தி. வினயச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி. வினயச்சந்திரன்
பிறப்பு(1946-05-13)13 மே 1946
மேற்கு கல்லாடா, கொல்லம், கேரளா, இந்தியா
இறப்பு11 பெப்ரவரி 2013(2013-02-11) (அகவை 66)
திருவனந்தபுரம், கேரளா, இந்தியா
தொழில்கவிஞர், ஆசிரியர்
மொழிமலையாளம்
தேசியம்இந்தியர்

தி. வினயச்சந்திரன் (D. Vinayachandran) ( மே 13, 1946 - பிப்ரவரி 11, 2013) [1] ஒரு இந்திய மலையாளக் கவிஞர் ஆவார். இவர், மலையாள கவிதைகளில் நவீன பாணியிலான உரைநடை கவிஞர்களில் ஒருவராக இருந்தார். கொல்லம் மாவட்டத்தின் மேற்கு கல்லடாவில் பிறந்த இவர், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு கல்லூரிகளில் மலையாள மொழி பேராசிரியராக பணியாற்றியுள்ளார். கல்லடாவிலும் அதைச் சுற்றியுள்ள பள்ளிகளிலும் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். பட்டம்பி அரசு சமஸ்கிருதக் கல்லூரியில் மலையாள இலக்கியத்தில் முதுகலைப் படிப்பை முடித்த இவர், கல்லூரி கல்வி சேவையில் சொற்பொழிவாளராக நுழைந்து கேரளா முழுவதும் உள்ள பல்வேறு அரசு கல்லூரிகளில் பணியாற்றினார். 1991 இல் கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் ஆசிரியப் பணியில் சேர்ந்தார். 2006 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

சுயசரிதை[தொகு]

வினயச்சந்திரன் குழந்தைகளுக்காக பாடும் ஒரு பாடல்

வினயச்சந்திரன் மே 13, 1946 அன்று கொல்லம் மாவட்டத்தில் பதின்ஞரே கல்லடாவில் பிறந்தார். இவர், இயற்பியல் பட்டதாரி, கவிஞர் மற்றும் மலையாள இலக்கியத்தில் முதல் தரவரிசை பெற்று முதுகலை பட்டம் பெற்ற்றுள்ளார். இவர் மலையாள இலக்கியங்களை கற்பிக்கும் ஆசிரியராக, மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு கல்லூரிகளிலும், கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்திலும் பணிபுரிந்தார். இவர் 2004 இல் ஓய்வு பெற்றிருந்தாலும், இவர் வருகை தரும் ஆசிரியராக ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து பணியாற்றினார். [2]

கவிஞராக[தொகு]

வினயச்சந்திரா குழந்தைகளுக்காக பாடும் ஒரு பாடல் வினயச்சந்திரன் தனது சொந்த ஊரான கொல்லத்தின் கடலோர இயற்கை காட்சிகளால் ஈர்க்கப்பட்டு, கவிதை உலகில் நுழைந்தார். மலையாள இலக்கியம், நவீனத்துவத்தின் சகாப்தத்தில் நுழையும் போது அவர் எழுதத் தொடங்கினார். ஆனால் இவரது படைப்புகள் பாரம்பரியம் மற்றும் நவீனத்துவத்தின் இணைவுக்காக, வாசகருக்கு ஆழ்ந்த உணர்ச்சிகளையும், உள் சுயத்தை ஆதிக்கம் செலுத்தும் அனுபவங்களையும் சக்திவாய்ந்த முறையில் தெரிவிப்பதற்கான ஒரு ஊடகமாக விளங்கின. கருப்பொருள்கள் மற்றும் கதை நுட்பங்களைத் தேர்ந்தெடுப்பதில் இவர் நவீன பாதையை கையாண்டாலும், இவரது கவிதைகள் அவற்றின் நாட்டுப்புறத் தொடர்பு மற்றும் இசைத் தரத்திற்கு பெயர் பெற்றவையாக இருந்தன. இயற்கை அவரது கவிதைகளின் மையக் கருப்பொருளாக இருந்தது. காடுகள், ஏரிகள் மற்றும் இயற்கையின் மீது அவருக்கு நீடித்த அன்பு இருந்தது. [3]

குறிப்பிடத்தக்க படைப்புகள்[தொகு]

இவரது நன்கு அறியப்பட்ட படைப்புகளில், நரகம் ஓரு பிரேமகதாயெழுத்துன்னு, வீட்டிலேக்குல வழி, சம்சதா கேரளம் பிஒ", மற்றும் "திசா சூச்சி" போன்றவை இவருக்கு பரந்த அளவில் பாராட்டுதல்களை கொண்டு வந்தது. மேலும், மலையாளத்தில் உரைநடை கவிதையின் ஒரு முன்னோடியாக இவரது நிலையை உறுதிப்படுத்தியது எனலாம். 1992 ஆம் ஆண்டில் கேரள சாகித்ய அகாதமி விருது, சங்கம்புழா விருது, பந்தலம் கேரள வர்மா கவிதா விருது (2008), ஆசான் சமாரக கவிதா புரஸ்காரம் போன்ற பல விருதுகளையும் வினயச்சந்திரன் பெற்றுள்ளார்.

வினயச்சந்திரன் சில மாதங்களாக பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தை அறிந்த இவரது நண்பர்கள், அவரது இல்லத்தில் பலவீனமான நிலையில் கண்டனர். அவர்களிடம், தனது சுவாசக் கோளாறு பற்றியும் அதனால் ஏற்பட்ட உடல் சங்கடங்கள் குறித்தும் பேசினார். [4] [5] [6] இதையடுத்து இவரது நண்பர்களால் இவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வினயச்சந்திரன், பிப்ரவரி 11, 2013 அன்று தனது 66 வயதில் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

விருதுகள்[தொகு]

 • 2006: ஆசான் நினைவு இலக்கிய பரிசு [7]
 • 1992: கேரள சாகித்ய அகாதமி விருது நரகம் ஓரு பிரேமகவிதா எழுத்துன்னு ' [8]
 • மஸ்கட் கேரள கலாச்சார மைய விருது
 • சங்கம்புழா விருது, பண்டலம் கேரளவர்மா விருது

குறிப்புகள்[தொகு]

 1. "Malayalam poet Vinayachandran passes away" பரணிடப்பட்டது 2019-02-01 at the வந்தவழி இயந்திரம். டெக்கன் குரோனிக்கள். Retrieved 4 July 2013.
 2. "Poet D. Vinayachandran condoled". தி இந்து. Retrieved 4 July 2013.
 3. "One with nature in life". தி இந்து. Retrieved 4 July 2013.
 4. "Vinayachandran is no more". தி இந்து. Retrieved 4 July 2013.
 5. "Poet D Vinayachandran passes away". Madhyamam. Retrieved 4 July 2013.
 6. "Poet D Vinayachandran passes away" பரணிடப்பட்டது 2013-02-11 at the வந்தவழி இயந்திரம். Mathrubhumi. Retrieved 4 July 2013.
 7. "Vinayachandran receives Asan award". The Hindu (Chennai, India). 2006-10-15 இம் மூலத்தில் இருந்து 2007-10-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071001002424/http://www.hindu.com/2006/10/15/stories/2006101509980400.htm. 
 8. "Kerala Sahitya Akademi Award winners". Kerala Sahitya Akademi. பார்க்கப்பட்ட நாள் 4 July 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
D. Vinayachandran
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._வினயச்சந்திரன்&oldid=3884574" இலிருந்து மீள்விக்கப்பட்டது