தி அமேசிங் ஸ்பைடர்-மேன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தி அமேசிங் ஸ்பைடர்-மேன்
Spider-Man, wounded, is covered in a spider web with New York City in the background and as a reflection in his mask. Text at the bottom of the reveals the title, release date, official site of the film, rating and production credits.
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்மார்க் வெப்
தயாரிப்புலாரா ஜிச்கின்
அவி அரத்
மாட் டோல்மச்
திரைக்கதைஜேம்ஸ் வேண்டெர்பில்ட்
நடிப்புஆண்ட்ரூ கார்பீல்ட்
எம்மா ஸ்டோன்
ரைஸ் ஐஃபேன்ஸ்
ஒளிப்பதிவுஜான்
மொழிஆங்கிலம்

தி அமேசிங் ஸ்பைடர்-மேன் (The Amazing Spider-Man) மார்வெல் காமிக்சால் உருவாக்கப்பட்ட ஸ்பைடர் மேன் கதாபாத்திரம் கொண்ட 2012 ஐக்கிய அமெரிக்கா நாட்டு சூப்பர்ஹீரோ திரைப்படம். நாயகன் கதாபாத்திரம் அடிப்படையாக கொண்டது. ஸ்பைடர் - மேன் திரைப்படம் ஒரு திரைப்படத் தொடரின் புதிய தொடக்கமாக இருக்கிறது. இதில் பீட்டர் பார்க்கர் பாத்திரத்தினை ஏற்றிருப்பவர் ஆண்ட்ரூ கார்பீல்ட் . இது பழைய பாகங்களின் தொடர்ச்சியாக இல்லாமல் கதை மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறது. இத் திரைப்படத்திற்கு தமிழில் வசனங்கள் இணைக்கப்பட்டும் வெளியிடப்பட்டது.

கதை சுருக்கம்[தொகு]

ஸ்பைடர் மேனின் அம்மாவும், அப்பாவும் 'ஆஸ்கார்ப்' எனும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். அவர்கள் ஒரு விமான விபத்தில் இறக்க நேரிடுகிறது. அதனால் மாமா, அத்தையுடன் வசித்து வரும் அவர் பள்ளியில் படித்துக்கொண்டு இருக்கிறார்.

வீட்டை ஒரு நாள் சுத்தம் செய்யும்போது தனது தந்தை பயன்படுத்திய பையைப் பார்க்கிறார். அதை தனது அறைக்கு எடுத்து வந்து ஆராய்கிறார். ஒரு புகைப்படமும், ஆஸ்கார்ப் நிறுவனத்தின் முக்கிய கோப்புகளும் கிடைக்கின்றன. அது அவ்வளவும் தனது தந்தையின் கண்டுபிடிப்பு என தெரிய வருகிறது. புகைப்படத்தில் உள்ள தனது தந்தையின் நண்பர் டாக்டர் கர்ட் கான்னர்ஸ், தற்போது ஆஸ்கார்ப் நிறுவனத்தில் வேலை செய்வதை இண்டர்நெட் வழியாக அறிந்து அங்கு சென்றபோது ஒரு சிலந்தி கடித்து விடுகிறது. சிலந்தி கடித்ததால் சுவற்றில் ஏறும் சக்தியும், உடல் வலிமையும் கிடைக்கிறது.

டாக்டருடன் மெதுவாக நட்பை ஏற்படுத்தியபின் அவரது ஆரய்ச்சிக்குப் பயன்படும் ஃபார்முலாவை தன் தந்தையின் பையில் இருந்து எடுத்துத் தருகிறார். வெட்டுப்படும் பல்லியின் உடல் உறுப்பு மீண்டும் வளர்வதைப் போல, அந்த நிறுவனம் பிற உயிரினங்களின் உடல் உறுப்பையும் வளர வைக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறது. இதற்காக நாயகனும், டாக்டரும் எலியின் மீது அந்த ஃபார்முலாவைப் பயன்படுத்தி செய்கிறார்கள். அது வெற்றியும் அடைகிறது.

நிறுவனத்தின் வற்புறுத்தல் காரணமாக டாக்டர் தனது உடம்பில் செலுத்துகிறார். அவருக்கும் கை வளர்கிறது. ஆனால், அந்த மருந்து இவரை ராட்சஸப் பல்லியாக மாற்றுகிறது. அட்டகாசம் செய்கிறார். தன்னால்தான் இந்த பிரச்சினை உருவானது; அதைத் தானே சரி செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் பார்க்கர் செயல்படுகிறார். இதற்கு அவரது காதலியும் உதவுகிறாள். தன் முயற்சியில் பார்க்கர் வெற்றி அடைகிறார்.

நடிகர்கள்[தொகு]

படத்தின் சிறப்பு[தொகு]

  • முந்தைய படங்களில் காட்டப்படாத கோணத்தில் ஸ்பைடர்மேன் காட்டப்படுகிறார்.
  • கிராபிக்ஸ் காட்சிகள் நன்றாக அமைந்துள்ளன.
  • 3டி தொழில் நுட்பம் வேறு எந்தப் படத்திலும் இல்லாத அளவிற்கு சிறப்பாக இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

சான்றாதாரம்[தொகு]

  1. தமிழ் முன்னோட்டம்
  2. தி அமேசிங் ஸ்பைடர் - மேன் முன்னோட்டம்

வெளி இணைப்புகள்[தொகு]