்படிச் செல்லும் போது, அம்மாவிடம் அத்தோழியின் தொலைப்பேசி எண்ணை தந்து விட்டு, பாட்டு பாடிக் கொண்டே வெளியேறுகிறாள். தேர்தலில் தன் கணவனுக்கு எதிராக நிற்கும் மற்றொரு போட்டியாளரை, பரப்புரைகளுக்கு இடையில் தற்செயலாகச் சந்திக்கிறாள். அப்பொழுது அப்போட்டியாளர் ஒரு பாடலை விசில் அடித்துக் கொண்டு, அத்தாயைக் கடந்து செல்கிறான். இரவு நீண்ட நேரத்திற்கு பிறகு, வீடு திரும்பும் தாய், தன் பெண் குழந்தை வீட்டிற்க்கு திரும்பாததை அறிந்து, தன் மகள் கொடுத்த தொலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்கிறாள். மறுமுனையில் தன் மகள் இல்லாததை உணர்ந்த தாய், மகளின் பிற தோழிகளுடன் தொடர்பு கொள்கிறாள். அத்தோழிகள் அனைவரும் ஒரே இடத்தில் இருந்தும், தன் மகள் அந்த இடத்தில் இல்லாததால், தாய் பதட்டம் கொள்கிறாள்.

இதனால் கணவனின் தேர்தல் பணியை விட்டு, தன் குழந்தையைத் தீவிரமாக தேடுகிறாள். காவல் நிலையத்தில் இது குறித்து கூறியதால், பல்வேறு கோணங்களில் காவலரும் தேடுகின்றனர். தன் பெண் குழந்தை படிக்கும் பள்ளித்தோழிகளிடமும் வினவுகிறாள். தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் கணவன், மனைவியிடமும், கூட்டங்களிலும், எதிர் கட்சியினர் செய்த சூழ்ச்சியால், தன் பெண் குழந்தை காணவில்லை என்றுரைக்கிறார். தாய் தெருவோர சாமியார்களிடம், குறி கேட்டு சடங்கு செய்கிறாள். இச்சூழ்நிலையில், உடன்படிக்கும் பள்ளிச்சிறுமி ஒரு திறன்பேசியை பலவித சிரமங்களுக்குப் பிறகு, திறந்து பார்த்து அதிர்ச்சியுறுகிறாள். ஏனெனில், இறந்து கிடக்கும் நிழற்படம் யாரெனில், அது தேடப்படும் சிறுமி. இதே நேரத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில், இறந்து கிடந்த தேடப்படும் சிறுமியின் உடலை கண்டெடுக்கின்றனர். பல்வேறு சிந்தனைகளில் இருக்கும் அத்தாயிற்க்கு, தன் பெண் கடைசியாகப் பாடிச் சென்ற பாடல் நினைவு வருகிறது. அப்பாடலை கேட்டது போல இருக்கவே, நன்கு சிந்திக்கிறாள். அப்பாடலை விசில் ஒலியில் தன் கணவனுக்கு எதிராக நிற்கும் வேட்பாளர் பாடிய பாடல் என உணர்கிறாள். தன் கணவர் சொன்னபடி, எதிர்தரப்பினர் தன் குழந்தையை கட்டத்தியிருப்பார்களோ என எண்ணுகிறாள். காவல் துறையினர், உடன் படித்த சிறுமியை ஐயம் கொள்கின்றனர். இப்படி பல்வேறு ஐயங்களால், யார் அச்சிறுமியை கொன்றனர், என்பது குழப்பமாக உள்ளது. இதுபோல பல விறுவிறுப்பு காட்சிகளுக்குப் பின்னர், இறந்து போன சிறுமியின் தந்தை தேர்தலில் வெற்றிப் பெறுகிறார். தேடப்படும் சிறுமியின் ஆசிரியைக்கும், தன் கணவனுக்கும் உள்ள கள்ளத் தொடர்பை, அறிந்து கணவனை வெறுக்கிறாள். மேலும், தன் பெண் குழந்தையை, தன் கணவனே அறியாமல், கொல்லும் சூழ்நிலை எப்படி ஏற்பட்டதை உணர்கிறாள். இறுதியில் இறந்து போன சிறுமியின் தோழியை, காவலர் கைது செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது. இருப்பினும், அச்சிறுமியையே, தன் இறந்து போன குழந்தையாக எண்ணி , தாய் அரவணக்கிறாள்.

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bimileun Eopda (2016) - Financial Information". the-numbers.com. Retrieved 2017-02-17.
  2. "[Herald Review] Jarring mixmatch of arthouse and thriller". kpopherald.koreaherald.com. Retrieved 2017-02-17.
  3. "'The Truth Beneath': Busan Review | Reviews | Screen". screendaily.com. Retrieved 2017-02-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_ட்ரூத்_பெனித்&oldid=4223965" இலிருந்து மீள்விக்கப்பட்டது