உள்ளடக்கத்துக்குச் செல்

தி. வை. சதாசிவ பண்டாரத்தார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி. வை. சதாசிவ பண்டாரத்தார்
பிறப்பு(1892-08-15)ஆகத்து 15, 1892
திருப்புறம்பயம், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்
இறப்புபெப்ரவரி 1, 1960(1960-02-01) (அகவை 67)
தொழில்புலவர், எழுத்தாளர்
வகைவரலாறு

தி. வை. சதாசிவ பண்டாரத்தார் (T. V. Sadasiva Pandarathar, 15 ஆகத்து 1892 - 2 சனவரி 1960 சோழர்களின் முழுமையான வரலாற்றை முதன் முதலில் தமிழில் எழுதியவர்.[1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சதாசிவப் பண்டாரத்தார் கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் வைத்தியலிங்கப் பண்டாரத்தாருக்கும், மீனாட்சியம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். 1910 ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், வலம்புரி பாலசுப்பிரமணியப் பிள்ளை ஆகியோரிடம் தமிழ் இலக்கியமும் இலக்கணமும் கற்றுத் தேர்ந்தார். பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் தாலுகா அலுவலகத்திலும், கும்பகோணம் உயர்நிலைப் பள்ளியிலும் சில ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் பாணாதுறை உயர்நிலைப் பள்ளியில் 25 ஆண்டுகள் (1917-1942) தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். பணியில் இருந்த பொது “செந்தமிழ்” என்ற மாத இதழில் இவரது கட்டுரைகள் வெளியாகின. 1930 ஆம் ஆண்டு “முதலாம் குலோத்துங்க சோழன்” என்ற முதல் நூல் வெளியானது. 1942-1953, 1953-60 காலகட்டங்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழாராய்ச்சித் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பல இடங்களுக்கும் சென்று சோழர் வரலாற்றை ஆய்வு செய்து “பிற்கால சோழர் சரித்தரம்” என்னும் பெரு நூலை எழுதினார். இது மூன்று தொகுதிகளாக 1949, 51 மற்றும் 61 ஆம் ஆண்டுகளில் வெளியானது. இரு தமிழ் இலக்கிய வரலாறு நூல்களும், பல தல வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமையாக்கியுள்ளது.[சான்று தேவை][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. குள. சண்முகசுந்தரம் (6 திசம்பர் 2017). "ஆய்வு மாணவர்களிடமிருந்து அந்நியப்படும் சதாசிவ பண்டாரத்தார்". தமிழ் இந்து. பார்க்கப்பட்ட நாள் 6 திசம்பர் 2017.
  2. "தி.வை.சதாசிவ பண்டாரத்தார் 10". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-10-04.

வெளி இணைப்புகள்[தொகு]