தி. வ. தெய்வசிகாமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தெய்வசிகாமணி என்பவர் தமிழ்க் கவிஞர், எழுத்தாளர், திறனாய்வாளர், மொழிப்பெயர்ப்பாளர் ஆவார்.இவர் பன்மொழி புலமைப் பெற்றவர்.

பிறப்பும் கல்வியும்[தொகு]

இவர் திருவள்ளூர் மாவட்டம் திருப்பாசூர் எனும் ஊரில் வச்சிரவேல் - அரங்கநாயகி ஆகியோர்க்கு மகனாக 1930 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் இளங்கலை வணிகவியல் (பி.காம்) பயின்று அதில் சிறப்பு நிலையில் தேர்ச்சி பெற்றார். பின்னர் முதுகலைத் தமிழ் இலக்கியம் (எம்.ஏ) பயின்றார். தமிழ்நாடு அரசு சட்டத்துறைத் தமிழ்ப்பிரிவில் இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அத்துறையில் இவர் செய்த மொழிபெயர்ப்புகள் பலராலும் பாராட்டப்பட்டுள்ளது.

எழுதிய நூல்கள்[தொகு]

இவர் ஐம்பதுக்கு மேற்பட்ட நூல்களைத் தமிழில் எழுதியுள்ளார். கவிதை நூல்கள் :

  • தெசினியின் கவிதைகள்
  • வைகறைக் கனவுகள்
  • திருமெய்ப் பொருட்பா
  • தலையங்கக் கவிதைகள் - இரு தொகுதிகள்
  • பதினொரு பாட்டியல்
  • தெசினி பாடிய பாரதம்
  • குமுகாயப் பாடல்கள்
  • மொழி- இனப் பாடல்கள்
  • நெஞ்சைத் தொட்டவை- சுட்டவை

இலக்கியத் திறனாய்வு

  • குறளின்பம்
  • குறுந்தொகையின்பம்
  • கலித்தொகையும் முத்தொள்ளாயிரமும்
  • இலக்கியக் காட்சிகள்

சிறுவர் இலக்கியங்கள்

  • நீதிக் கதைத் திரட்டு
  • வாழ்ந்துக் காட்டியவர்கள்
  • படிப்பினை முப்பது
  • கருத்துக் கதைக்கொத்து
  • பாட்டுப் பூங்கா
  • இருபது கதைகள்.

மொழிபெயர்ப்பு பணிகள்[தொகு]

இவர் கார்நாற்பது,களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, நன்னெறி முதலான நீதி நூல்களைத் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.

  • அமெரிக்க மக்களின் பொருளாதாரம்
  • அமெரிக்கக் கூட்டுறவுகள்
  • தத்தாத்திரேய இராமச்சந்திர பேண்ட்ரே

முதலானவற்றையும் மொழிபெயர்த்தார்.

விருதுகள்[தொகு]

  • கவிதைக் காவலர் (1974)
  • பைந்தமிழ்ப் பாட்டு வேந்தர் (1984)
  • கவிதைப் பேரொளி (1992)
  • நற்றமிழ் ஞானப் பாவலர்(1990)
  • தேன்தமிழ்ச் சரபம் (1992)
  • சிறந்த மொழிபெயர்ப்பாளர், யுனெஸ்கோ கூரியர் இதழ் விருது (1993)
  • சிறந்த இதழியலாளர் (2001) முதலான பல விருதுகள் பெற்றவர்.

உசாத்துணை[தொகு]

1) தெசிணி, "நீதிக் கதைத் திரட்டு" - கார்த்திக் பதிப்பகம்- 1999. 2) தெசிணி," இருபது கதைகள்"- அரும்பு பதிப்பகம்-2002 பக்கங்கள்-121. 3) ப.முத்துக்குமாரசுவாமி, " இருபதாம் நூற்றாண்டின் 100 தமிழ்க் கவிஞர்கள்" பழனியப்பா பிரதர்ஸ்-2004.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._வ._தெய்வசிகாமணி&oldid=2716657" இலிருந்து மீள்விக்கப்பட்டது