உள்ளடக்கத்துக்குச் செல்

தி கிரேட் காளீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
The Great Khali
Ring பெயர்(கள்)Giant Singh[1]
The Great Khali
Dalip Singh[2]
உயரம்7 அடி 1 அங் (2.16 m) [3]
அறிவிப்பு உயரம்7 அடி 3 அங் (2.21 m) [4]
அறிவிப்பு எடை420 lb (190 kg)[4]
பிறப்புஆகத்து 27, 1972 (1972-08-27) (அகவை 52)[1][5]
Dhirana, Himachal Pradesh, India[5]
வசிப்புAtlanta, Georgia, அமெரிக்க ஐக்கிய நாடு[6]
அறிவித்ததுIndia
பயிற்சியாளர்APW Boot Camp[1]
அறிமுகம்October 7, 2000[1][7]

தலீப் சிங் ராணா (பிறப்பு: 27, ஆகத்து, 1972) தி க்ரேட் காளீ என்ற புனைப்பெயருடன் திகழும் இவர் ஒரு இந்திய வம்சாவளி அமெரிக்கர்,[8] ஓய்வுபெற்ற தொழில்முறை மல்யுத்த வீரரும், நடிகரும் ஆவார். இவர் டபிள்பூ.டபில்யூ.இ- இல் மற்போரில் ஈடுப்பட்டதற்காக மிகவும் பிரபலமானவர். வரலாற்றில் முதல் இந்திய வம்சாவளி உலக மிகுகன வாகையாளர் போட்டியில் கலந்துகொண்டு பெயர் பெற்றவர் ஆவார்.

இவர் 2000 ஆம் ஆண்டில் தொழில்முறை மல்யுத்த வீரராக அறிமுகம் ஆனார். தனது தொழில்முறை மல்யுத்த வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பு, இவர் பஞ்சாப் காவல்துறையின் உதவி துணை ஆய்வாளராக இருந்தார்[9]. இவர் நான்கு ஆலிவுட் படங்களிலும், இரண்டு பாலிவுட் படங்களிலும், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றியுள்ளார். இவர் 2015 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய தொழில்முறை மல்யுத்த ஊக்குவிப்பு நிறுவனமான கான்டினென்டல் மல்யுத்த பொழுதுபோக்கு நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை பயிற்சியாளருமாக உள்ளார்.[10]


துவக்க கால வாழ்க்கை

[தொகு]

ராணா இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள திரைனா என்ற கிராமத்தில் ஜிவாலா ராம், தந்தி தேவி ஆகிய இணயருக்கு, ஒரு ராஜபுத்திர குடும்பத்தில் பிறந்தார்.[11]

ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஏழு உடன்பிறப்புகளில் ஒருவரான ராணா, தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக சிறு சிறு வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தது. இவருக்கு உடல்முனைவீக்க நோய் உள்ளது. இது மற்ற அறிகுறிகளுடன் என்பு-மிகைவளர்ச்சி மற்றும் கன்னம் நீட்டியலை ஏற்படுத்துகிறது. [12] ராணா சிம்லாவில் தனியார் பாதுகாவலராகப் பணியாற்றியபோது, ஒரு காவல் அதிகாரியின் கண்ணில் பட்டார்.[specify] அவர் அண்டை மாநிலமான பஞ்சாபைச் சேர்ந்தவர், அவர் முன்னர் பஞ்சாப் காவல்துறையின் பல ஊழியர்கள் பன்னாட்டு விளையாட்டு வீரர்களாக மாற உதவியவர். 1993 ஆம் ஆண்டு இவரை பஞ்சாப் காவல்துறையில் பணியமர்த்தினார். [13]

தொழில்முறை மல்யுத்த வாழ்க்கை

[தொகு]

ஆல் புரோ ரெஸ்ட்லிங் (2000–2001)

[தொகு]

ஜெயண்ட் சிங் என்ற புனை பெயரில் இவர் முதன்முதலில் அமெரிக்காவில் ஆல் பிரோ ரெஸ்லிங்குக்காக (APW) ஒரு தொழில்முறை மல்யுத்த வீரரானார். 2000 அக்டோபரில் வெஸ்ட் சைட் பிளேயாசுக்கு எதிராக டோனி ஜோன்சுடன் அணிசேர்ந்தபோது முதல் முறையாகத் தோன்றினார். 2001 ஆம் ஆண்டில், ராணா, ஏ.பி.டபிள்யூ. பயிற்சியாளரான பிரையன் ஓங்கின் மரணத்துக்கு ஒருவகையில் காரணமானார். இவர் ஏற்கனவே மூளையதிர்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்த ஓங்கின் மீது மல்யுத்தம் புரிந்தார். ராணா மீது எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை, இருப்பினும், ஓங்கின் மரணத்திற்கு ஏ.மி.டபிள்யூ. பொறுப்பேற்க வேண்டும் என்று உறிதிசெய்யப்பட்டது. மேலும் ஒரு நடுவர் மன்றம் ஓங் குடும்பத்திற்கு $1.3 மில்லியன் வழங்க உத்தரவிட்டது. [14]

உலக சாம்பியன்சிப் மல்யுத்தம் (2001)

[தொகு]

ராணா சான் பிரான்சிஸ்கோவிற்கு வந்தபோது, உலக சாம்பியன்சிப் மல்யுத்தத்த சங்கத்துடன் (டபிள்யூ.சி.டபிள்யூ.) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். மேலும் டபிள்யூ.சி.டபிள்யூ.வின் போட்டியாளரான உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தால் (டபிள்யூ.டபிள்யூ.எப்.) உலக சாம்பியன்சீப் மல்யுத்த நிறுவனம் வாங்கப்படும் வரை எட்டு மாதங்கள் அங்கேயே கழித்தார். [15]

நியூ ஜப்பான் புரோ-மல்யுத்தம் (2001–2002)

[தொகு]

ஜெயண்ட் சிங் என்ற முறையில், இவருக்கு நியூ ஜப்பான் புரோ-மல்யுத்த நிறுவனத்திடமிருந்து (NJPW) டீம் 2000 தலைவரான மசாஹிரோ சோனோ, மற்றொரு மற்போர் வீரரான ஜெயண்ட் சில்வாவுடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். தொழில்முறை மல்யுத்த வரலாற்றில் சராசரியாக 7 அடி 1 அங்குலம் உயரமும், மொத்த எடை 805 பவுண்டுகளும் கொண்ட மிக உயரமான டேக் அணியாக இவர்கள் இருந்தனர். அக்டோபர் மாதத்தில் டோக்கியோ டோமில் சோனோவால் கிளப் 7 என்று பெயரிடப்பட்ட அணியில் முதன்முதலில் சேர்ந்து, ஒரு போட்டியில் ஹிரோஷி தனஹாஷி, கென்சோ சுசுகி, வதரு இனூ, யுடகா யோஷியை தோற்கடித்தது, சில்வா தனஹாஷி மற்றும் இனூவை ஒரே நேரத்தில் வீழ்த்தினார்.[16] 2002 சனவரியில் நடந்த உலக 2002 டேக் டீம் போட்டியில் ஹிரோயோஷி டென்சானிடம் சிங் முதல் தோல்வியைச் சந்தித்தார். [17] இருப்பினும் இவரது மிக முக்கியமான தோல்வி ஆகத்து மாதம் டோக்கியோ நிப்பான் புடோகனிடம் ஏற்பட்டது.

பல்வேறு உயர்வுகள் (2002–2006)

[தொகு]

2002 ஆம் ஆண்டு தொடங்கி, இவர் மெக்சிகன் விளம்பரப் போட்டியான கான்செஜோ முன்டியல் டி லுச்சா லிப்ரேயில் (CMLL) மற்போர் புரிந்தார். 2006 வரை ஜப்பானிய விளம்பரப் போட்டியான ஆல் ஜப்பான் ப்ரோ ரெஸ்லிங்கில் (AJPW) மற்போர் புரிந்தார். 2006 இல் இவர் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்துடன் (WWE) ஒப்பந்தமாகி பல போட்டிகளில் மற்போர் புரிந்தார். [18]

பிரையன் ஓங்கின் மரணம்

[தொகு]

2001, மே, 28 அன்று, சிங்கிடம் மற்போர் புரிந்த பிறகு பிரையன் ஓங் இறந்தார். இந்த நிகழ்வுக்கு முன்பு ஓங் ஒரு மூளையதிர்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் பயிற்சியாளர்கள் அதைக் குறைத்து மதிப்பிட்டு, பயிற்சியைத் தொடரச் செய்தனர். கூடுதலாக, ஆல் புரோ ரெஸ்லிங் (APW) ஊழியர்கள் ஓங்குக்கு பாதுகாப்பு உபகரணங்களையோ அல்லது மேற்பார்வையையோ தரவில்லை என்பது நிரூபிக்கப்பட்டது. மேலும் இந்த இரண்டாவது மூளையதிர்ச்சி இறுதியில் அவருக்கு ஆபத்தானது என்பது நிரூபனமானது. சிங் தற்செயலாக அவரது மரணத்திற்கு காரணமானதால், ஓங்கின் குடும்பத்தினர் ஏ.பி.டபிள்யூ. மீது வழக்குத் தொடர்ந்தனர். பொறுப்பற்ற தன்மையால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு ஏ.பி.டபிள்யூ. பொறுப்பேற்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கபட்டது. மேலும் ஓங் குடும்பத்திற்கு $1.3 மில்லியனுக்கும் கூடுதலான இழப்பீடு வழங்கினர்.

தொலைக்காட்சியிலும் திரைப்படங்களிலும்

[தொகு]

2010 அக்டோபர் முதல் 2011 சனவரியில் நடந்த இறுதிப் போட்டி வரை, காளீ தொலைக்காட்சி உண்மைநிலை நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் தோன்றினார். அதில் இவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காளிக்கு மட்டும் அவருக்கு ஏற்ற படுக்கை வசதி உள்ளிட்ட சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டன. 2011 மார்ச்சில், காளீ என்.பி.சி.யின் அவுட்சோர்ஸ்டு நிகழ்ச்சியின் 18வது பகுதியில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். மேலும் டிஸ்னி சேனல் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பேர் ஆஃப் கிங்ஸில் "ஃபைட் ஸ்கூல்" எபிசோடில் அடோக் என்ற ராக்-ஸ்மாஷிங் ஜாம்பவான் வேடத்தில் தோன்றினார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

ராணா 2002 ஆம் ஆண்டு ஹர்மிந்தர் கவுரை மணந்தார். [19] இவர்களுக்கு 2014 பிப்ரவரியில் ஒரு மகளும், 2023 நவம்பரில் பிறந்த ஒரு மகனும் பிறந்தனர்.

இந்திய ஆன்மீக குருவான அசுதோஷ் மகாராஜின் சீடராக உள்ள, ராணா மிகுந்த ஆன்மீக, சமய நம்பிக்கை கொண்டவராக கூறப்படுகிறார். [6] இவர் நாள்தோறும் தியானம் செய்கிறார். மது, புகையிலை போன்றவற்றைத் தவிர்க்கிறார். முதலில், நித்திய ஆற்றலுடன் தொடர்புடைய இந்து தெய்வமான காளியின் நினைவாக காளி என்ற புனை பெயரை வைத்துக்கொள ராணா விரும்பினார். [20] ஆனால் தனக்கு தி கிரேட் காளி என்ற பெயரை டபிள்யூ.டபிள்யூ.இ. வழங்கியதாக இவர் தனது ஆப் கி அதாலத் நிகழ்ச்சிக்காக இந்தியா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார். [21]

ராணாவின் உடற் பயிற்சி அட்டவணையில் தினமும் காலையிலும் மாலையிலும் இரண்டு மணிநேர எடைத் தூக்கும் உள்ளது. தனக்கு முப்பதுகளின் ஆரம்ப வயது வரை, ராணா பெரும்பாலும் சைவ உணவினாலேயே தனது உடல் எடையைப் பராமரித்து வந்தார். ஆனால் பின்னர் தன் புரதத் தேவைகளைப் நிறைவு செய்வதற்காக கோழி மற்றும் பிற இறைச்சி உணவுகளை உண்டு வருகிறார். [22] [23]

ராணாவின் கபச் சுரப்பியில் ஏற்பட்ட கட்டி காரணமாக அவருக்கு 2012, சூலை, 26, அன்று, மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. [24]

ராணா 2014, பிப்ரவரி, 20 அன்று அமெரிக்க குடியுரிமைப் பெற்றார். [25] [8] இவர் வெளிநாட்டு வாழ் இந்தியருக்கான அட்டையையும் வைத்திருக்கிறார்.

இவர் 2022, பிப்ரவரி, 10 அன்று பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். [26]


மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "The Great Khali". CANOE. Archived from the original on 2012-06-30. Retrieved 2008-04-02.
  2. "Khali at OWOW". Online World of Wrestling.com. Retrieved 2007-09-23.
  3. "Mr. Dalip Singh". Indian Bodybuilding Federation. Archived from the original on 2008-12-20. Retrieved September 4, 2008.
  4. 4.0 4.1 "Bio". WWE. Retrieved 2008-03-28.
  5. 5.0 5.1 "The Great Khali profile". NNDB.com. Retrieved 2007-09-21.
  6. 6.0 6.1 "The Great Khali Speaks On WWE Career, His Diet, Religion, More". Rajah. 2008-03-27. Archived from the original on 2012-07-08. Retrieved 2008-03-28. பிழை காட்டு: Invalid <ref> tag; name "Rajah" defined multiple times with different content
  7. April 7, 2006 Edition of SmackDown!
  8. 8.0 8.1 "The Great Khali becomes a U.S. citizen: photos". WWE (in ஆங்கிலம்). Retrieved 25 March 2020.
  9. Lashand, Ricky. "Officers towered by The Great Khali". Queensland Police. Retrieved 25 April 2025.
  10. Sanju, V.K. "Wither the WWE heroes of 90s kids?". MetroVaartha. Retrieved 25 April 2025.
  11. Paglino, Nick. "The Great Khali Comments on Media Coverage of His February Injury Angle, Differences Between Indian and Western Wrestling Media". Wrestlezone. Retrieved 25 April 2025.
  12. "WWE Star Great Khali's Growth-Inducing Tumor Removed". ABC News. 29 July 2012. https://abcnews.go.com/Health/star-wrestler-great-khali-tumor-removed-caused-size/story?id=16874060. 
  13. "Khali still on Punjab police pay rolls". The Times of India. 30 March 2008. http://timesofindia.indiatimes.com/articleshow/2910680.cms. 
  14. "The Great Khali and Brian Ong". greatkhali.net. Archived from the original on 23 December 2009. Retrieved 17 January 2010.
  15. "The Great Khali: From WWE ring to Jalandhar's akhada". The Pioneer (India).
  16. "Indicate of Next results". Wrestling Supercards and Tournaments. Archived from the original on 18 July 2007. Retrieved 10 February 2008.
  17. "Wrestling World 2002 results". Wrestling Supercards and Tournaments. Archived from the original on 18 July 2007. Retrieved 10 February 2008.
  18. Philip Kreikenbohm. "AJPW 2ND WRESTLE-1". cagematch.net.
  19. "The Great Khali is head over heels in love with his wife, Harminder Kaur, who he has been married to since 2002". 8 March 2016. Retrieved 9 August 2017.
  20. Raymond, Khali (19 April 2019). Khali V. Khali (in ஆங்கிலம்). Amazon Digital Services LLC – Kdp Print Us. pp. 7–8. ISBN 978-1-79859-023-2.
  21. Archived at Ghostarchive and the Wayback Machine: "The Great Khali In Aap Ki Adalat (Part 2) – India TV" – via YouTube.
  22. t2 (25 May 2010). "Gentle Giant". The Telegraph, Calcutta, India. p. 1. Archived from the original on 19 October 2010. Retrieved 8 September 2010.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  23. Balderson, Keelan; Rajat Sharma (22 February 2010). "Great Khali Debeats With Indian Media About How Fake Wrestling Is". wrestlingtruth.com. p. 1. Archived from the original on 24 February 2010. Retrieved 8 September 2010.
  24. "Wrestling star Great Khali has tumor removed at UPMC". TribLIVE. 26 July 2012. Retrieved 7 March 2014.
  25. "The Great Khali becomes a U.S. Citizen".
  26. "Dalip Singh Rana, known as The Great Khali, joins BJP". The Indian Express (in ஆங்கிலம்). 10 February 2022. Retrieved 10 February 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Great Khali
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_கிரேட்_காளீ&oldid=4267127" இலிருந்து மீள்விக்கப்பட்டது