உள்ளடக்கத்துக்குச் செல்

தி ஆர்டர்ஸ் வேர் டு ரேப் யூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
The Orders Were to Rape You: Tigresses in the Tamil Eelam Struggle
முதற்பதிப்பு
நூலாசிரியர்மீனா கந்தசாமி
மொழிஆங்கிலம்
வெளியீட்டாளர்நவயானா பப்ளிசிங்
வெளியிடப்பட்ட நாள்
2021 பெப்ரவரி
பக்கங்கள்104

உங்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க உத்தரவு: தமிழ் ஈழப் போராட்டத்தில் பெண் புலிகள் (The Orders Were to Rape You: Tigresses in the Tamil Eelam Struggle ) என்பது ஈழப் போர் முடிந்த பிறகு தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் எதிர்கொண்ட வன்முறை, குறிப்பாக பாலியல் வன்முறை பற்றி மீனா கந்தசாமி எழுதிய நூலாகும். இலங்கை உள்நாட்டுப் போர் முடிந்த பிறகு மலேசியா, இந்தோனேசியா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்ட பெண்கள் இலங்கையில் எதிர்கொண்ட துன்பங்களை இவர் நேரடியாக விவரித்துள்ளார். இயக்கத்துடன் நேரடி தொடர்பு இல்லாத ஒரு விடுதலைப் புலி உறுப்பினரை மணந்த ஒரு பெண்ணின் துன்பங்களை இவர் விவரிக்கிறார், இராணுவ வீரர்களால் கேள்விகளை எதிர்கொண்டது, துன்புறுத்தலுக்கும், சித்திரவதைக்கும் உள்ளானது, 2009 இல் ஈழப் போர் முடிந்த பிறகு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது இராணுவ வீரர்களால் மீண்டும் மீண்டும் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு தற்கொலை செய்து கொள்ள எண்ணியது, ஆனால் தன் குழந்தையின் பொருட்டு தன் மனதை மாற்றிக்கொண்டது பற்றி அவர் பேசுகிறார். மற்றொரு பகுதியில் பெண் போராளிகள் எழுதிய எதிர்ப்புக் கவிதைகளைப் பற்றி எழுதியுள்ளார். [1] [2] [3] [4] [5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Srinivasan. The Hindu. 
  2. "Meena Kandasamy's documentary on Sri Lanka's women Tamil warriors is now her latest book". Niyati Bhat. Scroll. 3 April 2021. Retrieved 16 June 2021.
  3. "Book Review: The Orders Were To Rape You By Dr Meena Kandasamy". Hannah Stephen. Feminism India. 26 March 2021. Retrieved 16 June 2021.
  4. "Surviving War and Victimhood: Women and Tamil Nationalism". Ambika Satkunanathan. The Wire. 28 March 2021. Retrieved 16 June 2021.
  5. ""My writing is informed by personal, collective resistance:" Meena Kandasamy on genocidal violence against Tamils, poetry as resistance". Two Circles. 12 March 2021. Retrieved 16 June 2021.