தி இம்பீரியல், புது தில்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தி இம்பீரியல், புது தில்லி
Imperial Hotel, Delhi.jpg
பொதுவான தகவல்கள்
இடம்ஜன்பத், புது தில்லி
ஆரம்பம்1936
உரிமையாளர்Akoi Family
நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை3
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்Blomfield
பிற தகவல்கள்
Number of rooms233
Number of suites44
Number of restaurants6
இணையத் தளம்
The Imperial, Official website


ஜன்பத் என்று தற்போது அழைக்கப்படும் குவின்ஸ்வேயில் 1931 ஆம் ஆண்டு கட்டப்பட்ட விலையுயர்ந்த ஹோட்டல் இம்பிரியல் ஹோட்டல் ஆகும். இது புது டெல்லியிலுள்ள கான்னாட் என்ற இடத்திற்கு மிக அருகிலேயே உள்ளது. இது புது டெல்லியின் மிகப்பெரிய விலையுயர்ந்த ஹோட்டல். [1] தற்போது மிகப்பெரிய காலனி ஆட்சிக்காலத்து பொருட்களையும், கலைப்பொருட்களையும் கொண்ட அருங்காட்சியத்தையும் கலைக்கூடத்தையும் கொண்டுள்ளது.

வரலாறு[தொகு]

இம்பீரியல் ஹோட்டல் நுழைவாயிலில் புறணி பனை மரங்கள்

இந்த ஹோட்டல் 1931 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. விக்டோரியக் கட்டிடக்கலையையும் காலனி காலத்து கலையமைப்பையும் கொண்ட கட்டமைப்பு முறையில் டி.ஜே.பிளோம்ஃபீல்ட் அவர்களின் கருத்துப்படியிலான வடிவில் கட்டப்பட்டது. இவருடன் புது டெல்லியிலுள்ள பிரிட்டிஷ் ராஜைக் கட்டிய எட்வின் லுட்யூன்ஸ் இணைந்து செயல்பட்டார். ஆர்.பி.எஸ். நரைன் சிங்கின் மகனான எஸ்.பி.எஸ். ரஞ்சித் சிங்கினால் இந்த ஹோட்டல் கட்டப்பட்டது. 1911 ஆம் ஆண்டு புது டெல்லியில் நடைபெற்ற முடிசூட்டும் விழாவில் இவருக்கு விருதுகளும் வழங்கப்பட்டன. அதே நேரத்தில்தான் இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவில் இருந்து புது டெல்லியாக மாற்றப்பட்டது. [2]

1996 ஆம் ஆண்டு முதல் 2001 வரை, இந்த ஹோட்டல் அதன் பொது மேலாளராகவும், ஹோட்டலின் துணை ஆளுநராகாவும் பதவி வகித்த ஹர்விந்தர் சேஃகான் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அந்த காலகட்டத்தில் தான் நெதர்லாந்து இளவரசி, ஹாலிவுட் நடிகர்களும் நடிகைகளும், தீரச்செயல் புரிந்தவர்களும் செல்வந்தர்களும் தங்கினர். “ஸ்பைஸ் ரூட்”, “பாட்டியாலா பெக் பார்”, “1911 உணவகத்துடன் இணைக்கப்பட்ட பார்”, “டேனியல்ஸ் டேவர்ன்” மற்றும் “சேன் கிமிங்க்னானோ” முதலான ஆறு உணவகங்களையும், பார்களையும் திறந்தார்.

சிறப்பம்சங்கள்[தொகு]

இந்த ஹோட்டலில் ஒன்பது உணவகங்களில் உணவருந்தும் வசதி உள்ளது. குளத்துடன் கூடிய பார் வசதிகளும் உள்ளன. அறைச்சேவை 24 மணி நேரமும் உள்ளது. சுகாதாரமான ஸ்பா, உடல் சிகிச்சை, மசாஜ் சிகிச்சை அறைகள், அழகு சேவைகள் ஆகியனவும் உள்ளன. இந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல், வணிக மையத்தையும், சிறு கூட்டங்களுக்கான மண்டபங்களையும் வழங்குகிறது.[3]

விருந்தினர் அறைகள்[தொகு]

235 குளிரூட்டப்பட்ட விருந்தினர் அறைகளுடன் மினிபார் வசதிகளையும் இம்பிரியல் ஹோட்டல் கொண்டுள்ளது. கம்பியுடன் கூடிய, கம்பியற்ற அதிவேக இணைய வசதிகள் கட்டணத்திற்கேற்ற முறையில் வழங்கப்படுகின்றன. 32 இஞ்ச் அகல பிளாஸ்மா தொலைக்காட்சி, முக்கிய செயற்கைக்கோள் சேனல்களைக் கொண்டுள்ளது. இத்துடன் காஃபி உருவாக்கும் இயந்திரம், தண்ணீர் போன்றவையும் வழங்கப்படுகின்றன. அறைச்சேவைகள் தினமும் செய்யப்படுகின்றன.[3]

பாரம்பரியம்[தொகு]

பாரம்பரியத்தின் அடிப்படையிலும் மரபு அடிப்படையிலும் ஹோட்டல் இம்பிரியல் புகழ் மிக்கது. “பாட்டியாலா பெக் பார்” எனும் பிரபலமான பார் இவர்களுடையது. இந்தியாவின் தொகுதிப் பங்கீடு பற்றியும், பாகிஸ்தான் அரசை உருவாக்கவும் ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தி, முகமது அலி ஜின்னா மற்றும் மவுண்ட்பேட்டன் பிரபு ஆகியோர் சந்தித்து பேசிய இடம் இது. [1]

இருப்பிடம்[தொகு]

வணிகத்திற்கு நண்பனாக திகழும் இம்பிரியல் ஹோட்டல் மத்திய புது டெல்லியில் அமைந்துள்ளது. இதற்கு மிக அருகில் ஜந்தர் மந்தர், கன்னாட் மற்றும் ஆளுநர் இருப்பிடம் போன்றவை அமைந்துள்ளன. இவற்றுடன் செங்கோட்டையும் ஹூமாயூன் கல்லறையும் அருகிலே உள்ளன.[3]

அடிப்படை வசதிகள்[தொகு]

 • குளிரூட்டும் சாதனம்
 • உணவகம்
 • பார்
 • அறைச் சேவை
 • கம்பில்லா இணையச் சேவை
 • இணைய வசதி
 • வணிக மையம்
 • உடற்பயிற்சி மையம்
 • காஃபி ஷாப்
 • நீச்சல் குளம்

ஹோட்டல் வசதிகள்[தொகு]

 • கதவு திறந்துவிடுபவர்
 • பெண் பயணிகளுக்கான அறை
 • இலவச செய்தித்தாள்
 • இலவச வாகன நிறுத்துமிடம்
 • முடி உலரவைப்பான்
 • வெளிப்புற நீச்சல்குளம்
 • தொலைபேசி சேவை
 • சுமைதூக்குபவர்கள்
 • கட்டணத்துடன் கூடிய வயரில்லா இணையச்சேவை

வணிகச் சேவைகள்[தொகு]

 • கதவு திறந்துவிடுபவர்
 • பெண் பயணிகளுக்கான அறை
 • இலவச செய்தித்தாள்
 • இலவச வாகன நிறுத்துமிடம்
 • முடி உலரவைப்பான்
 • வெளிப்புற நீச்சல்குளம்
 • தொலைபேசி சேவை
 • சுமைதூக்குபவர்கள்
 • கட்டணத்துடன் கூடிய வயரில்லா இணையச்சேவை

மேலும் காண்க[தொகு]

தில்லி யில் உள்ள விடுதிகள் பட்டியல்

குறிப்புகள்[தொகு]

 1. 1.0 1.1 "Famous Hotels: Imperial New Delhi - the making of By Andreas Augustin". 4hoteliers.com. (11 December 2006.).
 2. "The Imperial Asia's Legendary Hotels: The Romance of Travel". by William Warren, Jill Gocher. Tuttle Publishing, 2007. ISBN 0-7946-0174-X. p. 28..
 3. 3.0 3.1 3.2 "தி இம்பீரியல் புது தில்லி". தெளிவாக பயணம் டாட் காம்.