தி சைலன்சு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தி சைலன்ஸ் (The Silence)
இயக்குனர்முஹ்சின் மக்மல்பஃப்
தயாரிப்பாளர்மாரின் கார்மிட்சு
கதைமுஹ்சின் மக்மல்பஃப்
நடிப்புதமினே நோர்மோடோவா
ஒளிப்பதிவுஇப்ராகிம் காஃபோரி
படத்தொகுப்புமுஹ்சின் மக்மல்பஃப்
வெளியீடு1998
கால நீளம்76 நிமிடங்கள்
நாடுஈரான்
தஜிகிஸ்தான்
பிரான்சு
மொழிபாரசீக மொழி

தி சைலன்ஸ் (The Silence) என்பது ஈரானியத் திரைப்படம் ஆகும். ஈரானியரான முஹ்சின் மக்மல்பஃப் இயக்கி 1998இல் வெளியான திரைப்படம் இது. இத்திரைப்படத்தின் கதை தஜகிஸ்தானில் நடப்பதாகக் காட்டப்பட்டிருக்கும்.

ஒரு பார்வையற்ற சிறுவன் தனது குடும்பத்திற்காகச் சம்பாதிக்கிறான். ஆனால் சுற்றுப்புறங்களில் அவன் கேட்கும் இனிய குரல்கள், இனிய ஒலிகள் மற்றும் இசையால் கவரப்படுகிறான். அவனால் அவனால் சரியாக வேலை செய்ய முடியவில்லை. இதனால் அவன் சந்திக்கும் பிரச்சனைகளை இத்திரைப்படம் பேசுகிறது.

கதை[தொகு]

குர்ஷித் தஜ்கிஸ்தானில் ஆற்றங்கரையிலிருக்கும் ஒரு வீட்டில் தன் அம்மாவுடன் வசிக்கிறான். வீட்டின் உரிமையாளர் ஒவ்வொரு நாளும் வந்து வீட்டு வாடகையைக் கேட்கிறார். வாடகை கொடுக்கவில்லையெனில் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என எச்சரிக்கிறார் அவர். கண் தெரியாக குர்ஷித்திற்கு இசைக்கருவி கம்பிகளின் ஸ்வரத்தை சரி செய்யும் (tuning musical instruments) அபாரத் திறமை இருக்கிறது. இசைக் கருவிகள் (தம்புரா) செய்யும் ஒரு பட்டறையில் குர்ஷித்தும் அவனது தோழி நதீராவும் வேலை பார்க்கின்றனர். குர்ஷித் இசையின் ஸ்வரங்களையே எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறான். எப்பொழுதெல்லாம் மிகச் சிறந்த இசைக் கலைஞர்களின் பாடலையோ அல்லது இசைக் கருவிகளின் மீட்டலையோ கேட்க நேர்கின்றதோ அப்போதெல்லாம் அதனால் கவனம் சிதளி அவர்களையே தொடர்ந்து செல்கிறான். பின்னர் பாதை தவறிவிடுவதால் அடிக்கடி அவனால் குறித்த நேரத்திற்குள் வேலைக்குச் செல்ல இயலவில்லை. இசையின் மீதான ஆர்வத்துக்கும் வாழ்வின் போராட்டத்திற்கும் இடையே குர்ஷித் அல்லாடுவதையே இத்திரைபடம் காட்டுகிறது.

இஸ்லாத்தில் இசை தடுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஆனாலும் ஈரான், தஜகிஸ்தான் போன்ற நாடுகளில் வாழும் சூஃபி முஸ்லிம்கள் இசையுடன் பெரிதும் தொடர்பு கொண்டவர்களாக இருப்பதை இப்படம் மையமாகக் கொண்டு நகர்கிறது.

குறியீடுகள்[தொகு]

இத்திரைப்படம் சூஃபியிசம் குறியீடுகளால் நிரம்பியது. பயன்படுத்தப்பட்ட இசை, படத்தில் வரும் காட்சிகள் என ஒவ்வொன்றும் குறியீடுகளால் ஆனது. உடைந்த கண்ணாடித் துண்டு, ஆறு, இறுதிக் காட்சியில் குர்ஷித்தின் உடலில் மேலே இருந்து விழும் வெளிச்சம் என சூஃபியிசக் குறியீடுகள் படம் எங்கும் இருக்கின்றன.

இசை[தொகு]

இப்படத்தில் இசையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இறுதிக் காட்சியில் பீத்தோவனின் சிம்பொனி 5 இசை பயன்படுத்தப்பட்டிருக்கும்.

நடிகர்கள்[தொகு]

  • குர்ஷித்தாக - தமினே நோர்மோடோவா (Tahmineh Normatova)
  • குர்ஷித்தின் தோழி நதீராவாக - நதீரா அப்டிலாயேவா (Nadereh Abdelahyeva)
  • குர்ஷித்தின் அம்மாவாக - கோப்பிய் சியாடோலாகேவா (Goibibi Ziadolahyeva)

வெளி இணைப்புகள்[தொகு]